காதல் என்பது வானவில்லை போன்றது. தூரத்திலிருந்து பார்க்கும் போது பல வர்ணங்கள், பார்க்க கண்ணுக்கு குளிர்ச்சியாக தான் இருக்கும்.
இந்த காதலை வேறு ஒரு முறையில் கூறினால் அது மரத்திலிருக்கும் ரோஜாவை போன்றது. அழகு மிகுந்த ஒரு மலர். ஆனால் பறிக்க சென்றால் எவ்வளவு கஷ்டம். முட்களில் எமது கையை காயப்படுத்தி கொண்டு, இரத்தம் வந்த பின்னர் தான் மலர் கையில் கிடைக்கும்.
இரத்தம் வந்தாவது மலர் கைக்கு கிடைக்கும் ஆனால் காதல் அப்படியும் கைக்கு சிலருக்கு கிட்டாது.
காதலில் வெற்றி பெறுபவர்கள் நூற்றுக்கு 30 சதவீதத்திற்கும் குறைந்தவர்களே! தோல்வியே கூடதலான பகுதி. அவர்களுக்காக தான் இந்த பதிவு.
காதலை தவிர இன்னும் எத்தனை அழகுண்டு நம் வாழ்வில்.
காதலில் தோல்வியா? நிச்சயம் எனக்கு தெரியும் அந்த காதலை நீங்கள் மறக்க மாட்டீர்கள் என்று.
அதை மறக்க தேவையில்லை. வேண்டாம் என்று சென்றவர்களுக்கு முன்பு நீங்கள் வாழ்ந்து காட்டினால் போதும் அது தான் வாழ்க்கையின் வெற்றி.
முதலில் தமது வாழ்வில் வெற்றி பெற வேண்டும், பின்னர் தான் மற்றையது.
பிரிந்து சென்ற காதலியோ காதலனையே நினைத்திருந்து உங்கள் வாழ்க்கையை நீங்கள் அழித்து கொள்வதை விட, உங்கள் பெற்றோர் சகோதரர்கள் உங்களை பார்த்து கவலை படுவதை விட வாழ்ந்து காட்டுங்கள் உங்களுக்காக இல்லாவிடினும் உங்கள் சொந்தத்திற்காக!
நினைப்பதெல்லாம் கிடைத்தால் வாழ்க்கைக்கு சுவை ஏது!
சுவை கிடைக்க வேண்டும் என்றால் ஒருவன் நிச்சயம் அவன் விரும்பும் முக்கியமான ஒன்றை இழக்க வேண்டும்.
அப்போது தான் வாழ்க்கையில் ஒரு போராட்டம், ஒரு வெறி, ஒரு தைரியம் உருவாகும்!
அப்படி முக்கியமான ஒன்றை இழக்காதன் வாழ்வின் ஒரு பகுதியில் நிச்சயம் ஏமாற்றத்திற்குள்ளாவான்!
காதலில் தோற்றவர்கள் உயிரை விடுகின்றனர்.
அதனால் காதலில் தோல்வியை கண்டவர்களின் இறுதி முடிவு உயிரை இழப்பதில்லை.
வாழ்வது. கையை வெட்டிக்கொள்வதில்லை. உடம்பில் தைரியத்தை கொண்டு வருவது.
காதலிக்க ஆரம்பிக்கும் போதே!
ஒரு பட்சத்தில் நாம் காதலில் தோற்றால்? என்ற கேள்வியை மனதில் எழுப்பி கொள்ள வேண்டும்!
அப்போது நாம் காதலிப்பவர்களை காதலிப்பது ஒரு அளவிற்கு செல்லும்.
அப்படியில்லாது பல்வேறு கற்பனைகளுடன் காதலிப்பவன் தான் இவ்வாறு உயிரை இழக்கின்றான்!
இந்த பதிவை வாசிப்பவர்கள் காதலிக்கும் போதே நாம் காதலில் தோல்வி பெற்றால் என்ற கேள்வியை எழுப்பிக் கொள்ளவும்.
அடுத்தது, நீங்கள் காதலிப்பவரை விட கூடுதலான அன்பை உங்கள் பெற்றோருக்காவது சகோதரருக்காவது காட்டவும்.
அப்போது காதலில் தோல்வியடையும் போது வலி இருக்காது!
மனம் உறுதியாக இருக்கும்.
காதலை விட உங்கள் தொழிலை நேசியுங்கள்! தற்போது தொழில் புரிவோரை விட மாணவர்களே கூடுதலாக காதலிக்கி;ன்றனர்.
அதனால் கல்வி காதலியுங்கள்! அந்த கல்வி உங்களை காப்பாற்றும்!
இப்படி காதலிக்கும் முன்பே காதலுக்கு ஒரு வேலியை அமைத்து கொள்ளவும்.
இது காதலுக்கான ஒரு வேலி மட்டுமே!
காதலுக்கான ஆயுள் சிறை தண்டனை அல்ல!
மறப்பதில்லை காதல் மனதில் நினைப்பது!
Monday, 16 February 2009
காதலுக்கான ஒரு வேலி!
Posted by R.ARUN PRASADH at 19:15:00
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment