Thursday, 18 December 2008

சிம்பாப்வேயில் கொலரா நோயினால் 978 பேர் பலி.


சிம்பாப்வே நாட்டில் கொலரா நோயினால் இதுவரை சுமார் 978 பேர் வரை உயிரிழந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இந்த நோய் தொடர்பாக ஐக்கிய நாடுகள் ஒன்றியம் சிம்பாப்வேயில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் பின்னர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

சிம்பாப்வேயில் கடந்த ஒரு வாரத்தில் இந்த நோயின் தாக்கம் 25 சதவீதத்தினால் அதிகரித்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஒகஸ்ட் மாதம் முதல் இன்று வரை இந்த நோயினால் 18 ஆயிரத்து 413 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதில் 978 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பாக ஐக்கிய நாடுகள் ஒன்றியம் சிம்பாப்வேயின் ஜனாதிபதி ரொபட் முகாபேயுடன் கலந்துரையாட தீர்மானித்துள்ளதாக தகவல் தெரிவிக்கி;ன்றன.

இந்த நோய் உலக நாடுகளுக்கு பரவக் கூடிய அபாயம் தோன்றியுள்ளதாக ஐக்கிய நாடுகள் ஒன்றியம் கூறியுள்ளது.

0 comments: