Saturday 19 June 2010

விக்ரம் + பிரித்திவ்ராஜ் = ஐஸ்வர்யா ராய்!

ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே என கூறியுள்ள கருத்துக்கு அமைய அண்மையில் வெளியான ராவணன் திரைப்படம் அமைந்துள்ளது.

நேற்றைய தினம் வெளியான ராவணன் திரைப்படத்தின் முதற்கட்சி (வி.ஐ.பி காட்சி) நேற்று முன்தினம் காண்பிக்கப்பட்டது.



கொழும்பிலுள்ள சினிசிட்டி திரையரங்கில் 2.30 சிங்கம் படம் பார்க்க சென்ற எனக்கு, 7 மணிக்கு காண்பிக்கப்பட்ட ராவணன் வி.ஐ.பி காட்சியையும் பார்க்க சந்தர்ப்பம் கிட்டியது.

இராமாயண கதை தெரிந்த ஒவ்வொருவருக்கும் ராவணன் திரைப்படம் தெளிவாக புரியும்.

இயக்குநர் மணிரத்னத்தின் வழமையான பாணியில் அமைந்துள்ள இத்திரைப்படம். ஏதோ ஓர் வகையில் மாற்றத்தை தந்துள்ளது திரையுலகத்திற்கு.

ராவணன் திரைப்படத்தை பலர் பல கோணத்தில் பார்த்தாலும் நான் பார்த்தது சற்று வித்தியாசமான கோணத்தில் என திரைப்படத்தை பார்த்தவர்களின் கருத்துக்களை வைத்து புரிந்துக் கொண்டேன்.



இத்திரைப்படத்தின் கதாநாயகன் விக்ரமா? பிரித்திவ்ராஜா? என அனைவரது மனதிலும் சந்தேகம் தோன்றுகிறது.

நிச்சயமாக விக்ரம் தான்....... ஆனால் ஒரு கோணத்தில் பார்க்கும் போது பிரித்திவ்ராஜ் எனவும் கூறலாம்.

ஆனால் இந்த திரைப்படத்தின் கருவாக அமைந்துள்ளவர் யார் என தெரியுமா?

ஐஸ்வர்யா ராய்!

படத்தில் ஆரம்பத்தில் படகில் அறிமுகமாகும் கதாநாயகியை விக்ரம் கடத்திச் செல்கிறார். (இராவணன் சீதையை கடத்தி செல்லும் கட்சி) யில் படம் ஆரம்பிக்கின்றது.



பின்னர் கடத்திச் செல்லப்பட்ட ஐஸ்வர்யா ராயை தேடி வருகிறார் பிரித்திவ்ராஜ் (சீதையை தேடி வரும் இராமன்)

கடத்திச் செல்லப்பட்ட ஐஸ்வர்யா ராய் மீது காதல் ஏற்படுகிறது விக்ரமிற்கு. (சீதை மீது இராவணனுக்கு ஏற்படும் மோகம்)

இராமாயணத்திற்கும் ராவணனனிற்கும் இடையிலுள்ள வித்தியாசம் இங்கே தான் வேறுபடுகிறது.

ராவணன் திரைப்படத்தில் விக்ரமிற்கு ஐஸ்வர்யா ராய் மீது ஏற்படுவது காதல். மோகம் இல்லை.



ஒரு ஆணின் வெற்றிக்கும் தோல்விக்கும் பெண்ணே காரணம் என கூறியுள்ள கருத்தை இயக்குநர் மணிரத்னம் தெளிவுப்படுத்துகிறார் இந்த காட்சியின் பின்னர் தான்.

விக்ரம், ஐஸ்வர்யா ராய் மீது கொள்ளும் காதலினால் மாத்திரமே பிரித்திவ்ராஜ் மீதுள்ள வெறிதானமான, கொலை செய்ய வேண்டும் என்ற கோபத்தையும் விட்டு, பிரித்திவ்ராஜை கொலை செய்யாது விடுகிறார் விக்ரம்.

அதுமாத்திரமா? ஐஸ்வர்யா ராய் மீதுள்ள காதலினாலேயே 17 நாட்கள் கடத்தி வைத்திருந்த அவளையும் விடுவிக்கின்றார் விக்ரம்.



இது தான் பெண்ணினால் ஏற்படும் ஆண்ணில் தோல்விக்கான காரணம்..... என இயக்குநர் கூறும் கருத்து.

விடுவிக்கப்பட்ட அவளை அழைத்துச் செல்லும் பிரித்திவ்ராஜ் ரயிலில் வைத்து கேட்கும் கேள்விகள்.

அப்போது ஐஸ்வர்யா ராயின் நடிப்பு, கண்களில் கண்ணீர்..... சூப்பர்.......

