Sunday, 14 June 2009

எயார் பிரான்ஸ் விமான விபத்தில் எனக்கு சந்தேகம்!


கடந்த முதலாம் திகதி ஆட்லாண்டிக் கடற்பரப்பில் வைத்து விபத்துக்குள்ளான எயார் பிரான்ஸ் விமானம் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன.

அட்லாண்டிக் கடற்பரப்பில் விமானம் விபத்துக்குள்ளாகும் போது காலநிலை மாற்றம் ஏற்பட்டிருந்தது. எனினும் விமானங்கள் மின்னல் தாக்கத்தினால் விபத்துக்குள்ளாகும் ஆபத்து குறைவு என வெளிநாட்டு தகவல்கள் தெரிவித்து வருகின்றனர்.

விமானம் கண்டுப்பிடிக்கப்பட்ட ஆண்டுகளில் இவ்வாறு மின்னல் தாக்கி விமானங்கள் விபத்துக்கு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும், அதன்பின்னர் விமானத்தினை மின்னல் தாக்காதவாறு தயாரிக்க தொடங்கினர்.

எனினும், 1960ஆம் ஆண்டளவில் விமானமொன்று மின்னல் தாக்கி விபத்துக்குள்ளானது. அதன்பின்னர் எவ்வாறு மின்னல் தாக்கியது என்பதை கண்டறிந்து அந்த குறையையும் நிவர்த்தி செய்துள்ளனர் விமானம் தயாரிக்கும் நிறுவனத்தினர்.

எனினும், சுமார் 49 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் ஒரு விமானம் மின்னல் தாக்கி விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஒரு விமானத்தில் மின்னல் தாக்கும் பட்சத்தில், மின்னல் விமானத்தில் கடத்தப்பட்டு விடும். மின்னல் தாக்கினாலும் எவ்வித பாதிப்பும் ஏற்படமாட்டாது.

ஏயார் பிரான்ஸ் விமானமானது சுமார் 4 வருடங்களாக சேவையில் ஈடுபட்டு வருகிறது.

விமானத்தில் மின்னல் தாக்கத்தினால் விபத்துக்குள்ளாகும் வாய்ப்புக்கள் இருப்பின் இந்த விபத்து எப்போதே நிகழ்ந்திருக்க வேண்டும் அல்லவா?

4 வருடங்களாக மின்னல் தாக்கம் ஏற்படவேயில்லையா? பார்ப்போம் கறுப்பு பெட்டி கிடைக்கும் வரையே சந்தேகம். கிடைத்த பின்னர் யாவும் வெளிவரும்.

தற்போது சடலங்கள் உட்பட விமானத்தின் பாகங்கள் அனைத்தும் மீட்கப்பட்ட வண்ணம் உள்ளன.

0 comments: