இறக்குவானை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான வருடாந்த மகோற்சவம் கடந்த 26ஆம் திகதி திடீரென நிறுத்தப்பட்டது.
சுமார் 100 வருடத்திற்கு மேல் இறக்குவானை திருவிழா நடைபெற்று வருகிறது. எனினும், தேர்தல் திருவிழா சுமார் 7 வருடங்களாக மாத்திரமே நடைபெற்று வருகிறது.
இப்படி இருக்க இறக்குவானை ஆலயம் அமைந்திருக்கும் பகுதிக்கு அருகில் காணியொன்று இருந்தது. இந்த காணிக்கும் முன்னாள் கிரிஸ்தவ ஆலயம்.
இந்து ஆலயமும், கிரிஸ்தவ ஆலயமும் சுமார் 100 வருடங்களுக்கு முன்னர் அமைக்கப்பட்டது. இவ்விரண்டு ஆலயங்களுமே அருகில் இருக்கின்றன.
இப்படி இருக்கவே குறித்த பகுதியிலுள்ள காணியில் பௌத்தர்கள் கடந்த 4 வருடங்களுக்கு முன்னர் புத்தர் சிலையொன்றை கொண்டு வந்து வைத்தனர்.
அந்த வருடத்தில் ஆரம்பித்தது பிரச்சினை. அப்போதும் கூறி வந்தனர், இந்து மற்றும் கிரிஸ்தவ ஆலயங்களில் மணி சத்தம் கேட்கிறது. எம்மால் வழிபட முடியவில்லை. என்ற கருத்துக்களை முன்வைத்தனர்.
எனினும், இறக்குவானையிலுள்ள பல பௌத்தர்கள், இந்து மற்றும் கிரிஸ்தவ ஆலயங்கள் மிக பழமை வாய்ந்தவை, அவர்களுடன் பிரச்சினை தேவையில்லை என கூறிய அங்கிருந்து புத்தர் சிலையை எடுக்குமாறு வற்புறுத்தினர்.
எனினும், சிலர் அதனை மறுத்து இன்றும் அந்த இடத்தில் பௌத்த விகாரையொன்றை அமைக்கும் நடவடிக்கைகளை பௌத்தர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
இப்படி இருக்க இவ்வருடம் ஆலய மகோற்சவத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவடைந்துள்ள நிலையில், 26ஆம் திகதி பௌத்த மதத்தை சேர்ந்த சிலர் பொலிஸில் முறைபாடு ஒன்றை செய்துள்ளனர்.
இதையடுத்து ஆலய பரிபாலன சபை உட்பட மேலும் பல இந்துக்கள் பொலிஸ் நிலையத்தை நோக்கிச் செல்ல, அந்த இடத்தில் இனவாதத்தை வெளிப்படுத்தி திருவிழாவை தள்ளிப்போடுமாறு கூறியுள்ளனர்.
இதற்கு பரிபாலன சபையினர் மறுப்பு தெரிவிக்க, அப்படி திருவிழா திகதியை பிற்போடா விட்டால் களவரத்தை உண்டு பண்ணுவதாக கூறி, இனவாதத்தை வெளிப்படுத்தும் வார்த்தைகளை வெளியிட்டுள்ளனர்.
இதைகேட்ட பரிபால சபையினர், நமது மக்களை நாமே காக்க வேண்டும் என்ற எண்ணத்தில் திருவிழாவை உடனடியாக நிறுத்தவிட்டனர்.
இதையடுத்து எதிர்வரும் பௌர்ணமி தினத்தன்று ஆலயத்தை மூடவும் பரிபாலன சபையினர் தீர்மானித்துள்ளனர்.
இவ்வருட ஆலய உற்சவம் 28.04.2009ஆம் திகதி ஆரம்பித்து 10.05.2009ஆம் திகதி நிறைவடைய இருந்தமை குறிப்பிடத்தக்கது.
இப்படிப்பட்ட வார்த்தைகளை வெளிப்படுத்திவரும் மக்களுக்கு எதிராக நடவடிக்கைகளை நிச்சயமாக அரசாங்கம் எடுக்க வேண்டும்.
இந்த பதிவு சர்வதேச நாடுகளிலுள்ள தமிழர்கள் அனைவருக்கும். இதுவே தற்போதுள்ள இலங்கையின் நிலை.
சில அரசியல்வாதிகள் இது தொடர்பாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்ற போதிலும் இந்த ஆலயத்துடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த சில அரசியல்வாதிகள் இதுவரை ஆலயத்தின் பக்கம் திரும்பி பார்க்கவே இல்லை. பார்ப்போம் எமது நிலை எப்படி என்று!
Thursday, 30 April 2009
இதுவே இன்று எமது நிலை!
Posted by R.ARUN PRASADH at 18:52:00
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
என்ன செய்வது! இன்று எம் நாட்டின் நிலை அப்படியிருக்கிறது. ஏற்கனவே காவத்தை இந்துக் கோவில் அத்திவாரமிடும் வைபவமும் தடுத்து நிறுத்தப்பட்டது. உங்கள் ஆலயத்திற்கு 1991இல் அமரராகிய சிவத்திரு. பெருமாள் ஐயா தலைவராக இருந்தபோது சில தொடர் சமயப் பேச்சுக்களுக்கு வந்திருக்கின்றேன். முடிந்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
Post a Comment