பிரித்திவ்ராஜின் கருத்துக்களை கேட்டு மீண்டும் விக்ரமிடம் செல்லும் ஐஸ்வர்யா ராய்....

அவரிடம் கேட்கும் கேள்விகள்...... அதற்கு விக்ரம் வழங்கும் பதில்கள் சூப்பரோ.... சூப்பர்.......

இந்த காட்சி தான் ஆணின் வெற்றிக்கு பின்னால் பெண் இருக்கின்றார் என இயக்குநர் கூறும் இடம்.

இதற்கு பின்னர் இந்த படத்தை பற்றி கூறுவது படத்தை ரசித்து பார்த்த எனக்கு நல்லதல்ல.

இந்த படத்தின் எனது கோணம் தான் ஆணின் வெற்றிக்கும் தோல்விக்கும் பெண்ணே காரணம் என கூறும் இயக்குநரின் மறைமுக கருத்து.



அதுமாத்திரமா? படத்தின் ஒவ்வொரு காட்சியையும் இயக்குநர் இயற்கையுடன் கூடி விளையாடியுள்ளார். இயற்கையில் ஆட்புதத்தை நிச்சயமாக திரையரங்குகளிலேயே பார்க்க வேண்டும்.

மாற்றது தான் பாடல்...........

அனைத்து பாடல்களையும் இயக்குநர் படமாக்கியுள்ள விதமும் சூப்பர்.



அதிலும் படத்தின் 2ஆவது பாடல் உசுரே போகுது........ அந்த பாடலின் முதல் காட்சியில் ஐஸ்வர்யா ராய் மரக்கிளையிலிருந்து கீழே விழுகிறார்.... காட்சியை உண்மையாகவே ரசித்து பார்த்தேன்....

இயக்குநர் மணிரத்னத்திற்கு எனது வாழ்த்துக்கள்..............

4 comments:

Unknown said...

சூப்பர்.............................!இப்பதிவில்
நீங்கள் அடிக்கடி பயன் படுத்திய வார்த்தைப்போலவே
உங்கள் பதிவும் சூப்பர் படத்தை பார்த்து அதனை உங்கள் பார்வையில் விம்மர்சித்திருப்பதுவும் முன்னைய பதிவின் தைரியமும் சூப்பர்.......................!
வாழ்த்துக்கள்.

RJ Dyena said...

// 17 நாட்கள் கடத்தி வைத்திருந்த அவளையும் விடுவிக்கின்றார் விக்ரம்//

it should be 14 days isnt it?

//படத்தின் ஒவ்வொரு காட்சியையும் இயக்குநர் இயற்கையுடன் கூடி விளையாடியுள்ளார். இயற்கையில் ஆட்புதத்தை நிச்சயமாக திரையரங்குகளிலேயே பார்க்க வேண்டும்//.
this is the point u had commented na??

hm... nice ...article

ஸ்ரீ. அகிலன் said...

அருண் பிரசாத்,

இந்தக் கருத்துரையை நீங்கள் அனுமதிக்கவில்லை என்றால், மிக நிச்சயமாக எனது blog இல், உங்களது சகல பதிவுகளின் அருமை பெருமைகளைப் பற்றிக் கிழி கிழி என்று கிழிப்பது மட்டுமல்லாமல் அவற்றுக்கான இணைய முகவரிகளையும் கொடுப்பேன், அதுமட்டுமன்றி, நீங்கள் தொடர்பவர்களுக்கும், உங்களைத் தொடர்பவர்களுக்கும் இதை நிச்சயமாக மின்னஞ்சலிலும் அனுப்பி, அவர்களது பதிவுகளில் கருத்துரையாகவும் பதிவு செய்வேன்!
இதற்கு மேலும் இந்தக் கருத்துரையை அழிப்பதும் அனுமதிப்பதும் உங்கள் இஷ்டம்!

