Wednesday, 28 January 2009

இணைய வடிவமைப்பு இலவசம்!

தமக்கென இணைய பக்கம் ஒன்றை உருவாக்கும் பல்வேறு இணையத்தளங்கள் உள்ள நிலையில், சற்று வித்தியாசமான முறையில் யோசித்து இணைய பக்கமொன்றை தமக்கேன வடிவமைத்து கொள்ள வாய்ப்பளித்துள்ளது குகிள் நிறுவனம்.

இணைய பக்க வடிவமைப்பை தாமே மேற்கொள்ள கூடிய அனைத்து வசதிகளை குகிள் வழங்கியுள்ளது.

இதன்படி, அதில் எவ்வாறு டைப் செய்வது மற்றும் படங்களை ஈடுவது உள்ளிட்ட மேலும் பல்வேறான விடயங்கள் இதில் அடங்குகின்றது.

உங்களுக்கு தேவை ஏற்பட்டால் ஏச்டிஎம்எலிலும் பக்கத்தை வடிவமைத்துக் கொள்ள முடியும்.

மேலும், கலண்டர், பிகாசா சைட்சோ, பிரசன்டேசன் மற்றும் இணையத்தள லிங் உட்பட இன்னும் பல சலுகைகள் இதில் அடங்குகின்றன.

இதனை செயற்படுத்த குகிள் தேடும் பொறிக்கு முதலில் செல்ல வேண்டும்.

அங்கே கொடுக்கப்பட்டிருக்கும் நீயூ என மஞ்சள் நிறத்திலான சொற்தொடர்.

அவ்விடத்தில் குகிள் சைட் என ஒரு லிங் இருக்கும். அதனை கிளி;க் செய்து உள்ளே சென்றால், குளிள் ஈமெயில் முகவரி மற்றும் கடவு சொல் ஆகியவற்றை கேட்கும். அதனை டைப் செய்து உள்ளே சென்று எமது பக்கத்தை நாமே வடிவமைக்க முடியும்.

இவ்வாற புதிய திட்டங்களை அறிமுகப்படுத்துவதினாலேயே குகிள் இன்னும் முதலிடத்தில் உள்ளதை யாராலும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது.



Tuesday, 27 January 2009

இண்டர்நெட் எக்ஸ்புளோரர் 8ன் அதிரடி வருகை.


இண்டர்நெட் எக்ஸ்புளோரர் 8 யை மைக்ரோ சோப்ட் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

2009ஆம் ஆண்டின் மைக்ரோ சோப்டின் முதலாவதும் புதியதுமான வெளியீடாக இது அமைந்துள்ளதாக மைக்ரோ சோப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

1995ஆம் ஆண்டு முதன்முறையாக வெளியிடப்பட்ட இண்டர்நெட் எக்ஸ்புளோரர், படி படியாக முன்னேறி 14 வருடங்களில் 8ஆவது பிறவியையும் எடுத்துள்ளது.

1999ஆம் ஆண்டு உலகின் அதிகமானோர் பாவிக்கும் ஒரு இணைய உலாவியாக இது இருந்தது என்றால் மிகையாகது.

1999ஆம் ஆண்டு காலப்பகுதியில் இண்டர்நெட் எக்ஸ்புளோரர் பாவனையாளர்கள் உலகில் 95 சதவீதம் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

2002 மற்றும் 2003ஆம் ஆண்டுகளில் இண்டர்நெட் எக்ஸ்புளோரர் 5 மற்றும் 6யை பாவனையாளர்கள் உபயோகித்து வந்துள்ளதாகவும், எனினும் அன்றைய காலத்தில் அதன் உபயோகம் சற்று குறைந்தே காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கு காரணமாக அமைந்தது, இதற்கு ஒத்த ஏனைய இணைய உலாவிகள் பாவனைக்கு வந்ததே என கூறமுடியும்.
இண்டர்நெட் எக்ஸ்புளோரரிற்கு போட்டியாக வந்ததாக கூறக் கூடிய இணைய உலாவிகள் என்பது மொக்சிலா, பயர்பொக்ஸ் ஆகியவை எனலாம்.

இருப்பினும் மைக்ரோ சோப்ட் தனது வின்டோஸ் இயங்குதளத்தினால் இண்டர்நெட் எக்ஸ்புளோரரை கவிழ விடாது பாதுகாத்து கொண்டது.

எனினும், 2008ஆம் ஆண்டு போட்டியிடில் குதித்த மற்றுமொரு இணைய உலாவியினால் இண்டர்நெட் எக்ஸ்புளோரர் சற்று பின்னடைவை எதிர்நோக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அது தான் குகிள் குரோம்.

குகிள் நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்டு, பல சலுகைகளை உள்ளடக்கப்பட்டு இலவசமாக பாவனையாளர்களுக்கு வழங்கியிருந்தது.

இதன் சிறப்பம்சங்களை கண்ட பாவனையாளர்கள், இண்டர்நெட் எக்ஸ்புளோரரிலிருந்து குரோமிற்கு உடனடியாக மாறியிருந்தனர்.

இதனுடன் போட்டியிடும் நோக்கிலேயே இண்டர்நெட் எக்ஸ்புளோரர் 8 யை மைக்ரோ சோப்ட் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

பார்ப்போம் எப்படி உபயோகமொன்று இண்டர்நெட் எக்ஸ்புளோரர் 8ன்.

மேலதிக தகவல்கள் மற்றும் பதிவிறக்கத்திற்கு:-

http://www.microsoft.com/windows/Internet-explorer/beta/default.aspx

Sunday, 25 January 2009

சிறிய மோதிர வடிவிலான சூரிய கிரகணம் தென்படவுள்ளது.


இம்மாதம் 26ஆம் திகதி அதாவது நாளைய தினம் வானில் சிறிய மோதிர வடிவிலான சூரிய கிரகணமொன்று தென்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


இந்த சூரிய கிரகணம் இந்தியா, அந்தமான்தீவு, நிக்கோபர் தீவுகள், லட்சத்தீவுகள் போன்ற பகுதிகளில்; பார்க்க முடியுமென ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.


தெற்கு அத்திலாந்திக் கடலில் நமீபியாவுக்கு அருகே இலங்கை நேரப்படி 10.27 மணிக்கு இந்தச் சூரிய கிரகணம் ஆரம்பித்து தென்படுமெனவும், தெற்குச் சீனக் கடலில் கம்போடியாவுக்கு தெற்கே மாலை 4.31 மணிக்கு முடிவடையுமெனவும் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையில் பிற்பகல் சுமார் 2.16 முதல் மாலை சுமார் 4.05 வரை சூரிய கிரகணத்தைப் பார்க்க முடியுமென தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை இவ்வருடம் ஜூலை மாதம் 22ஆம் திகதி இந்த நூற்றாண்டின் நீளமான சூரிய கிரகணம் வானில் தோன்றும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Thursday, 22 January 2009

2009ஆம் அண்டுக்கான கார்களின் விலைகள் வெளியிடப்பட்டுள்ளன.

smart_fortwo_2009 விலை $11590 - $16590







mercedes_benz_slk_class_2009 விலை $45950 - $65700









mercedes_benz_sl_class_2009 விலை $98500 - $194700









ercedes_benz_cl_class_2009 விலை $107900 - $151900









mercedes benz c class 2009 விலை $32900 - $56300









ford flex 2009 விலை $28550 - $36810


இயற்கைக்கும் பதில் மனிதனிடம் உள்ளது.


புவி வெப்பமடைவதினால் 21ஆம் நூற்றாண்டு முடிவிற்குள் நிச்சயம் உலக மக்களின் பெருந்தொகையானோர் வறுமைக் கோட்டிற்கு கீழ் தள்ளப்படுவார்கள் என ஆய்வாளர்கள் அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளனர்.

புவி வெப்பமடைவதினால் விவசாய பயிர் செய்கைகளில் பாதிப்பு ஏற்பட்டு, மக்களின் வாழ்க்கைத் தரம் குறைவடைந்து மக்கள் வறுமைக்கு தள்ளப்படுவதாக ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்விலிருந்து தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வெப்ப மண்டல நாடுகள் மற்றும் துணை வெப்ப மண்டல நாடுகளில் 3 பில்லியன் மக்கள் தற்போது வாழ்ந்து வருவதாகவும், இந்த நுற்றாண்டில் இந்த பகுதி மக்களின் தொகை இரட்டிப்பதாகவும் ஆய்வாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

தெற்கு அமெரிக்கா முதல் வடக்கு அர்ஜெண்டினா, தெற்கு பிரேசில், வட இந்தியா முதல் தெற்கு சீனா, தெற்கு ஆவுஸ்திரேலியா மற்றும் ஆபிரிக்க பகுதிகள் அனைத்திலும் இந்த நிலை தோன்றும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

புவி வெப்பமடையும் தாக்கத்தினால் உணவு உற்பத்தி எதிர்மறை விளைவை கொடுக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த ஆய்வாளர்கள் வரலாற்று ரீதியான உணவு பற்றாக்குறையில் 2003ஆம் ஆண்டு பிரான்ஸிலும், 1972ஆம் ஆண்டு உக்ராயினிலும் ஏற்பட்ட உணவு நெருக்கடியை ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, வெப்ப மண்டல நாடுகள் மட்டுமல்லாது, 2003ஆம் ஆண்டு ஜுன் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை ஐரோப்பாவில் ஏற்பட்ட வரலாறு காணாத வெப்ப நிலை உயர்வால் 52000 பேர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த காலத்தில் பிரான்ஸ் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளில் பயிர்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டது.

புவி வெப்பமடைவதற்கு தவிர்க்க முடியாது, காரணம் அது இயற்கை, அதற்காக மாற்று வழிகளை உபயோகிக்க முடியுமென கூறி ஆய்வாளர்கள் அதற்கு பதில் என்ன செய்ய முடியும் என்ற ஆய்வுகளை தற்போது மேற்கொண்டு வருகின்றனர்.

இயற்கைக்கும் பதில் மனிதனிடம் உள்ளது.

Tuesday, 20 January 2009

இலங்கை அணியின் சாதனை நாள் இன்று?


இன்று நடைபெறவுள்ள இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டியில் இலங்கை அணி மூன்றில் ஒன்று என்ற நிலையில் விளையாடுகிறது.

என்ன அந்த மூன்றில் ஒன்று?

இலங்கை அணி வீரர்களுக்கு இன்று மூன்று உலக சாதனைகளை நிலைநாட்ட வாய்ப்புள்ள கிட்டியுள்ளது.

