இலங்கையில் சிறுபாண்மையினரை மதிக்காது, சிறுபாண்மையினரை பெரும்பாண்மையிமனர் இன்றும் மட்டம் தட்டி வருகின்றனர்.
இலங்கையில் தமிழனுக்கு என்ன உரிமை உள்ளது? தலைமைத்துவம் ஒன்றிற்கு கூட தமிழனுக்கு உரிமை இல்லை.
உதாரணத்திற்கு கிரிக்கெட் -
இலங்கை அணியின் நட்சத்திர சூழல்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன்.
இலங்கை அணியில் பல வருடங்களாக விளையாடி வருகின்றார்.உலக நாடுகளே அவரை முதற்தர பந்து வீச்சாளர் பட்டியலில் சேர்த்துள்ளது.
ஏன், இலங்கை அணி பல வெற்றிகளை பெற்றுக்கொள்ள இவர் காரணமாக இருந்தமை நாம் அனைவரும் அறிந்த விடயமே!. இலங்கை அணி இவ்வளவு காலம் நிலையாக விளையாடி வருவதற்கு இவர் ஒரு முக்கிய காரணம் என கூட கூறலாம்.
இந்த காரணங்களை மட்டுமே காட்டியே, இவருக்கு இலங்கை அணியின் தலைமைத் துவத்தை வழங்க முடியும்.
ஆனால், இலங்கையில் செய்ய மாட்டார்கள். காரணம் சிறுபாண்மை என்ற ஒன்று. திறமைக்கு இங்கு இடமில்லை. மொழிக்கு, இனத்திற்கு தான் இலங்கையில் முன்னுரிமை கொடுக்கப்படுகிறது.
முரளிதரனின் வாழ்க்கை சாதாரண பந்துவீச்சாளர் மட்டும் தான்! அவர் பெற்ற பதக்கங்கள் மற்றும் வெற்றி கிண்ணங்கள் அனைத்தும் வீட்டின் அழகிற்கு மட்டும் என்பது சொல்லவே தேவையில்லை.
இலங்கையில் விளையாட்டு அப்படி இருக்க, அரசியலை நோக்கினால்,
மறைந்த முன்னாள் வெளிவிவகார அமைச்சர், லக்ஷ்மன் கதிர்காமர். இலங்கை அரசியலில் பல வெற்றி கொடிகளை நாட்டிய மனிதன்.
இலங்கைக்கு உலக நாடுகளின் உதவிகள் கிடைக்க முக்கிய காரணமாக இருந்த ஒரே மனிதர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமா? உலக நாடுகளின் அறிமுகம் இலங்கைக்கு கிடைக்க முக்கிய காரணம் இவர் என்பதை யாருமே மறுக்க முடியாது.
அவர் உயிரோடு இருக்கும் போது அவரிடமிருந்து அனைத்து உதவிகளையும் பெற்று, இறுதியில் கைகழுவி விட்டார்கள் கதிர்காமரை.
அடுத்து அரசியலின் உள்புறம்!
1977ஆம் ஆண்டு, தற்போது உள்ள அரசியல் யாப்பை வெளியிட்ட ஆண்டு.
இதன்படி, இலங்கையில் ஜனாதிபதியாக போட்டியிடும் ஒருவர் கட்டாயம் பௌத்த மதத்தை தழுவி இருக்க வேண்டும் என்பது இன்றியாமையாததாக அதல் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த சட்டம் 1977ஆம் ஆண்டு யாப்பில்; உறுதியாக கூறப்பட்டுள்ளது.
இலங்கையில் தமிழனுக்கு சமவுரிமை இல்லை என்பதை அந்த யாப்பின் மூலமே தெரியவருகின்றது.
பெரும்பாண்மையினர் எவ்வளவு செய்தாலும், தமிழன் அசையமாட்டான், இலங்கையில் வாழும் அனைத்து சிறுபாண்மையினருக்கு சமவுரிமை வழங்க வேண்டும் என கூறியே இன்றும் இலங்கையில் யுத்தம் நீடிக்கிறது.
இந்த நிலையில், இலங்கைக்கு வந்தது ஆப்பு.......
04.11.2008ஆம் திகதி நடைபெற்ற அமெரிக்க தேர்தல்.. இலங்கை அரசுக்கு கிடைத்தது சாட்டையடி...
எப்படி இந்த சாட்டையடி இலங்கைக்கு கிடைத்தது.. என்று தான் நினைக்கிறீர்கள்? அது தான் வருகிறேன்.
04.11.2008ஆம் திகதி நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களான ஜோன் மெக்கேயின் மற்றும் பராக் ஒபாமா.
முதலில் ஜோன் மெக்கேயினின் கொள்கையில் முக்கியமான ஒன்றை நான் இதற்கு எடுத்துக் கொள்கிறேன்.
“உலக நாடுகளில் ஏற்பட்டுவரும் பிரச்சினைகளுக்கு தீர்வு யுத்தம்”
இந்த கொள்ளையை கொண்டவர் ஜோன் மெகேயின்.....
“ஆயதத்தை கையில் எடுத்தவன், ஆயதத்தினாலேயே தனது உயிரை இழப்பான்” என்பது உலகறிந்த உண்மை.
அதுபோல தான் மெகேயின் யுத்தத்தை காட்டி அமெரிக்காவின் ஆட்சியை கைப்பற்ற நினைத்தார்.
முடியுமா? மக்கள் உஷார் ஆகிவிட்டார்கள்!