அருண், தாங்கள் சப்ரகமுவ மாகாணத்தைச் சேர்ந்தவர் என்று குறிப்பிட்டுள்ளீர்கள், தமிழ் கொஞ்சம் உங்களிடம் தத்தளிப்பது நியாயம் தான், ஆனால், அதற்காக இந்தளவு கஷ்டப் பட வேண்டியதில்லை. நீங்கள் வெற்றியின் வேலை செய்பவர், ஒரு முன்னணி ஊடகத்தின் பிரதிநிதி, எனவே உங்கள் எழுத்துக்களை நீங்கள் நினைத்தபடி கண்டபாட்டுக்கு வலையில் விட முடியாது, எதற்கும் ஒரு தரம் வேண்டாமா??
"அருணைச் சந்தித்த விவேக் ஒபரோய்" , இல்லை தெரியாமல் தான் கேட்கிறேன், இது உங்களுக்கே அதிகமாகப் படவில்லையா?
அதைக் கூட விட்டுவிடலாம், உங்களுக்குத் தமிழீழத்தை பற்றியோ, போராட்டங்களைப் பற்றியோ, தமிழ் நாட்டு மக்களின் உணர்வுகளைப் பற்றியோ ஏதும் தெரியுமா??
அண்டிப் பிழைத்து வாழும் ஒரு பகுதித் தமிழர்களை நீங்கள் பிரதிநிதித்துவப் படுத்தலாம், ஆனால் எல்லோரும் அப்படி அல்ல என்பதை ஏன் விளங்கிக் கொள்ள மாட்டேன் என்கிறீர்கள்? முகாம்களில் என்ன நடக்கிறது என்பதோ, வேறு எதுவுமோ உங்களுக்குத் தெரிந்திராத சந்தர்ப்பத்தில், நீங்கள் உங்கள் வாயை வைத்துக் கொண்டு சும்மாயிருக்கலாம், பதிவுக் கொடுமைகளைச் செய்ய வேண்டியதில்லை! உங்கள் பதிவினை வாசிக்கும் இந்தியத் தமிழர்கள், உங்களைப் போல தான் எல்லா ஈழத் தமிழரும் அறிவு கெட்டவர்களாக இருப்பார்கள் என்று எண்ணினால் என்ன செய்வது??

சரி, இவற்றுக்கெல்லாம் அரசியல் ஞானம், அனுபவ ஞானம் தேவை, உயர்தர வகுப்பில் அரசியல் விஞ்ஞானத்தைப் பாடமாக எடுத்துப் படிப்பதால் மட்டும் ஒருவனுக்கு அரசில் அறிவு வந்துவிடாது என்பதற்கு நீங்கள் சிறந்த உதாரணம்! (நீங்கள் கலைப் பிரிவு என்று நம்புகிறேன், நிச்சயமாக விஞ்ஞானப் பிரிவாக இருக்க வாய்ப்பில்லை, அப்படியே வேறு எதுவாக இருப்பினும், நீங்கள் கற்ற கல்வி எதுவும் உங்கள் எழுத்துக்களின் தரத்தை உயர்த்தவில்லை!)
இராவணன் படத்தைப் பற்றி உங்கள் விமர்சனத்தைப் படித்தபோது அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை, உண்மையில் உங்கள் மனதில் நீங்கள் என்ன நினைத்துக் கொண்டு இருக்கிறீர்கள்?? கதாநாயகன் யார் என்று எல்லோருக்கும் குழப்பம் வந்தாதாம் முதலில்? எனக்குத் தெரிந்து 10 வயதுப் பிள்ளை கூடக் கூறிவிடும் யார் கதாநாயகன் என்று! இப்படி இன்னும் பல கேனைத்தனமான கதைகள்!

போனது போகட்டும், இனியும் உங்கள் முதிர்வற்ற பதிவுக்குப்பைகளை மக்களின் முன்னால் கடைவிரிக்காதீர்கள், அது உங்களுக்கு மட்டுமல்ல, வெற்றி வானொலிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கும் தான்! மீண்டும் சொல்கிறேன், மொக்காக இருப்பது தவறல்ல, உங்கள் அறிவுமட்டம் என்பது genetics + environment தீர்மானிப்பது. ஆனால், நாம் மொக்காக இருக்கிறோம் என்பதைக் கொஞ்சம் புரிந்துகொண்ட மற்றவர்களுக்குக் கரைச்சல் தராமலிருப்பவன் முட்டாள்களில் புத்திசாலி! மீண்டும் சொல்கிறேன், உங்களுக்கு எதையும் எழுத உரிமை உண்டு, ஆனால், ஒரு ஊடகப் பிரதிநிதியாக இருந்து கொண்டு அதைச் செய்வீர்களானால், அது அந்த ஊடகத்தையும் அதை ரசிக்கும் மக்களையும் முட்டாள்களாக்கும் முயற்சி!

இதை நீங்கள் ஒரு ஊடகத்தில் வேலை செய்பவனுக்குரிய தைரியத்துடன் பிரசுரிக்கவில்லை எனில், நான் முதலில் கூறியது போலவே, நிச்சயமாக எல்லோருக்கும் இதை அனுப்பி, எனது ப்ளாக் இலும் பதிவு செய்வேன்!


-ஸ்ரீ. அகிலன்

Anonymous said...

நான் தான் அருண் எழுதுகிறேன். நன்றி ஐயா உங்களது அருமையான அறிவான கருத்திற்கு, இது எனது தனிப்பட்ட வலைத்தளம். நிறுவனத்திற்கும் எனது வலைத்தளத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை.

எனக்கிருக்கும் தமிழ் அறிவை பற்றி நீங்கள் ஆராய வேண்டிய அவசியம் இல்லை. தமிழ் அறிவு இல்லை என்றால் இன்று நான் இந்த நிறுவனத்தில் கடமையாற்ற முடியாது.

எனக்கு தமிழ் அறிவு இல்லை என்றால் சுமார் இரு வருடங்களுக்கு முன்னரே நிறுவனம் என்னை வெளியேற்றியிருக்கும்.

எனக்கு நீங்கள் யார் என்று தெரியாது. ஆனாலும் பர வாயில்லை. என்னுடைய தரத்தை பற்றி பேச உங்களுக்கு உரிமை கிடையாது.

முதலில் நான் எழுதியுள்ள வசனத்தை சரி;யாக பிரசுரிக்க கற்றுக் கொள்ளுங்கள்.. “அருணைச் சந்தித்த விவேக் ஒபரோய்” இல்லை.. அருணை சந்தித்தார் விவேக் ஒப்ராய்!... இதுதான் தலைப்பு.

ஊடகவியலாளர்களை அழைத்தது விவேக் ஒப்ராய் தான்.. நாங்கள் அழைக்கவில்லை அவரை. அப்படி என்றால் யார் யாரை சந்தித்தது என நீங்களே நினைத்துக் கொள்ளுங்கள்.

தமிழீழத்தை பற்றியும், போராட்டங்களைப் பற்றியும், தமிழ் நாட்டு மக்களின் உணர்வுகளை பற்றியும் உங்களை விடவும் எனக்கு நன்றாகவே தெரியும்.

தமிழீழத்தை பற்றி நான் எவ்வித கருத்துக்களையும் முன்வைக்கவில்லை.

போராட்டம் மற்றும் தமிழ் நாட்டை பற்றியே கருத்துக்களை வெளியிட்டேன்.

தமிழ் மக்கள் சமூகத்தில் ஒரு நிலைக்கு வர உங்களை போன்ற தமிழர்கள் தான் தடையாக அமைகிறார்கள். உங்களுடைய கருத்துக்களே அதை தெளிவுப்படுத்துகின்றன.

மோதல்களினால் பாதிக்கப்பட்டுள்ள சுமார் 30 சதவீத இலங்கை தமிழர்களின் எதிர்காலத்தை பற்றி நான் சிந்திக்க. அதை நீங்கள்?

தமிழர்களுக்காக போராட்டங்களை நடாத்தும் இந்தியர்கள், பாதிக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர்களுக்கு உதவிகளை வழங்கி அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தினால் யாருக்கு பெருமை.......

தமிழர்களாகிய எமக்கு தான். அதற்கும் தடையாக அமைவது உங்களை போன்ற கீழ் தர தமிழர்கள் தான் என்பது உங்களுடைய கருத்துக்;களிலிருந்து உறுதியாகின்றது.

எனது இந்த பதிவிற்காக அனைத்து ஊடக நண்பர்கள் மற்றும் ஏனைய நண்பர்கள் வாழ்த்துக்களை தெரிவிக்க, கீழ் தரமான நீங்கள் தான் பாதகமான பதிலை அளித்துள்ளீர்கள் நண்பா!

எனது பதிவை எதிர்ப்பவர்கள் அதிகமாக இருப்பார்களாயின் எனக்கு வாக்களிக்க மறுப்பு தெரிவித்திருக்கலாமே?

எனது வலைப்பதிவின் கட்டுரை கடந்த ஞாயிற்றுக்கிழமை தினக்குரல் பத்திரிகையில் வெளியானது. அதற்கு என்ன பதில் உங்களிடம் உண்டு.

இராவணன் படத்தின் பெயர் அல்ல ராவணன். பதிவு செய்யப்பட்ட பெயரை மாற்ற முயற்சிக்க வேண்டாம்.

உங்களின் பொது அறிவின் மட்டம் தெளிவாகின்றது. விமர்சனம் எழுதுவதை உங்களுக்கு யாரும் சொல்லி கொடுத்ததில்லை போல. மக்களின் மனதில் எதிர்பார்ப்புக்களை வைத்து எழுதுவது தான் விமர்சனம்.

முக்கிய விடயம் தான் இது தனிப்பட்ட வலைத்தளம் நிறுவனத்துடன் ஒப்பிட வேண்டாம்....

எனக்குள்ள தைரியம் எனக்கு போதும். தமிழீழ போராட்டங்களை உங்களால் தைரியமாக எழுத முடியுமா? ஆனால் என்னால் முடியும். காரணம் நான் தைரியமானவன். அதனால் தான் பெயருடன் எழுதுகிறேன்.

இறுதியாக கூறுகிறேன் என்னை பற்றி யாரிடம் கூறினாலும் நான் அச்சப்படவோ, அவமானப்படவோ போவதில்லை.

உங்களை விட எனக்கும் ஆட்களை தெரியும்..... நானும் தயார்.