என்ன அந்த உலக சாதனைகள்.............. இலங்கை அணியின் நட்சத்திர சுழல் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் உலகில் அதிகூடிய விக்கட்களை கைப்பற்றிய வீரர் என்ற உலக சாதணையை நிலைநாட்ட இன்னும் 9 விக்கட்கள் மாத்திரமே உள்ளன.

321 ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் பங்குப்பற்றியுள்ள முத்தையா முரளிதரன், இதுவரை 494 விக்கட்களை கைப்பற்றியுள்ளார்.

பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் வசீம்ஹக்ரம் இதுவரை 502 விக்கட்களை கைப்பற்றி உலகில் அதிக கூடிய விக்கட்களை கைப்பற்றியவர்கள் வரிசையில் முன்னிலை வகிக்கிறார்.

மேலும், ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிகூடிய பிடிகளை பெற்றவர் என சாதணையை நிலைநாட்ட, அணி தலைவர் மஹேல ஜயவர்தனவிற்கு இ;ன்னும் ஒரு பிடி மாத்திரமே உள்ளது.

இவர் இதுவரை 191 சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி, 156 பிடிகளை பெற்றுள்ளார்.

இதேவேளை, ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 200ஆவது பிடியை கைப்பற்ற இன்னும் ஒரு பிடி மாத்திரமே உள்ள நிலையில் விக்கட் காப்பாளர் குமார சங்ககார இந்த போட்டியில் பங்குப்பற்றியுள்ளார்.

பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கிடையே கடந்த 9 வருடங்களாக சுற்றுப் பயணங்கள் எதுவும் நடைபெறவில்லை.

இறுதியாக 1999 மற்றும் 2000ஆம் ஆண்டுகளிலேயே சுற்றுப் பயணமொன்று நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

இவ்விரு அணிகளுக்கிடையேயான கிரிக்கெடின் முதலாவது சுற்றுப் பயணம் 1981ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதுடன், அந்த சுற்றுத் தொடரில் 2க்கு 1 என்ற வீதத்தில் பாகிஸ்தான் வெற்றிப் பெற்றது.

இரண்டு நாடுகளுக்குமிடையே 11 சுற்றுப் பயணங்கள் மாத்திரமே நடைபெற்றுள்ள நிலையில், இதில் பாகிஸ்தானுக்கு இலங்கை அணி 5 சுற்றுப் பயணங்களையும், பாகிஸ்தான் இலங்கைக்கு 3 சுற்றுப் பயணங்களை மேற்கொண்டுள்ளது.

மேலும், எஞ்சிய 3 சுற்றுப் பயணங்களும் வேறு நாடுகளில் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இரு நாடுகளுக்கிடையே நடைபெற்ற 11 சுற்றுப் பயணங்களிலும் பாகிஸ்தான் அணி 9 போட்டிகளிலும், இலங்கை அணி 2 போட்டிகளிலுமே வெற்றிப் பெற்றுள்ளது.

பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கிடையே 111 சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றுள்ளன.

இதில் பாகிஸ்தான் அணி 67 போட்டிகளிலும், இலங்கை அணி 40 போட்டிகளிலும் வெற்றிப் பெற்றுள்ளன.

எஞ்சிய 4 போட்டிகளும் வெற்றித் தோல்வி இன்றி நிறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த தொடர் யார் கையில், இலங்கையா, பாகிஸ்தானா?

தொடரில் மூவரும் சாதனை படைப்பார்களா?

பொருத்திருந்தால் சாதனையின் பதில் கிடைக்கும்.

இலங்கை அணி வெற்றிப் பெற எனது வாழ்த்துக்கள்!

Sunday, 18 January 2009

சந்திராயன் 01இன் 100ஆவது நாள் வெற்றியளித்துள்ளது


இந்தியாவினால் வெற்றிகரமாக அனுப்பி வைக்கப்பட்ட சந்திராயன் 01 என்ற விண்கலம் நிலாவுக்கு 100 கிலோமீற்றர் தொலைவில் சுற்றி கொண்டுள்ளதுடன், அதன் 100ஆவது நாளையும் நிறைவு செய்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இந்த 100 நாட்களில் சந்திராயன் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களை பூமிக்கு அனுப்பி சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதுவரை விண்ணிற்கு ஏவப்பட்ட எந்த நாட்டின் விண்கலமும் இது போன்று இவ்வளவு படங்களை எடுத்து அனுப்பியதில்லை என தெரிவித்த இஸ்ரோ, இது விண்வெளி ஆய்வில் புதிய சாதனையாக கருதுவதாகவும் கூறியுள்ளது.

நிலாவை அனைத்து கோணங்களிலும் சந்திராயன் படம் பிடித்து விட்டது சராசரியாக ஒரு நாளைக்கு 535 தடவை சந்திராயன் நிலாவை படம் பிடிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த படங்கள் அனைத்தும் பெங்களுர் அருகே பையலு கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையில் பெறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த படங்கள் அனைத்தும் நிலாவின் மேற்பரப்பை மிக மிக தெளிவாக காட்டுகின்றன. இதன் மூலம் நிலாவில் உள்ள வளங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக இஸ்ரோ மேலும் தெரிவித்துள்ளது.

சந்திராயன் அனுப்பிய படங்களை தங்களுக்கும் கொடுத்து உதவும்படி அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவித்த இஸ்ரோ, சந்திராயன் 2 என்ற விண்கலத்தை 2012ஆம் ஆண்டு நிலவுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளது.

Saturday, 17 January 2009

சீனாவில் பிறக்கவிருக்கும் புதுவருடம்.


உலகிலுள்ள நாடுகளுக்கு 2009ஆம் ஆண்டு பிறந்து சில நாட்கள் கடந்த விட்டதை யாரும் மறுக்க முடியாது!

எனினும், இதுவரை சீனாவில் புதுவருடம் பிறக்கவில்லை என்பது ஒரு சிறப்பம்சமாகும்.

சீனாவின் 2009 என்கிற புதுவருட பிறப்பு எதிர்வரும் 26ஆம் திகதி பிறக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தற்போது சீனாவில் புது வருட பிறப்பை முன்னிட்டு நாடே மிக சுறுசுறுப்பாக செயற்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதில் மிக முக்கிய விடயம் என்னவென்றால், ஒவ்வொரு புதுவருட பிறப்பிற்கும் ஒவ்வொரு மிருகங்களின் பெயர்களை வைப்பது அந்த நாட்டின் தொன்று தொட்ட வழக்கம்.

சீனாவின் சென்ற ஆண்டின் பெயர் என்ன தெரியுமா?

எலி.

இந்த ஆண்டின் பெயர் என்ன தெரியுமா?

எருமை

சீனா நாட்டில் எருமையின் உருவங்கள் அங்காங்கே வைக்கப்பட்டுள்ளதுடன், எருமையின் உருவங்கள் அங்கு விற்பனையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எருமையின் உருவங்கள், படங்கள் உள்ளிட்ட இன்னும் பல வடிவில் எருமையை விளம்பரப்படுத்தும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக சீன ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை. அந்த நாட்டில் புதுவருடத்தை முன்னிட்டு மக்கள் அவர்களுடைய ஊர்களுக்கு செல்ல, ரயில் நிலையங்களில் திரண்டுள்ளனர்.

குறிப்பாக நாளொன்றுக்கு 70 ஆயிரம் பேர் இடமாறும் ரயில் நிலையங்களில் தற்போது சுமார் ஒரு லட்சத்து 80 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் இடமாறுகின்றனர்.

சீனாவில் பிறக்கவிருக்கும் எருமை புதுவருடத்திற்கு எனது வாழ்த்துக்கள்.

பிறக்கவிருக்கும் ஆண்டு சிறந்தவொரு ஆண்டாக இருக்க வேண்டுமெனவும் வாழ்த்துகிறேன்.

Tuesday, 13 January 2009

இந்தியர் வென்ற கோல்டன் குளோப் விருது.


ஹொலிவூட் 'ஸ்வரம் டோக் மில்லியனர்' திரைப்படத்திற்கு இசை அமைத்தமைக்காக அதிகௌரவ விருதான 'கோல்டன் குளோப்' விருதை இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் வென்றெடுத்துள்ளார்.

கோல்டன் குளோப் விருதை வென்ற முதலாவது இந்தியர் என்ற பெருமையை ஏ.ஆர். ரஹ்மான் பெற்றிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

ஸ்லாம் டோக் திரைப்படம் பிரித்தானிய இயக்குனர் டான்னி போய்லேயின் இயக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

கோல்டன் குளோப் விருது வழங்கல் வைபவத்தில் சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குனர், சிறந்த இசையமைப்பாளர், சிறந்த காட்சியமைப்பு உள்ளடங்கலாக நான்கு வெற்றிக் கேடயங்களை சுவீகரித்துக் கொண்டுள்ளது.

கோல்டன் குளோப் விருதானது ஒஸ்கார் விருது தெரிவுகளுக்கான குறிகாட்டியாகக் கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் இத்திரைப்படத்தில் பிரபல பொலிவுட் நடிகர்களான அனில் கபூர், இர்பான் கான் ஆகியோரும் நடித்துள்ளனர். அதேவேளை 'ஸலாம் டோக் மில்லியனர்' திரைப்படம் ஜனவரி 9ஆம் திகதி கலிபோர்னியாவில் நடைபெற்ற கிரிட்டிக்ஸ் சொய்ஸ் விருது வழங்கும் வைபவத்தில் சிறந்த திரைப்படம், சிறந்த இசையமைப்பாளர் உள்ளடங்கலாக 5 விருதுகளை வென்றெடுத்துள்ளது.

இதேவேளை, கடந்த 6ஆம் திகதி தனது பிறந்தநாளை கொண்டாடிய ஏ.ஆர். ரஹ்மான், தமது 43 ஆவது வயதை பூர்த்தி செய்துள்ளார்.

1966ஆம் ஆண்டு ஜனவரி 6ஆம் திகதி பிறந்த ஏ.ஆர். ரஹ்மான், அவரது இயற்பெயர் ஏ.எஸ். திலிப் குமார் என்பது தெரிவிக்கப்படுகிறது.

1992ஆம் மணிரத்னத்தின் ரோஜா திரைபடத்தின் மூலம் திரை உலகிற்குள் நுழைந்த ஏ.ஆர். ரஹ்மான், இதுவரை 100 மில்லியன் பாடல்களுக்கு மேல் இசையமைத்துள்ளதாகவும், அதில் 200 மில்லியனுக்கு அதிகமாக காசட்களை விற்பனை செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இவர் உலகிலுள்ள பல்வேறு மொழி திரைப்படங்களில் தனது இசையினை கொடுத்துள்ளார்.

இந்தியாவில் மட்டுமின்றி பிற நாடுகளிலும், குறிப்பாக அமெரிக்க மற்றும் சீனா ஆகிய நாடுகளில் உருவாக்கப்பட்ட திரைப்படங்களில் இசையமைத்துள்ளார்.

இதுமட்டுமின்றி, ஏ.ஆர். ரஹ்மான் இந்திய உட்பட இன்னும் பல நாடுகளில் பல நற்பணி செயல்களை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இவரது இசை உலகம் இன்னும் நீண்ட நாட்கள் தொடர வேண்டும் என வாழ்த்துவதோடு, அவரது நற்பணிகளும் சிறப்புற நடைபெற எனது வாழ்த்துக்கள்.






Sunday, 11 January 2009

இலங்கையின் ஊடக சுதந்திரத்தின் சிறப்பு அம்சங்கள்!



இலங்கையின் ஊடக சுதந்திரம் மிக பின்தங்கிய நிலையில் உள்ளதை நான் கூற வேண்டிய அவசியம் இல்லை.

காரணம் உலக நாட்டுக்கே தெரியும், இலங்கையின் தற்போது ஊடக சுதந்திர நிலை,

நாட்டு நிலை மட்டுமல்ல. ஊடக சுதந்திரமும்.

உலகில் உள்ள உண்மையான, மக்களுக்கு தெரியாத மறைந்துள்ள விடயங்களை வெளிகொண்டுவரும் சேவை உட்பட மக்களின் பிரச்சனைகளை எடுத்து கூற கூடிய ஒரே வழி ஊடகமே!

ஆனால், இலங்கையை தவிர ஏனைய உலக நாடுகளில் ஊடக சுதந்திரம் சற்றுயேனும் இருக்கின்றதை மறுக்கவோ? மறைக்கவோ? முடியாது.

ஆனால், இலங்கையில் ஒரு ஊடகவியலாளன் சுதந்திரமாக செய்தி ஒன்றை வெளியிட முடியாத சூழ்நிலையை உள்ளது.

ஒரு செய்தியை வெளியிட 1000 பேரை கேட்க வேண்டும். இது ஊடக சுதந்திரமா?

அவ்வாறு கேட்காது ஒரு செய்தியை வெளியிட்டால், செய்தியை தெரிவித்த ஊடகவியலாளர் நிலை?

இலங்கையில் கடந்த 2 வருடங்களில் மாத்திரம் 40 ஊடக சுதந்திரம் மீறப்பட்ட குற்றச் சாட்டுக்கள் ஐக்கிய நாடுகள் சபையில் பதிவாகியுள்ளது.

40 தெரிந்து, தெரியாமல்...... எண்ணிக்கை கூறவே முடியாது.

2009 ஜனவரி 06 மஹாராஜா நிறுவனம் முழுமையாக தாக்கப்பட்டு பெருமளவு நட்டமடைந்தது.

அந்த சம்பவம் நடைபெற்று இரு நாட்களில் சண்டே லீடர் பத்திரிகையில் பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க சுட்டுக் கொல்லப்பட்டார்.

இது ஒரு வாரத்தில் அப்படி என்றால்.. ஒரு மாதத்தில், ஒரு வருடத்தில், இரு வருடங்களில், 5 வருடங்களில் எண்ணிக்கையை நீங்களே கணக்கெடுத்துக் கொள்ளுங்கள்.

இது தொடர்பான நடவடிக்கைகள் என்ன? நான் தற்போ கூறுகிறேன் இந்த இரு விடயத்திற்கான உண்மையான நிலை கண்டறியபட்டாது. கண்டறியப்பட்டாலும் வெளியிடப்பட்டாது.



இருப்பினும், அமெரிக்காவில் ஊடக சுதந்திரம் 100 சதவீதம் உள்ளதை யாருமே இல்லை என கூற முடியாது.

காரணம். தற்போது வெளியாகியுள்ள கார்டூன்..
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி பராக் ஒபாமாவை வைத்து சித்தரிக்கப்பட்டுள்ள கார்டூன்...

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியின் படத்தை ஒரு வித்தியாசம் கூட இல்லாமல் அப்படியே, அதே பெயரில் கார்டூனாக வெளியிட்டுள்ளது மாவல் திரைபட நிறுவனம்.

புத்தகமாக வெளிவரவுள்ள இந்த கார்டூனை பற்றி தற்போது அனைவருக்குமே தெரியும் அப்படிப்பட்ட புத்தகமொன்று வெளியாகவுள்ளதாக, இருப்பினும் அமெரிக்க அரசு அதனை தடை செய்யவோ, சித்தரித்தவரை சிறைப்பிடிக்கவே இல்லை.

உட்சாகம் வழங்கியுள்ளது.

அது ஊடக சுதந்திரம்.........

நான் ஏன் அப்படிப்பட்ட ஒரு நாட்டில் ஊடகவியலாளராக வில்லை என தற்போது கவலைபடுவதோடு வேதனைப்படுகிறேன்.

Saturday, 10 January 2009

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி கார்டூன் சித்திரத்தில்.


பல கார்டூன்களை தயாரித்த அமெரிக்காவின் மாவல் நிறுவனம், தற்போது ஸ்பயிடமென் கார்டூன் புத்தகம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

இது புத்தகம் அந்த நிறுவத்தின் விடயம் இல்லை, எத்தனையோ கார்டூன்களை வெளியிட்ட இந்த நிறுவனம் இது ஒரு புதிய வகையாக அமைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஸ்பயிடமென் திரைபடத்தை அமெரிக்காவின் மாவல் நிறுவனமே உத்தியோகப் பூர்வமாக தயாரித்தது.