இவர் ஆட்சிக்கு வந்திருந்தால், நிச்சயம் உலக நாடுகளில் ஏற்பட்டு உள்ள பிரச்சினைகளுக்கு யுத்தத்தின் மூலமே தீர்வு காண முற்பட்டிருப்பார்.
அது இறுதி வரை சாத்தியமாகியிருக்காது.
அடுத்தது, கருப்பினத்தவர், அமெரிக்காவின் சிறுபாண்மையினரான பராக் ஒபாமா....
இவரின் கொள்கை சற்று நோக்குவோம்..
“உலகில் எவ்வளவு பிரச்சினை வந்தாலும், அந்த பிரச்சினையை பேச்சு வார்த்தையின் மூலம் முடிவுக்கு கொண்டு வருதல்” தான் பராக் ஒபாமாவின் கொள்கை.
இவர் ஆயுதம் ஏந்திய ஆட்சியை விரும்பவில்லை, பேச்சு வார்த்தை என்ற ஆயுதத்தை ஏந்தினார். இன்று உலக நாயகனானார்.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட ஜோன் மெக்கேயின் பெரும்பாண்மையினர், ஆனால் பராக் ஒபாமா சிறுபாண்மையினர், அது மட்டுமா? கருப்பினத்தவர். அப்படி இருந்தும் இவர்தான் ஆட்சிக்கு வரவேண்டும். என்ற முறை அமெரிக்காவில் இல்லை. இலங்கையில் உள்ளது. அமெரிக்காவில் ஒரே தகுதி. ஜனாதிபதியாகும் ஒருவர் கட்டாயம் அமெரிக்கராக இருக்க வேண்டும். அது சரியான தகுதி தானே!
இப்படியே இலங்கையை நோக்குவோம்.
இலங்கையில் தற்போது ஆட்சியில் உள்ள அரசு யுத்ததினாலேயே நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு தீர்வு காணலாம் என்ற கொள்கையை கொண்டுள்ளது.
இவ்வாறான கொள்கையை கொண்டதும், நான் ஆரம்பத்தில் கூறியது போல, சிறுபாண்மையினரை வெறுப்பதுமான கொள்கையை தற்போதை இலங்கை அரசு கொண்டுள்ளது.
இப்படிப்பட்ட அரசாங்கம், உலக வல்லரசு நாடான அமெரிக்க தேர்தலில் யாருக்கு ஆதரவு தெரிவித்திருக்கும்..
நிச்சயம் ஜோன் மெக்கேயினுக்கு தான்.
ஆனால், ஆதரவு தெரிவித்த மெக்கேயினின் ஆட்சி வரவில்லை, சமாதான ஆட்சி வந்துள்ளது.
இது தான் இலங்கை அரசுக்கு கிடைத்துள்ள சாட்டையடி.....
தற்போது அமெரிக்காவின் ஆட்சிக்கு வந்துள்ள ஒபாமா, உலக நாடுகளில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு பேச்சு வார்த்தை மூலம் முடிவொன்றை எடுப்பார் என்பது நிச்சயம்.
அந்த முடிவு இலங்கைக்கு வரும் போது இலங்கை என்ன செய்யும்?
பதில் தருகிறேன்..
போரை நிறுத்த வேண்டும். பேச்சு வார்த்தையில் ஈடுபட வேண்டும். அப்போது. தமிழனின் ஆட்சி. அமெரிக்காவில் இன்று ஏற்பட்டுள்ள நிலை இலங்கைக்கு வர இன்னும் சில நாட்களே உள்ளது.
அப்போது இலங்கை அரசு என்ன செய்யும்? ஆண்டவனுக்கு தான் தெரியும் இதற்கான இதற்கான பதில்....
Thursday, 6 November 2008
இலங்கைக்கு கிடைத்த சாட்டையடி....
Posted by R.ARUN PRASADH at 13:33:00
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
அமெரிக்காவில் கருப்பினத்தை சேர்ந்த ஒருவர் ஜனாதிபதியாகி விட்டால் அங்கே எல்லா கறுப்பின மக்களுக்கும் விடுதலை கிடைத்து விட்டதாக அர்த்தம் இல்லை. ஏற்கனவே பல கறுப்பின அமைச்சர்கள் இருந்துள்ளனர். இலங்கையில் தமிழ் அமைச்சர்கள் இருப்பது போல. ஒபாமா கூறிய கருத்துகள் பெரும்பாலும் ஈராக் போன்ற நாடுகளுக்கே பொருந்தும். இலங்கை போன்ற நாடுகள் மீது அமெரிக்காவுக்கு எந்த அக்கறையும் இல்லாதபடியால் நீங்கள் எதிர்பார்ப்பது போல எந்த மாற்றமும் வராது. அமெரிக்கா விசேட கவனம் செலுத்துவதற்கு இலங்கையில் பெட்ரோல் இருக்கிறதா? ஒரு சிறிய கேள்வி. உங்களுக்கு கொங்கோவில், சோமாலியாவில் நடக்கும் போர் பற்றி தெரியுமா? அங்கேயெல்லாம் அமெரிக்கா என்ன செய்து கிழித்து விட்டது?
ஒசாமாவும் போருக்கு தயாராக உள்ள இன்னொரு அமெரிக்க ஜனாதிபதி தான். பின்வரும் கட்டுரையை ஒரு தடவை வாசிக்கவும் :
http://kalaiy.blogspot.com/2008/11/blog-post_05.html
நல்லாயிருக்கு.
இன்னும் கோர்வையாக எழுதப் பழகுங்கள்.
உங்கள் எழுத்தின் வலிமை அதிகரிப்பதை நீங்களே உணர்வீர்கள்.
Good post!
Post a Comment