ஜாதகம் பார்ப்பது மற்றும் ராசிபலன் பார்ப்பது என பழக்கங்கள் உங்களுக்கு உண்டா? நம்பிக்கை உண்டா? நம்பிக்கை இல்லாவிடினும் இதனை வாசித்து ஒரு விளையாட்டாக எடுக்கவும்.
உண்மையில் இது விளையாட்டு அல்ல. இது சீரியஸ் ஒரு விஷயம்.
நடப்பது நிச்சயம். இதை நம்பிக்கையுடன் பார்க்கவும்.
சரி என்ன அது.. அப்படி தானே.
உங்களுக்கு திருமணம் எப்போது? எத்தனை பிள்ளைகள் உங்களுக்கு? இது தான் மேட்டர்.
நம்பிக்கை இல்லாதவர்களுக்காக ஒரு சந்தர்ப்பத்தை முதலில் நான் சொல்லி விடுறேன்.
திருமணம் முடிந்து பிள்ளைகள் உள்ள ஒருவருக்கு இந்த ஜாதகத்தை பார்க்கவும்.
அவருக்கு எத்தனை வயதில் திருமணம் முடிந்தது. எத்தனை பிள்ளைகள்? பிறந்திருப்பது ஆண் குழந்தையா? பெண் குழந்தையா? பார்த்து வி;ட்டு சரியாக இருந்தால் நீங்களும் பார்க்கவும். சரியாக தான் இருக்கும்.
முதலில் ஒரு கோப்பையின் அரைவாசிக்கு தண்ணீரை எடுத்துக் கொள்ளவும்.
முக்கியமாக தங்க மோதிரம். அந்த தங்க மோதிரத்தை தலைமுடியொன்றில் கட்டிக் கொள்ள வேண்டும்.
கட்டிய முடியை கோப்பையில் நிரப்பி வைத்துள்ள தண்ணீரில் போட்டு சிறிது நேரம் வைத்திருந்து விட்டு, தண்ணீரை விட்டு வெளியில் மெதுவாக எடுக்க வேண்டும். ஆனால் கோப்பையை விட்டு வெளியில் எடுக்க வேண்டாம்.
தண்ணீரில் பட்டும் படாமலும் சரியாக கோப்பையில் நடுவில் நிற்குமாறும் துக்கி பிடித்துக் கொள்ள வேண்டும்.
கைகளை ஆட்ட கூடாது.
அந்த மோதிரம், மெதுவாக மொதுவாக ஆடி ஆடி நீர் நிரப்பி வைத்துள்ள கோப்பையில் மோதும்.
அவ்வாறு எத்தனை தடவைகள் மோதுகின்றன என எண்ணிக் கொள்ள வேண்டும். சரியாக உங்களுக்கு திருமணமாகும் வயது வந்தவுடன் உடனடியாக ஆடும் மோதிரம் நின்றுவிடும்.
அப்போது தெரிந்து கொள்ள முடியும், எத்தனை வயதில் உங்களுக்கு திருமணமென்று.
இது கதை அல்ல நிஜம்.
அடுத்து, உங்களுக்கு எத்தனை பிள்ளைகள் என பார்ப்போம்.
உங்கள் கையிலுள்ள தலை முடியுடன் கூடிய மோதிரத்தை இன்னுமொருவர், சரியாக உங்கள் உள்ளங்கையின் மேல் பிடித்து பார்க்க வேண்டும்.
குறிப்பு :- மெதுவாக முடி கட்டியுள்ள மோதிரத்தை தூக்க வேண்டும்.
அது நேராக ஆடும் பட்சத்தில் ஆண் குழந்தை, அது வட்டமாக சுழலும் பட்சத்தில் பெண் குழந்தை. நிச்சயமாக.
இதனை தொடர்ந்து செய்ய வேண்டும், ஒரு சந்தர்ப்பத்தில் அது அசையாது. அப்போது அறிந்து கொள்ள முடியும். உங்களுக்கு எத்தனை பிள்ளைகள் என்று.
மீண்டும் சொல்லுகிறேன். கதையல்ல இது நிஜம். விளையாட்டல்ல! விபரீதமான விளையாட்டு!
இது தான் சொல்வதோ வாழ்க்கை உங்கள் கையில என்று!
Tuesday, 24 March 2009
விபரீதமான விளையாட்டு!
Posted by R.ARUN PRASADH at 07:20:00 1 comments
Sunday, 15 March 2009
ஆனந்தத்தினால் கண்களில் கண்ணீர்! வாழ்த்துக்கள்.
இன்று காலை வேலைக்காக வந்து எமது வேலைகளை முடித்து விட்டு கணனியில் ஏனைய வேலைகளை செய்து கொண்டிருந்தேன்.
சிறிது நேரத்தின் பின்னர் காலை நிகழ்ச்சிக்காக வைதேகி அக்கா வந்து என்னோடு பேசிக்கொண்டிருந்தார்.
சிறிது நேரம் பேசியவாறு FACEBOOK இல் உள்ள நண்பர்கள் மற்றும் பின்னூட்டங்களை பற்றி பேச தொடங்கி விட்டோம்!
அப்போது வைதேகி அக்கா என்னை பார்த்து அருண் என்னுடைய FACEBOOK கை திறந்து பார். அதில் ஒரு வீடியோ கிளிப் ஒன்று புதிதாக பதிந்துள்ளளேன் என கூறினார்.
அதை நான் பெரிதாக பொருட்படுத்தவில்லை. மீண்டும், அந்த வீடியோவை பார் என்று கூறியவாறே, அந்த வீடியோவை பார்த்து நேற்று நான் வீட்டில் தனியாக அழுது விட்டேன் என்றார்.
அதை கேட்ட எனக்கு ஒரு ஆசை வந்தது. சரி என்னதான் இருக்கு என பார்ப்போம்! என பார்த்தேன்.
அமிர்தா தொலைகாட்சியில் ஒலிபரப்பான ஒரு பாடல் போட்டி நிகழ்ச்சி!
13 வயதுடைய சிறுமியின் பாடல். நடுவர்களாக பின்னணி பாடகி சுபா மற்றும் பாடகர் விஜய் ஜேசுதாஸ். நிகழ்ச்சியின் பாடல் ஆரம்பித்ததிலிருந்து, கூற வார்த்தைகள் இல்லை அப்பப்பா!
எப்படி பாடல்! உண்மையிலேயே வாழ்க்கையில் நான் இப்படிப்பட்ட ஒரு குரலை கேட்டதே இல்லை.
எனக்கு அதன்பிறகு என்ன செய்வதென்றே தெரியவில்லை. கண்களிலிருந்த கண்ணீர். ஆனந்தம் அளவை மீறிவிட்டது.
அந்த பாடலை கேட்ட வேலையிலிருந்த இன்னமும் என் மனதில் அந்த சிறுமியில் குரல் தான் கேட்கிறது.
எனக்கு நேரில் சென்று வாழ்த்த முடியாததினால். நான் எனது பதிவின் மூலம் அந்த சிறுமிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.
வாழ்த்துக்கள்! நிச்சயம் நீங்கள் உயர்வீர்கள்.
http://www.youtube.com/watch?v=kOF003Qp2yY&eurl=http://www.facebook.com/home.php
Posted by R.ARUN PRASADH at 07:12:00 0 comments
Saturday, 14 March 2009
உயிருடன் உயிர் பிரியுமா? நிச்சயமாக.
மனிதனாய் பிறந்த ஒவ்வொருவருக்கும் உயிர் என்பது நிச்சயமில்லா ஒன்று.
முன்னைய காலத்தை நோக்கினால் நிச்சயம் நோய்களினால் அல்லது வயது சென்றே மனிதர்கள் உயிரிழந்தனர்.
ஆனால் தற்போது அந்த உயிரிற்கான மதிப்பு சற்றேனும் இல்லை என்பது உலகறிந்த உண்மை.
எதிரி தேவையில்லை என நினைக்கும் போதே எதிரி இல்லை இந்த காலத்தில்.
இப்படியாக உலகில் வாழுங்கள் நாங்கள் எமது உயிர் பிரிந்தால் எப்படி இருக்கும் என உணர்ந்திருக்க வேண்டும் அல்லவா?
ஒவ்வொரு நாளும் எமது உயிர் எம்மை விட்டு பிரிகின்றது. அதை அனைவரும் உணர்ந்திருக்க வேண்டும். நிச்சயம் நீங்களும் உணர்ந்திருப்பீர்கள்.
ஆனால் அது தமது உயிர் பிரிவது என நினைப்பதில்லை அந்த சந்திர்ப்பத்தில் வேறு எதாவது நினைத்துக் கொள்வது.
எப்படி உணர்வது என்று தானே நினைக்கிறீர்கள்.
நீங்கள் ஆழ்ந்த நித்திரையில் இருக்கும் போது, உங்களுடைய உயிர் உங்களை விட்டு பிரிந்து விடும்.
அவ்வாறு பிரியும் உயிர் உலகை ஒரு சுற்று சுற்றி விட்டு மீண்டும் உங்கள் உடலுக்குள் ஊடுறுவது தான் உண்மை.
இதனை நான் உணர்ந்திருக்கிறேன். பல தடவைகள்.
சில சந்தர்ப்பங்களில் நாங்கள் நித்திரையில் இருக்கும் போது, நாம் விபத்துக்குள்ளாவது போல் உணர்வு ஏற்பட்டு தீடீரென திடுக்கிட்டு எழும் சந்தர்ப்பங்கள் இருக்கின்றன.
அவ்வாறு திடுக்கிட்டு எழும் போது உடலில் ஒரு மாற்றம் தெரியும். உடலில் ஒரு வகையான வலி ஏற்பட்டும் அல்லவா!
அப்போது தான் உயிர் பிரிந்து மீண்டும் உங்கள் உடலை வந்து சேர்ந்த சந்தர்ப்பம்.
அது தான் உடலில் வலி ஏற்படுவது. சில சந்தர்ப்பங்களில் உடலின் சில பாகங்கள் இல்லாதது போல் இருக்கும் அல்லவா!
அது தான் எமது முன்னோர்கள் கூறுவார்கள், ஒருவன் நித்திரையில் இருக்கும் போது அவனுடைய உடலில் எதெனும் மாற்றங்களை செய்ய வேண்டாம் என.
அவ்வாறு மாற்றங்கள் செய்யும் பட்சத்தில் உடலை விட்டு சென்ற எமது உயிர், மீண்டும் எமது உடலை அண்மிக்கும் போது உடலில் மாற்றங்கள் ஏற்பட்டிருந்தால் அது வேறு ஒருவரின் உடல் என நினைத்து எப்போதுமே எமது உடலை வந்து சேராது எமது உயிர்.
இப்படி தான் எமது உயிர் பிரிகின்றது ஒவ்வொரு நாளும் எம்மை விட்டு. இந்த பதிவினை வாசித்த பின்னர் இந்த உணர்வை அனுபவிக்காதவர்கள் இனி நிச்சயம் அனுபவிப்பீர்கள்.
Posted by R.ARUN PRASADH at 18:16:00 0 comments
Thursday, 12 March 2009
ஜப்பானின் வீழ்ச்சிக்கு காரணம்!
1945 செப்டம்பர் 2, உலகையே யோசிக்க வைத்து அழ வைத்த ஒரு நாள்.
இது போன்ற ஒரு நாள் மீண்டும் வர கூடாதென ஒவ்வொருவரும் நினைக்கும் நாள் இது.
அன்றைய தினம் என்னவென்று தானே யோசிக்கிறீர்கள்!
2ஆவது உலக மகா யுத்தம்!
அமெரிக்காவினால் ஜப்பானில் அணுகுண்டு தாக்குதல் மேற்கொண்ட நாள் தான் அது!
எத்தனை வருடங்கள் சென்றாலும் மீண்டும் ஒருபோதும் மீண்டு வராத நாடு என்ற நினைத்து நாடு அது.
இரோசிமா நாகசாகி ஆகிய இடங்களில் இன்றும் பல பிரச்சினைகள் உள்ளமை யாரும் அறிந்த உண்மை.
அங்கு பிறக்கும் குழந்தை முதல் இறக்கும் முதியோர் வரை அனைவருக்குமே பிரச்சினை தான்.
எத்தனை வருடங்கள் சென்றாலும் முன்னேற்றம் அடையாது என நினைத்து நாடு இன்று உலகில் முன்னணி நாடுகளின் வரிசையில் இடம்பெற்று விட்டது.
இது அன்றைய காலத்தில் அங்கு வாழ்ந்த மனிதர்களில் தைரியம் மற்றும் தன் நம்பிக்கை என்றே கூற வேண்டும்.
உலக நாடுகள் உபயோகிக்கும் பெரும் பாலான வாகனங்கள் முதல் இலத்திரனியல் சாதனங்கள் வரை கூடுதலானோர் விரும்புவது ஜப்பானிய தயாரிப்பையே.
காரணம் 2ஆவது உலக மகா யுத்தத்தில் எந்தளவு பாதிக்கப்பட்டார்களோ! அந்த அளவு விரைவில் முன்னேறிய நாடு தயாரிக்கும் பொருளின் மீது நம்பிக்கை.
எமது நாடுகளில் சிறுவர்களை பாடசாலைக்கு அழைத்துச் சென்று விட்டாள். 'அ' 'ஆ' 'இ' 'ஈ' எழுதுவது எப்படி.
அதையும் மண்ணில் அல்லது அரிசியில் எழுதி கட்ட வேண்டும். இந்த நம்பிக்கை இன்றும் இருக்கின்றது.
இதை நான் குறை கூற வில்லை. எதாவது ஒன்று ஆரம்பிக்கும் போது ஆரம்பம் தேவை தான்!
நான் சொல்வது. உலக மாற்றத்திற்கு ஏற்ப எமது வழக்கத்தை சற்றேனும் மாற்றிக் கொள்ள வேண்டும் என்று தான்! (முழுமையாக இல்லை!) உங்களை மாற்றிக் கொள்ள வேண்டாம்.
ஜப்பானில் அப்படி இல்லயாம். முதலில் பாடசாலைக்குச் செல்லும் போது, கடிகாரம் ஒன்றை செய்து எப்படி. விளையாட்டு பொருட்களை செய்து எப்படி என்ற இவ்வாறான தொழிநுட்ப ரீதியான பாடத்தையே கற்றுக் கொடுக்கின்றனராம்!
இப்படி பாடத்திட்டத்தை கொண்டு வந்ததினால் இன்று உருவாகும் ஒவ்வொருவரும் தனது தொழிநுட்பத்தை வைத்து கொண்டு முன்னேறியுள்ளனர்.
ஆனால், இன்று உலக பொருளாதார நெருக்கடி.
இதில் மிக பாதிக்கப்பட்ட நாடு ஜப்பான். கடந்த ஜனவரி மாதம் கணக்கெடுப்பொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த கணக்கெடுப்பில் ஜப்பான் அறைவாசிக்கு மேல் பொருளாதார நெருக்கடியில் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த கணக்கெடுப்பை மேற்கொண்ட நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த கணக்கெடுப்பின் படி ஜப்பானிய பொருளாதாரம் 1.8 பில்லியன் அமெரிக்க டொலர்களினால் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த வீழ்ச்சியானது கடந்த 13 வருடங்களின் பின்னர் ஏற்பட்ட மிக பாரிய வீழ்ச்சி என ஜப்பானிய ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இவ்வாறு ஏற்பட்டுள்ள வீழ்ச்சியில் 66.1 வீதமான வீழ்ச்சி கார் ஏற்றுமதியிலும், 52.8 வீதமான வீழ்ச்சி இலத்திரனியல் பொருட்கள் ஏற்றுமதியிலும் ஏற்பட்டதென கருதப்படுகிறது.
ஜப்பான் நாட்டின் பொருட்களை ஆசியா, ஜரோப்பா, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் அமெரிக்கா உட்பட இன்னும் பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு பாதிக்கப்பட்ட நாடு உலகின் முன்னணி நாடுகளுக்கு இவ்வளவு காலமும் நான் மேல் குறிப்பிட்டவற்றை ஏற்றுமதி செய்து வந்ததென்றால் யாராலும் உண்மை என்று கூற முடியாது!
இதற்கு காரணம் என்னவாக இருக்கமுடியும். என்று நான் ஒரு ஆராய்வை மேற்கொண்டேன். பழைய பத்தரிகைகள், இணையத்தளங்கள், நண்பர்கள் சகோதர்கள் உட்பட இன்னும் பல இடங்களில் ஆராய்ந்து பார்த்து ஒரு முடிவிற்கு வந்தேன்.
என்ன தெரியுமா?
சம்பாதிக்க ஒருவன் வீட்டில் இருந்தால், அழிக்க ஒருவன் நிச்சயம் அங்கு பிறந்திருப்பான் என பெரியவர்கள் கூறுவதை நாம் கேட்டிருக்கின்றோம்.
ஜப்பானிலும் அப்படியே! சம்பாதித்தவன் ஒருவன், அனுபவிப்பவன் ஒருவர், அழிப்பவன் மற்றையவன்!
2ஆவது உலக மகா யுத்தத்தில் பாதிக்கப்பட்டு இன்று முன்னணி நாடாக கொண்டு வந்த அந்த நாட்டின் முன்னோர்கள் உழைத்த அனைத்து சொத்துக்களையும், இப்போதுள்ள சந்ததியினர் செலவிடுகின்றனர்.
தற்போது உருவாகியுள்ள சந்ததியினர் உழைப்பதை விட செலவிடுவதில் மும்முரமாய் இருக்கின்றார்களாம்!
இதனாலேயே பொருளாதார வீழ்ச்சி ஜப்பானை அந்தளவு பாதித்துள்ளது.
மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும் என்றால் தற்போதைய சந்ததியினர் நினைத்தால் மாத்திரமே முடியும்.
பாதிக்கப்பட்ட ஒரு நாடு, கட்டியெழுப்ப எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார்கள் என்று எமக்கு உணர முடிகின்றது. அது அங்குள்ள தற்போதைய சந்ததியினருக்கும் உணர வேண்டும் அல்லவா!
Posted by R.ARUN PRASADH at 08:25:00 0 comments
Labels: உலக மகா யுத்தம், செப்டம்பர், பொருளாதாரம், ஜப்பான்
Wednesday, 11 March 2009
இலங்கை கிரிக்கெட்டின் இடைக்கால சபை தலைவர் நாளை நியமனம்!
இலங்கை கிரிக்கெட்டின் இடைக்கால தலைவர் பதவிக்காக முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் வீரர் D.S.D.சில்வா முன்மொழியப்பட்டுள்ளார்.
நாளைய தினம் நியமிக்கப்படவுள்ள இடைக்கால சபை தலைவர் பதவிக்காகவே இவரது பெயரை முன்மொழிந்துள்ளதாக விளையாட்டு துறை அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்தார்.
கடந்த டிசம்பர் மாதம் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜுன ரனதுங்க தலைமையிலான இடைகால சபை கலைக்கப்பட்;டதை தொடர்ந்து புதி இடைக்கால சபை தேர்வு நாளை இடம்பெறவுள்ளது.
இதேவேளை, இந்த இடைப்பட்ட காலப்பகுதியில் இலங்கை கிரிக்கெட்டின் சகல பொறுப்பினையும் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் வகித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும், இடைகால சபை தலைவர் பதவிக்காக முன்மொழியப்பட்டுள்ள முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் வீரர் D.S.D. சில்வா, ஜனாதிபதியின் விளையாட்டு துறை தொடர்பான ஆலோசகராக கடமையாற்றியுள்ளார்.
Posted by R.ARUN PRASADH at 18:02:00 0 comments
உலக கோடிஸ்வரர்களில் இந்தியர்கள் 24 பேர்!
உலக கோடிஸ்வரர்கள் தரவரிசையை போர்ப்ஸ் இதழ் புதிதாக வெளியிட்டுள்ளது.
இந்த உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் 24 இந்தியர்கள் இடம்பெற்றுள்ளதுடன், இவர்களில் 4 முதல் 10 இடங்களுக்குள் இந்தியர்கள் இடம்பெற்றிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்தப் பட்டியலில் 13 ஆண்டுகளாக தொடர்ந்து முதல் இடத்தை வகித்து வந்த உலகின் முன்னணி கணனி நிறுவனமான மைக்ரோசாப்ட்டின் தலைவர் பில் கேட்ஸ் பின்னுக்குத் தள்ளப்பட்டு அவருடைய இடத்தை வாரன் பப்பே பிடித்துள்ளார்.
லண்டன் வாழ் இந்தியரான உலகின் மிகப்பெரும் எஃகு உற்பத்தி நிறுவனமான ஆர்சிலரின் தலைவரான லட்சுமி மிட்டல் உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் 4வது இடத்தில் உள்ளதுடன், அவரது சொத்து மதிப்பு 45 பில்லியர் டொலராகும்.
அவருக்கு அடுத்தபடியாக ஆசியாவில் வசிக்கும் முதல் பணக்காரர் என்ற பெருமையுடன் உள்ளார் ரிலையன்ஸ் நிறுவனத்தின் முகேஷ் அம்பானி. இவரது சொத்து மதிப்பு 43 பில்லியன் டொலராகும்.
அடுத்ததாக 6வது இடத்தில் முகேஷின் சகோதரரான அனில் அம்பானி. இவரது சொத்து மதிப்பு 42 பில்லியன் டொலர் என்பதுடன், ரியல் எஸ்டேட் நிறுவனமான டி.எல்.எப்பின் தலைவர் கே.பி.சிங் 30 பில்லியன் டொலர் சொத்து மதிப்புடன் கோடீஸ்வரர்கள் பட்டியலில் 8வது இடத்தில் உள்ளார்.
கடந்த ஆண்டு 52 பில்லியன் டொலருக்கு சொந்தக்காரராக இருந்த வாரன் பப்பே அவரது நிறுவனத்தின் பங்குகள் விலை தொடர்ந்து அதிகரித்ததைத் தொடர்ந்து அவரது சொத்து மதிப்பு மேலும் 10 பில்லியன் டொலர் உயர்ந்து தற்போது 62 பில்லியன் டொலராக உள்ளது. இதன் மூலம் அவர் உலகின் முதல் பணக்காரராக உயர்ந்துள்ளார் என்று போர்ப்ஸ் கூறியுள்ளது.
பில் கேட்சின் சொத்து மதிப்பு 58 டொலராக உள்ளது. அவர் மூன்றாவது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Posted by R.ARUN PRASADH at 13:32:00 0 comments
Tuesday, 10 March 2009
யூடியூபில் மீண்டும் பிரச்சினை!
வீடியோக்களை பகிர்ந்து கொள்ளும் பொருட்டு கூகிளினால் அறிமுகப்படுத்தப்பட்டு மிக பிரச்சித்திப்பெற்ற இணையத்தளம் தான் யூடியூப்.
இது உலகின் இணையத்தள வரலாற்றை மாற்றிய ஒரு இணையத்தளம் என்று கூறினால் அது மிகையாகாது!
இதன்மூலம், வீடியோ கோப்புக்களை பரிமாற்றிக் கொள்வதோடு, எவர் வேண்டுமானாலும் அதிலுள்ள வீடியோ கோப்புக்களை பார்க்க முடியும்!
இவ்வாறு அறிமுகப்படுத்தப்பட்ட யூடியூபினால், அறிமுகப்படுத்தப்பட்ட காலத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றி மறைந்தமை குறிப்பிடத்தக்கது.
உதாரணமாக சிறுவர்கள் பார்க்க கூடாத தடை செய்யப்பட்ட வீடியோக்கள் இதன்மூலம் பரிமாற்றப்பட்டதுடன், அதனை அனைவரும் பார்க்க கூடியதாய் அமைந்திருந்தது யாரும் அறிந்ததே!
பின்னர் இவ்வாறான கோப்புக்களை பார்வையிட வேண்டும் என்றால், கட்டாயமாக பதிவு செய்தே பார்க்க வேண்டும் என யூடியூப் நிறுவனம் அதில் மாற்றத்தை ஏற்படுத்தியது.
தற்போதும் மீண்டும் அதில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றி மறைகின்றன.
இவ்வாறு பங்களாதேஷ் நாட்டிற்கு எதிரான வீடியோ கோப்பொன்று கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டுள்ளமையினால் அந்த நாட்டில் யூடியூப் தடைசெய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர், பங்களாதேஷ் எல்லை பாதுகாப்பு பிரிவினரிடையே ஏற்பட்ட கலகம் தொடர்பாக அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீகாவும், மூத்த இராணுவ அதிகாரிகளும் நடத்திய இரகசிய கலந்துரையாடலொன்றை யூடியூப் இணையத்தளம் வெளியிட்டுள்ளது.
இதை தொடர்ந்தே குறித்த நாட்டில் யூடியூப் இணையத்தளம் தடை செய்யப்பட்டுள்ளதாக அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது.
இந்த வீடியோ காட்சியானது 40 நிமிடங்களை கொண்டமை குறிப்பிடத்தக்கது.
பங்களாதேஷில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஏற்பட்ட கலகத்தினால் 70திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருந்தனர்.
இந்த வீடியோ கோப்புக்களை பார்வையிட்ட பின்னர் மீண்டும் அந்த நாட்டில் கலகம் தோன்றும் என் அச்சத்தினாலேயே யூடியூப் தடை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Posted by R.ARUN PRASADH at 12:22:00 2 comments
Saturday, 7 March 2009
16 வயதினிலே!
மனிதனாக பிறந்த ஒவ்வொருவனும் கடக்கும் ஒரு சிறந்த வயது தான் இது!
அட்டகாசமாக போடும் இளமை துள்ளும் வயது தான் இது!
அது தான் TEEN AGE.
TEEN AGE என்பது மனிதனின் 7 வருடங்கள் மாத்திரமே!
மனிதனாக பிறந்து ஒவ்வொருவனும் கடக்க வேண்டிய மிக முக்கியமான வயதெல்லை அது மட்டுமே.
13 வயது முதல் 19 வயது வரை தான் செய்ய வேண்டிய அனைத்தையும் அந்த குறுகிய காலப்பகுதியில் செய்து கொள்ள வேண்டும்.
என்ன செய்ய வேண்டும் என்று தானே நினைக்கிறீர்கள்?
அந்த வயது தான் கல்விக்கான வயது!
அந்த வயது தான் விளையாட்டிற்கான வயது!
அந்த வயது தான் சண்டைக்கான வயது!
அதே வயத தான் காதல் செய்யும் வயதும்!
இப்படி பல்வேறு தரப்பினர் பல்வேறு விதமாக அந்த வயதை கடக்கின்றனர்.
இவ்வாறான செயல்களை புரிந்த அனைவரும் மீண்டும் அந்த காலம் மீண்டு வராதா என எதிர்பார்த்து இருக்கின்றனர். ஏங்குகின்றனர்!
என்னை பொருத்த வரை அந்த காலம் தான் செய்ய வேண்டிய அனைத்தையும் செய்து கொள்ள வேண்டிய காலம், அதை செய்யாதவன் பிறந்த பயனை முழுமையாக அடையாதவன் எனவே கூற வேண்டிய நிலை!
இப்படி இந்த செயல்களை செய்யும் இந்த குறுகிய 7 வருட காலப்பகுதிக்குள் மிக முக்கியமான வயதொன்றும் உள்ளது.
அது தான் 16 வயது!
யாரும் நினைத்து மறக்க முடியாத தனது உற்சாகம் நிறைந்து வயது!
இந்த வயது தான் ஒருவனை முழுமையாக மாற்றக் கூடிய வயது என கூறினால் மிகையாகது.
16 வயதில் தான் ஒருவன் கல்வியில் ஒரு நிலையை அடைகின்றான்! அப்படி இல்லை என்றால் அவனுக்கு ஏற்ற வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறான்!
அப்படிப்பட்ட ஒரு நடுத்தர வயது தான் 16 வயது!
அந்த வயதில் தான் காதலும் உருவாகிறது.
16 வயதில் உருவாகும் காதல், வாழ்க்கையில் பல மாற்றங்களை ஏற்படுத்தி விடுகிறது.
இந்த வாழ்க்கையை அனுபவித்தவர்களுக்கு தெரியும் அல்லவா!
நான் எழுதும் இந்த பதிவின் மூலம் உணர முடியாத வாழ்க்கை அது!
இந்த வயதை கடந்த எத்தனை பேர் உள்ளனர். அவர்கள் மனதில் 16 வயது ஞாபகம் இருக்கின்றதா? என கேளுங்கள், நிச்சயம் நினைவில் இருக்கும் வயது. இருக்காதவன் அந்த வயதை அனுபவிக்காத துரஸ்டசாலி!
TEEN AGE கடந்தால் வருபது, 20 வயது, அதை தாண்டிவிட்டால் அவன் வாழ்க்கையில் பல மாற்றங்கள் ஏற்படும்.
ஒன்று மேல் படிப்பு, அல்லது தொழில் வாய்ப்பு. இன்னும் உண்டு. உங்களுக்கு தெரியும் தானே!
மேல் படிப்பு, அல்லது தொழில் வாய்ப்பு பெற்றுச் சென்ற பின்னர், அவன் அனுபவிக்க வேண்டி பலவற்றை இழந்து விடுகிறான்.
பிறகு 16 வயதில் பெறும் அனுபவத்தை பெற்றுக் கொள்ள முடியாத நிலை தோன்றிவிடும். அதன் பின்னர் யோசித்து பயனில்லை.