2009ஆம் ஆண்டு ஆரம்பத்தில் புதிய வகையான ஒரு வகையாக புதிய முறையில் தயாரித்து வெளியிட்டுள்ளது.

என்ன புதிய முறை என்று நினைக்கிறீரா?

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள பராக் ஒபாமாவை வைத்தே இந்த கார்டூன் சித்தரிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த கார்டூனின் கரு என்ன தெரியுமா?

ஜனாதிபதி ஒபாமா தான்....

புதிதாக அமெரிக்காவின் ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள பராக் ஒபாமாவின் பதவியை, அவரை போல உருவமுள்ள இன்னுமொருவர் அடைய நினைக்கிறார்.

அதற்காக பல திட்டங்களை அந்த சதிகாரன் செய்கிறான்.

எனினும், பராக் ஒபாமாவை ஸ்பயிடமென் எவ்வாறு பதவியை ஏற்க வைக்கிறார் என்பது தான் அதன் கரு.

இந்த கார்டூன் புத்தகம் நினைத்ததை விட கூடுதலாக விற்பனை ஆகுவதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும், முதலில் அமெரிக்கர்கள் வியந்து போனார்களாம், இருப்பினும் தற்போது அதனை ரசிக்கிறார்களாம்!

ஜனாதிபதியை வைத்து அமெரிக்காவில் விற்பனை நடக்கிறது!

காத்திருப்போம்! புத்தகம் வெளியாகும் வரை!

Thursday, 8 January 2009

90 சதவீதமானோர் தமது பார்வையை இழக்கின்றனர்.


கண்ணாடி அணிவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.

இதன்படி இன்றைய உலகில் பிறந்த குழந்தை முதல் சாகும் கிழவன் வரை அனைவரமே கண்ணாடி அணியும் சூழ்நிலை தோன்றியுள்ளது.

இதற்கு காரணங்கள் பல இருக்கின்றன, உதாரணமாக கூறப் போனால்.

நீண்ட நேர கணணி உபயோகம்.
பரம்பரை நோய்
வயது
உணவு பொருட்களிலுள்ள இரசாயண பதார்த்தம்

என கூறிக் கொண்டே போகலாம்.

இந்த நிலை தற்போது குழந்தைகளுக்கு அதிகரித்து வருவதாக அவுஸ்திரேலிய வைத்தியரொருவரின் ஆய்விலிருந்த தெரியவந்துள்ளது.

இந்த ஆய்வின் படி ஜப்பான், கொரியா, சிங்கப்பூர் மற்றும் சீனா உட்பட ஆசிய நாடுகளில் பாடசாலை கல்வியை நிறைவு செய்தற்கு முன்னர் சுமார் 90 சதவீதமானோர் தமது பார்வையை இழக்கின்றனர்.

முழுமையாக இல்லை, சிறியளவிலேயே என ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இருப்பினும், தற்போது இதற்கு ஒரு தீர்வை குறித்த ஆய்வை நடாத்திய அவுஸ்திரேலிய வைத்தியர் கண்டுபிடித்துள்ளார்.

என்ன தெரியுமா?

நாளொன்றுக்கு 2 அல்லது 3 மணிநேரம் வரை சூரிய வெளிச்சத்தில் நடந்தால் அவர்களது பார்வை வளர்ச்சியடையுமென ஆய்வின் மூலம் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வு கிட்டப் பார்வையுள்ளவர்களுக்கு என தெரிவிக்கப்படுகிறது.

அப்படினா! தூரப் பார்வைக்கு எனது பிரச்சினை தூரப் பார்வை தானே!

இங்கிலாந்து கால்பந்தாட்ட வீரர் டேவிட் பெக்கஹம் - 125 மில்லியன் ஸ்ரெலிங் பவுண்கள்.


இங்கிலாந்து கால்பந்தாட்ட அணியின் முன்னாள் தலைவர் டேவிட் பெக்கம் செல்வந்த வீரர்கள் பட்டியலில் தொடர்ந்தும் முதலிடத்தை வகிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இங்கிலாந்து அணியின் நட்சத்திர கால்பந்தாட்ட வீரர் டேவிட் பெக்கஹமின் சொத்து மதிப்பு 125 மில்லியன் ஸ்ரெலிங் பவுண்கள் எனக் குறிப்பிடப்படுகிறது.

இங்கிலாந்து அணியின் மைக்கல் ஓவன் இரண்டாம் இடத்தையும், வெயன் ரொணி மூன்றாம் இடத்தையும் வகிக்கின்றனர்.

மைக்கல் ஓவனின் சொத்து மதிப்பீடு 40 மில்லியன் ஸ்ரெலிங் பவுண்கள் எனவும், வெயன் ரொணியின் சொத்து மதிப்பீடு 35 மில்லியன் ஸ்ரெலிங் பவுண்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழக உரிமையாளர்களில் அதிக செல்வம் ஈட்டுபவராக மான்செஸ்டர் சிட்டி கழக உரிiயாளர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

மான்செஸ்டர் சிட்டி கழகத்தின் உரிமையாளர் சேக் மன்சூர் பின் அல் நயான் முதலிடத்தை வகிக்கின்றார்.

