மனிதனாக பிறந்த ஒவ்வொருவனும் கடக்கும் ஒரு சிறந்த வயது தான் இது!
அட்டகாசமாக போடும் இளமை துள்ளும் வயது தான் இது!
அது தான் TEEN AGE.
TEEN AGE என்பது மனிதனின் 7 வருடங்கள் மாத்திரமே!
மனிதனாக பிறந்து ஒவ்வொருவனும் கடக்க வேண்டிய மிக முக்கியமான வயதெல்லை அது மட்டுமே.
13 வயது முதல் 19 வயது வரை தான் செய்ய வேண்டிய அனைத்தையும் அந்த குறுகிய காலப்பகுதியில் செய்து கொள்ள வேண்டும்.
என்ன செய்ய வேண்டும் என்று தானே நினைக்கிறீர்கள்?
அந்த வயது தான் கல்விக்கான வயது!
அந்த வயது தான் விளையாட்டிற்கான வயது!
அந்த வயது தான் சண்டைக்கான வயது!
அதே வயத தான் காதல் செய்யும் வயதும்!
இப்படி பல்வேறு தரப்பினர் பல்வேறு விதமாக அந்த வயதை கடக்கின்றனர்.
இவ்வாறான செயல்களை புரிந்த அனைவரும் மீண்டும் அந்த காலம் மீண்டு வராதா என எதிர்பார்த்து இருக்கின்றனர். ஏங்குகின்றனர்!
என்னை பொருத்த வரை அந்த காலம் தான் செய்ய வேண்டிய அனைத்தையும் செய்து கொள்ள வேண்டிய காலம், அதை செய்யாதவன் பிறந்த பயனை முழுமையாக அடையாதவன் எனவே கூற வேண்டிய நிலை!
இப்படி இந்த செயல்களை செய்யும் இந்த குறுகிய 7 வருட காலப்பகுதிக்குள் மிக முக்கியமான வயதொன்றும் உள்ளது.
அது தான் 16 வயது!
யாரும் நினைத்து மறக்க முடியாத தனது உற்சாகம் நிறைந்து வயது!
இந்த வயது தான் ஒருவனை முழுமையாக மாற்றக் கூடிய வயது என கூறினால் மிகையாகது.
16 வயதில் தான் ஒருவன் கல்வியில் ஒரு நிலையை அடைகின்றான்! அப்படி இல்லை என்றால் அவனுக்கு ஏற்ற வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறான்!
அப்படிப்பட்ட ஒரு நடுத்தர வயது தான் 16 வயது!
அந்த வயதில் தான் காதலும் உருவாகிறது.
16 வயதில் உருவாகும் காதல், வாழ்க்கையில் பல மாற்றங்களை ஏற்படுத்தி விடுகிறது.
இந்த வாழ்க்கையை அனுபவித்தவர்களுக்கு தெரியும் அல்லவா!
நான் எழுதும் இந்த பதிவின் மூலம் உணர முடியாத வாழ்க்கை அது!
இந்த வயதை கடந்த எத்தனை பேர் உள்ளனர். அவர்கள் மனதில் 16 வயது ஞாபகம் இருக்கின்றதா? என கேளுங்கள், நிச்சயம் நினைவில் இருக்கும் வயது. இருக்காதவன் அந்த வயதை அனுபவிக்காத துரஸ்டசாலி!
TEEN AGE கடந்தால் வருபது, 20 வயது, அதை தாண்டிவிட்டால் அவன் வாழ்க்கையில் பல மாற்றங்கள் ஏற்படும்.
ஒன்று மேல் படிப்பு, அல்லது தொழில் வாய்ப்பு. இன்னும் உண்டு. உங்களுக்கு தெரியும் தானே!
மேல் படிப்பு, அல்லது தொழில் வாய்ப்பு பெற்றுச் சென்ற பின்னர், அவன் அனுபவிக்க வேண்டி பலவற்றை இழந்து விடுகிறான்.
பிறகு 16 வயதில் பெறும் அனுபவத்தை பெற்றுக் கொள்ள முடியாத நிலை தோன்றிவிடும். அதன் பின்னர் யோசித்து பயனில்லை.
போனால் வராத வாழ்க்கை அது! தாம் பிறந்த வாழ்க்கையை சுவைக்க வேண்டும் என நினைத்தால். அனுபவிக்க வேண்டும் 16 வயதில். குறித்த வயதை கடந்த பின்னர் அதை யோசித்து சுவைக்க முடியும்.
அது இனிப்பை விட சுவையானது.
காலங்கள் கடந்து வருடங்கள் முடிகின்ற போது நினைத்து, சுவைத்து, மனதை உறுத்துவதுடன் நட்சத்திரங்கள் தோன்றி மறையும் பல இன்னபங்களை பெறமுடியும் 16 வயதை நினைத்து,
சந்தர்ப்பங்கள் முகிழ்களை போன்று, மீண்டு வராத காலம்!
மீண்டு வராத வாழ்க்கையை, மீண்டும் நினைத்து பார்க்க நிஜமாய் அனுபவியுங்கள் 16 வயதுடையவர்கள்.
இந்த பதிவு 16 வயதிற்கு குறைந்த என் சகோதரர்களுக்காக!
நினைத்து பார்த்து சுவைக்க வேண்டும் என்று ஓவரா போக வேண்டாம்!
கல்வியிலும் கண்ணாய் இருக்கவும்!
Saturday, 7 March 2009
16 வயதினிலே!
Posted by R.ARUN PRASADH at 13:30:00
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
என்ன நண்பா அனுபவங்களோ கலக்குங்க அப்படியே உங்கள் பதினாறு வயது அனுபவத்தையும் சொல்லலாமே. உண்மையில் அந்த இனிமையான நாட்களை யாராலும் மறக்கமுடியாது. என்னையும் அந்த ஞாபகங்களை மீட்டிப்பார்க்க வைத்த உங்களுக்கு நன்றி.
"என்னை பொருத்த வரை அந்த காலம் தான் செய்ய வேண்டிய அனைத்தையும் செய்து கொள்ள வேண்டிய காலம், அதை செய்யாதவன் பிறந்த பயனை முழுமையாக அடையாதவன் எனவே கூற வேண்டிய நிலை!"
அப்படி என்றால் நான் பிறந்த பயனை முழுமையாக அடையவில்லை...
"இந்த வாழ்க்கையை அனுபவித்தவர்களுக்கு தெரியும் அல்லவா!"
உங்கள் அனுபவத்தைக் கொஞ்சம் எடுத்து விடுங்க அருண் அண்ணா..
"இந்த வயதை கடந்த எத்தனை பேர் உள்ளனர். அவர்கள் மனதில் 16 வயது ஞாபகம் இருக்கின்றதா? என கேளுங்கள், நிச்சயம் நினைவில் இருக்கும் வயது. இருக்காதவன் அந்த வயதை அனுபவிக்காத துரஸ்டசாலி!"
அண்ணா பாவன் என்னைப் போன்றவர்கள். இப்படி எல்லாம் ஏசக் கூடாது..
"அது இனிப்பை விட சுவையானது."
அப்படியா? இருக்கலாம்.
"இந்த பதிவு 16 வயதிற்கு குறைந்த என் சகோதரர்களுக்காக!"
இதை முதல்ப் பதிந்திருக்க வேண்டும் அண்ணா. நீங்கள் இறுதியாகச் சொன்னதால் நான் வாசித்துவிட்டேன்...
Post a Comment