Sunday, 26 July 2009

இந்த யுத்தத்தில் யாருக்கு வெற்றி!


தமிழ் :- தோன்றிய காலம் இன்று வரை தெரியாது.

ஆங்கிலம்:- இது பல மொழிகளினால் ஒன்றிணைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட மொழி.

இப்படி இருக்கும் நிலையில் தற்போது ஆங்கிலேயர்கள் தமிழர்களை தமது கைவசம் கொண்டு வர முயற்சித்து வருகின்றனர்.

ஏன்? பதில் தெரியுமா?

மிக பழமை வாய்ந்த மொழிகளில் முக்கிய இடத்தில் தமிழ் மொழி உள்ளது. ஆனால் ஆங்கிலம் சற்று பின்தங்கியுள்ளமை யாரும் அறிந்தமையே.

இதனால் பல முறைகளிலும் தமிழ் மொழியை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர ஆங்கிலயர்கள் முயற்சிக்கின்றனர்.

இதில் ஆங்கிலயர்களது முதலாவது நடவடிக்கையாக வெளிநாடுகளிலுள்ள தமிழர்களுக்கு பிரஜாவுரிமை வழங்கி அவர்களை தமது நாட்டிற்குள்ளேயே வைத்து கொள்கின்றனர்.

அவ்வாறு பிரஜாவுரிமை கிடைத்த பின்னர் குறித்த தமிழர்கள் தமது சொந்த நாட்டை மறந்து அங்கேயே வாழ தொடங்கி விடுகின்றனர்.

பின்னர் அவர்களது பிள்ளைகள் தமது கல்வி நடவடிக்கைகளை அந்த நாட்டிலேயே மேற்கொள்கின்றனர்.

அந்த பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகள் முழுமையாக நிறைவடையும் போது, அவன் தமிழ் மொழியை முழுமையாக மறந்து ஆங்கில மொழியை தன்மொழி போல பேச தொடங்கி விடுகிறான்.

உருவாகும் அடுத்த தமிழ் சந்ததி ஆங்கில சந்ததியாக மாறிவிடுகிறது.

இதில் கூடுதலாக இலங்கை தமிழர்களே உள்ளடங்குகின்றனர்.

பழமை வாய்ந்த தமிழ் மொழியை முழுமையாக அழித்து விட தயவு செய்து யாரும் இடமளிக்க வேண்டாம்.

தமிழ் மொழியை அழிக்க சூழ்ச்சிகளை செய்கின்றனர் பலர். அப்போதே புரிந்து கொள்ள முடிகிறது தானே தமிழ் மொழியின் பலத்தை.

ஒரு யுத்தம் முடிடைந்துள்ள நிலையில் தமிழன் அடுத்த யுத்ததில் ஈடுபட்டுள்ளான். இதில் யாருக்கு வெற்றி கிடைக்கும்.

விடை காலத்தின் கையில்!

4 comments:

91001103021 said...

நூரு சதவீதம் உண்மை ,அதே போல் அன்டை மாநிலமும் இதையே செய்கிறது .,

Admin said...

நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. தமிழ் மொழிக்கு எந்த மொழிக்கும் இல்லாத சிறப்பு இருக்கின்றது.. அதனை எல்லோரும் அறிவர். அருமையான இடுகை நன்றிகள் நண்பா...

Muruganandan M.K. said...

உண்மை. எமது மொழியின் பெருமையை எம்மவரே புரிந்து கொள்வில்லை.

சப்ராஸ் அபூ பக்கர் said...

நம் தாய் மொழி தமிழ் என்றுமே மறையாது அருண்....

வாழ்த்துக்கள்,... அருமையான பதிவு....