இதுவரை காலமும் செல்வந்தர் பட்டியலில் முதலிடத்தை வகித்த செல்சா கழகத்தின் ரோமன் அப்ரமோவிச் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

38 வயதான சேக் மன்சூரின் சொத்து மதிப்பீடு சுமார் 15 பில்லியன் ஸ்ரெலிங் பவுண்கள் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

Wednesday, 7 January 2009

காதலுக்கு வயசே இல்லப்பா!


குட்டிக் காதலர்களான 6 வயது சிறுவனும் 7 வயதுடைய சிறுமியும் திருமண பந்தத்தில் இணைய ஆபிரிக்காவுக்கு புறப்பட்டுச் சென்ற பொழுது பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்ட விசித்திர சம்பவம் ஜேர்மனியில் இடம்பெற்றுள்ளது.

மிகா மற்றும் அனா லெனா என்ற இந்த சின்னஞ்சிறு ஜோடி, வெப்பமான ஆபிரிக்க காலநிலையில் திருமணம் செய்து கொள்ளவென நீச்சல் உடைகள், குளிர் கண்ணாடிகள் மிதவை என்பன சகிதம் விமான நிலையத்திற்கு புறப்பட்டுள்ளது.

திருமணத்துக்கு சாட்சியாக அனா லெனாவின் 5 வயது சகோதரியையும் தம்முடன் அழைத்துச் சென்றனர்.

சின்னஞ்சிறு காதலர்களின் குடும்பத்தினர் புதுவருட தினத்தை ஒன்றாக கொண்டாடிய சமயமே மிகா இந்த திருமணத்துக்கான யோசனையை முன்வைத்துள்ளான்.

பெற்றோர் புதுவருட கொண்டாட்டங்களில் மூழ்கியுள்ள வேளை சிறுவர்கள் தமது எதிர்கால வாழ்க்கைக்கான திட்டத்தை தீட்டியுள்ளனர்.

இரவு பெற்றோர் உறங்கச் சென்றதும், தமது திட்டத்தை செயல்படுத்தும் நடவடிக்கையில் சிறுவர்கள் களம் இறங்கினர்.
அவசர அவசரமாக தமக்கு தேவையான வெப்ப கால ஆடைகள் மற்றும் பொருட்களை எடுத்துக் கொண்டு அவர்கள் புறப்பட்டனர்.

ஹனோவரின் புறநகர்ப் பகுதியிலமைந்த தமது வீட்டிலிருந்து ஒரு கிலோமீற்றர் தூரம் வரை சென்ற சிறுவர்கள் அங்கிருந்து மின்சார வண்டியில் ஏறி ஹனோவர் புகையிரத நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

சிறுவர்கள் மூவரும் புகையிரத நிலையத்தில் ஹனோவர் விமான நிலையத்துக்கு செல்லும் புகையிரதத்தின் வருகைக்காக காத்திருந்துள்ளனர்.

இந்நிலையில் அங்கிருந்த காவல் அதிகாரியொருவர் சிறுவர்களின் விசித்திர நடவடிக்கையால் சந்தேகப்பட்டு பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

பணமும் விமானப் பயணச்சீட்டுகளும் இல்லாத நிலையில் வயது வந்தவர்கள் எவரதும் துணையும் இன்றி காணப்பட்ட இந்த சிறுவர்களிடம் பொலிஸார் விசாரணையை மேற்கொண்டதையடுத்து, இந்த அதிர்ச்சி தரும் உண்மை வெளிச்சத்துக்கு வந்தது.

ஆபிரிக்காவின் வெப்பமான காலநிலையில் திருமணம் செய்துகொள்ள விரும்பியே அந்நாட்டுக்கு பயணம் செய்ய முடிவெடுத்ததாக சின்னஞ்சிறு காதலர்கள் தெரிவித்து பொலிஸ் உத்தியோகத்தர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளார்கள்.
(அப்பாடா, எப்படியொரு காதல் முடிஞ்சா நீங்களும் ரைபண்ணுங்க!
ஆனால் மாட்டீகிறாதீங்க!)

Tuesday, 6 January 2009

காங்காருவை உண்ணும் படி உத்தரவு.


பூகோள வெப்பமாதலிலிருந்து உலகத்தைப் பாதுகாக்க கங்காருகளையும் ஒட்டகங்களையும் உண்ணும்படி அமெரிக்க விஞ்ஞானிகள் சிபாரிசு செய்துள்ளனர்.

இதன் காரணமாக கடந்த 600,000 வருடங்களாக கங்காரு இறைச்சியை உண்ணும் அவுஸ்திரேலியர்களுக்கு, இது ஒரு அதிஷ்டமென கூறமுடியும்.

குறித்த இறைச்சிகளை உண்பதற்கு விஞ்ஞான பூர்வமான அங்கீகாரத்தையும் அதிகாரத்தையும் வழங்கியுள்ளதாக அமெரிக்கர்கள் கருதுகின்றனர்.

ஏனைய அவுஸ்திரேலிய பண்ணை விலங்குகளுடன் ஒப்பிடுகையில் கங்காருகள் சுற்றுச்சூழலுக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய மெதேன் வாயுவை வெளியிடுவதாக முன்னணி காலநிலை மாற்ற ஆலோசகர் பேராசிரியர் ரோஸ் கார் நோட், பூகோள வெப்பமாதல் தொடர்பான தனது பிரதான அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஒட்டகங்களானது பாலைவன சூழல், நீர் வளங்கள் மற்றும் அரிய தாவர வகைகள் என்பனவற்றுக்கு அச்சுறுத்தலாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சூழலை பாதுகாக்க அருகிபோகும் உயிரினத்தை பாதுகாக்காது அதனை இல்லாதொழிக்கின்றனர்.