போனால் வராத வாழ்க்கை அது! தாம் பிறந்த வாழ்க்கையை சுவைக்க வேண்டும் என நினைத்தால். அனுபவிக்க வேண்டும் 16 வயதில். குறித்த வயதை கடந்த பின்னர் அதை யோசித்து சுவைக்க முடியும்.
அது இனிப்பை விட சுவையானது.
காலங்கள் கடந்து வருடங்கள் முடிகின்ற போது நினைத்து, சுவைத்து, மனதை உறுத்துவதுடன் நட்சத்திரங்கள் தோன்றி மறையும் பல இன்னபங்களை பெறமுடியும் 16 வயதை நினைத்து,
சந்தர்ப்பங்கள் முகிழ்களை போன்று, மீண்டு வராத காலம்!
மீண்டு வராத வாழ்க்கையை, மீண்டும் நினைத்து பார்க்க நிஜமாய் அனுபவியுங்கள் 16 வயதுடையவர்கள்.
இந்த பதிவு 16 வயதிற்கு குறைந்த என் சகோதரர்களுக்காக!
நினைத்து பார்த்து சுவைக்க வேண்டும் என்று ஓவரா போக வேண்டாம்!
கல்வியிலும் கண்ணாய் இருக்கவும்!
Posted by R.ARUN PRASADH at 13:30:00 2 comments
Wednesday, 4 March 2009
மீண்டு வந்த சிங்கங்கள்!
Posted by R.ARUN PRASADH at 19:06:00 1 comments
Tuesday, 3 March 2009
உருவாகிவரும் புதிய சமயம்!
உலகில் பிறக்கின்ற ஒவ்வொருவரையும் நல்வழிபடுத்துவதில் சமயம் முக்கிய இடத்தை வகிக்கின்றது.
இன்று உலகில் ஏற்பட்டுள்ள பல பிரச்சினைகளுக்கு தீர்வாகவும் சமயம் இருக்கின்றது.
மனிதனாக பிறந்த ஒவ்வொருவனும், தனது சமயத்தை கடைபிடிக்க வேண்டியது அவசியம்!
அவ்வாறு கடைபிடிக்காத ஒவ்வொருவரும் நிச்சயம் ஒரு சந்திர்ப்பத்தில் பிழையான வழியை பின்பற்றுவார்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை!
என்ன இவ்வளவு காலமும் வேறு விடயங்களை பற்றி பதிவுகளை வெளியிட்டவன் தீடீரென இப்படி ஒரு பதிவை வெளியிடுகிறான் என்று தானே யோசிக்கிறீர்கள்!
கடந்த கிழமை இலங்கையிலுள்ள இரத்தினபுரி என்ற பிரதேசத்திற்கு சென்றிருந்தேன்.
அங்கு தற்போது ஒரு புதிய சமயம் உருவாகி வருவதாக தகவல்கள் என் காதில் விழுந்ததை கேட்டு அதிர்ச்சி அடைந்துடன், அதனை பற்றி ஆராய்ந்தும் பார்த்தேன்!
இலங்கையில் - இரத்தினபுரி என்ற மாவட்டத்தின் பெரும்பாலான பிரதேசங்கள் தமிழர்கள் வாழும் பிரதேசம் என்பது குறிப்பிடத்தக்க விடயம்!
இங்கு தற்போது ஒரு சமயம்! என்ன சமயம் தெரியுமா? கடவுள் இல்லை என்ற சமயம்! ஒருவன் பிறந்து அவன் தனக்கென ஒரு இடத்தை பிடிப்பதற்கு தானே காரணம் என்று கூறும் கூட்டம்!
இவர்கள் தான் பிழையான வழியில் செல்வதை விட மற்றவரையும் தம் வழிக்கு இழுக்கின்றனர்.
இது எப்படி உருவெடுத்தது. என்பதை பற்றி வினவிய போது!
இலங்கையில் நுவரெலிய மாவட்டத்தின் ஹட்டன் நகரிற்கு தமது கல்விக்காக சென்ற இரத்தினபுரியை சேர்ந்த ஒருவர், அங்கு சென்று, அவருக்கு கிடைத்த நண்பர்களின் பிழையான வழிக்காட்டலினால் அவர் இந்த சமயத்தில் வீழ்ந்துள்ளார்!
இப்படி தனது கல்வி நடவடிக்கைகளை முடித்து கொண்டு வந்த அந்த ஒருவர், இங்கு வந்து பலரை உருவாக்கி உள்ளார்.
புதிதாக உருவாகியுள்ள சமயத்தில் தற்போது 125 அங்கத்துவர்கள் இருக்கின்றனர்.
இவர்கள் கூறும் ஒரே கருத்து கடவுள் இல்லை! தான் பெற்ற கல்வி, தனக்கு கிடைத்த வாழ்க்கை, தன்னுள் உள்ள திறமை அனைத்தும் தன்னுடையது என்ற ஆணவத்தை அவர்கள் கொண்டுள்ளனர்.
இப்படி உருவாகியுள்ள இந்த கிருமிகளை ஒழிப்பது எப்படி! இந்த கிருமி தற்போது மிக வேகமாக பரவி வருகின்றது.
இதனை அழிப்பதற்கான நடவடிக்கைகளை நாம் நிச்சயம் எடுக்க வேண்டும். ஆனால் எப்படி அழிப்பது என்று இதுவரை எந்த விதமான யோசனையும் எனக்கு கிடைக்க வில்லை.
இரத்தினபுரி - இறக்குவானை பிரதேசம், சமயம் என்ற அழகை வெளிபடுத்தும் நகரம்!
இந்து, கிரிஸ்தவம், முஸ்லிம் மற்றும் பௌத்தம் ஆகிய அனைத்து மதங்களையும், அந்த மதங்களுக்குரிய புனித ஸ்தலங்களை நகருக்குள் கொண்டுள்ள இடம்!
இங்கு சமயத்திற்கு மரியாதை வழங்கப்படுகிறது. இவ்வாறான இடத்திலும் தற்போது இந்த கிருமி பரவுவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.
சமயம் என்ற சொல் அனைவருக்கும் ஒன்றே! சமயம் என்பது ஒருவனின் மனசாட்சி என்பது தான் உண்மை!
இப்படி உருவாகியுள்ள சமயத்தில் உள்ள அந்த 125 அங்கத்துவர்களுக்கும் நிச்சயம் மனசாட்சி இல்லை என கூறுவதில் எவ்வித சந்தேகமும் இல்லை!
மனிதனாக பிறந்த ஒருவன் நிச்சயம் ஒரு சமயத்தில் இருக்க வேண்டும்! அப்போதே அவனுடைய வாழ்க்கைக்கு இனிப்பு கிடைக்கும்!
இந்த கிருமியை உலகிற்கு பரவ விடாது நாம் அழிப்போம்! உங்களுடைய ஆலோசணைகளை நான் எதிர்பார்க்கின்றேன்! உங்கள் ஆலோசணை எனக்கு தேவை அழிக்க இந்த சமயத்தை!
Posted by R.ARUN PRASADH at 07:15:00 1 comments
Sunday, 1 March 2009
இந்திய கிரிக்கெட் வீரரின் சிலை லண்டனில்!
லண்டன் அருங்காட்சியகத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு மெழுகுச் சிலை நிறுவப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள 'மேடம் டுசாட்ஸ்' என்ற பிரபலமான மெழுகுச் சிலை அருங்காட்சியகம் ஏராளமான பயணிகளைக் கவரும் முக்கிய சுற்றுலா மையமாக விளங்கி வருகிறது.
இதில் உலகின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த புகழ்பெற்ற நட்சத்திரங்களுக்கு மெழுகுச் சிலை வைத்து கௌரவிக்கப்படுகிறது.
இங்கு இந்தியாவைச் சேர்ந்த பொலிவுட் நடிகர்கள் அமிதாப் பச்சன், ஷாருக்கான், ஐஸ்வர்யா ராய், சல்மான்கான் மற்றும் முன்னாள் பிரதமர்கள் இந்திரா காந்தி, ராஜீவ்காந்தி, பி.வி. நரசிம்மராவ் ஆகியோருக்கு ஏற்கனவே மெழுகுச் சிலை வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இருப்பினும், இந்தியாவைச் சேர்ந்த விளையாட்டு வீரரின் சிலையை அங்கு வைத்திருக்கவில்லை.
ஏனினும், இன்று அந்த புகழ்பெற்ற அருங்காட்சியகத்தில் இந்திய கிரிக்கெட் வீரரின் சிலை வைக்கப்பட்டு விட்டது.
இது சச்சின் டென்டுல்கர் மூலம் நிவர்த்தியாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஒரு நாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ஓட்டங்கள் குவித்தவர் என்ற பெருமையைப் பெற்றுள்ள டென்டுல்கருக்கு மெழுகுச் சிலை நிறுவி கௌரவப்படுத்த உள்ளோம் என அருங்காட்சியகத்தின் முகாமைத்துவம் தெரிவித்துள்ளது.
இதற்காக கடந்த வாரம் டென்டுல்கர் லண்டன் சென்றிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அப்போது அவரது உருவச் சிலையை தயாரிக்க ஏதுவாக அவரை அளவெடுக்கும் பணி முழுமையாக நடந்தது. தனது டெஸ்ட் கிரிக்கெட் உடையை நன்கொடையாக அளித்தார்.
டென்டுல்கரின் மெழுகுச் சிலை உருவாக்கும் பணி மேடம் டுசாட்டில் உள்ள சிற்பக் கூடத்தில் நடந்து வருகிறது.
இதற்காக ரூ. 3 கோடி செலவழிக்கப்படுகிறது.
டென்டுல்கரின் மெழுகுச் சிலை ஏப்ரல் மாதத்தில் திறக்கப்படவுள்ளதாக தெரிவிக்கின்றனர் அருங்காட்சியகத்தின் முகாமைத்துவத்தினர்.
Posted by R.ARUN PRASADH at 22:36:00 0 comments