மிகுதியாக ஒன்று கங்காரையாவது உயிருடன் வைத்திருக்கும் படி நான் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
இது எனது வேண்டுக்கோள், காரணம் டைனோசரை தற்போதைய சந்ததியினர் பார்த்ததில்லை,

காங்காரை எதிர்வரும் சந்ததியினர் பார்க்க விடாது செய்து விடாதீர்கள்.

சக்தி மற்றும் சிரச நிறுவனத்தின் மீது தாக்குதல்.


இலங்கையிலுள்ள தனியார் தொலைக்காட்சி மற்றும் வானொலி சேவை நிலையமான மஹாராஜா நிறுவனம் இன்று அதிகாலை இனந்தெரியாதோரினால் தாக்கப்பட்டுள்ளது.

கொழும்பு – பன்னிப்பிட்டிய – தெபானாமவில் அமைந்துள்ள மஹாராஜா நிறுவன தலைமையகத்தின் மீது இன்று அதிகாலை 2 மணியளவில் இனந்தெரியாதோர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

நிறுவனத்திற்குள் புகுந்த இனந்தெரியாத ஆயூததாரிகள் நிறுவனத்திலுள்ள ஊழியர்களை தாக்கிஇ பின்னர் நிறுவன கட்டடம் உட்பட அனைத்து இயந்திரங்களையூம் தாக்கியூள்ளதாக மஹாராஜா நிறுவன தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்போது கைக்குண்டுகளினாலும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நிலையத்திலுள்ள அனைத்து செயற்பாட்டு கருவிகளும் சேதமாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் குறித்த பிரதேசத்தில் புகை மண்டலமாக காணப்பட்டதாக நிறுவன ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

இதன்போது அங்கு கடமையாற்றி ஊழியர்கள் பலருக்கும் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவூம்இ அவர்கள் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாகவூம் தெரிவிக்கப்படுகிறது.

நிறுவனத்திலுள்ள செயற்பாட்டு கருவிகள்இ கட்டடம்இ டவர்கள் உட்பட இன்னும் பல முழுமையாக சோதமாக்கப்பட்டுள்ளதாக மஹாராஜா நிறுவன தகவல்கள் தெரிவிக்கின்றன.

Sunday, 4 January 2009

மைக்ரோசாஃப்ட்டின் ஊழியர்கள் தீடீர் வெளியேற்றம்


சர்வதேச அளவில் முன்னணி நிறுவனமான மைக்ரோசாஃப்ட் நிறுவனம் 15 ஆயிரம் பணியிடங்களை குறைக்க முடிவூ செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உலக கோடீஸ்வரரான பில்கேட்ஸ் தலைமையில் முன்னணி நிறுவனமான மைக்ரோசாஃப்ட் நிறுவனம் செயல்பட்டு வருகிறமை குறிப்பிடத்தக்கது.

இந்நிறுவனத்தில் கடந்த செப்டம்பர் மாத நிலவரப்படி 91 ஆயிரம் பேர் நிரந்தர ஊழியர்களாக பணிபுரிந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் மைக்ரோசாஃப்ட் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் பாதிக்கப்பட்டன.

இதனால் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் 32 ஆண்டுகளில் இல்லாத அளவூக்கு 15 ஆயிரம் ஊழியர்களை தற்போது குறைக்க முடிவூ செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியூள்ளன.

இந்த மாதத்துக்குள் ஆட்குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ள இருப்பதாக அந்நிறுவன ஊடகப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த மாதம் 15 ஆம் திகதிக்குப் பிறகு இந்த முடிவெடுக்கப்படுமென தெரிவிக்கப்படுகிறது.

Friday, 2 January 2009

சீனாவில் டைனோஸர் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.


சீனாவின் கிழக்குப் பகுதியில் என்றுமில்லாதவாறு அதிகளவூ டைனோஸர் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

ஷாங்டொங் மாகாணத்தில் மட்டும் கடந்த மார்ச் மாதம் முதற்கொண்டு 7600 டைனோஸர் எலும்புகளை அகழ்ந்தெடுத்துள்ளதாக சீன விஞ்ஞான அக்கடமியைச் சேர்ந்த இந்த விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இந்த டைனோஸர் எச்சங்களை பயன்படுத்துகிறதுஇ அப்பிராணிகள் எவ்வாறு அழிவடைந்தன என்பது தொடர்பான மர்மத்தைக் கண்டறிய முடியூம் என்பதில் தாம் நம்பிக்கை கொண்டுள்ளதாக அவர்கள் கூறினர்.

மேற்படி டைனோஸர்களின் எச்சங்களைக் கொண்ட பிரதேசமானது தற்போது டைனோஸர் நகரம் என சிறப்பித்தழைக்கப்படுகிறது.

இதில் சுமார் 3000 டைனோஸர் எலும்புகள் ஒரே குழியிலிருந்து அகழ்ந்தெடுக்கப்பட்டதாகவூம் ஏனையவை அருகிலிருந்த இடங்களிலிருந்து பெறப்பட்டதாகவூம் அகழ்வாராய்ச்சிக்கு தலைமை தாங்கிய பேராசிரியர் ஷலோ ஸிகின் கூறினார்

Thursday, 1 January 2009

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..