Saturday 26 June 2010

யாழ் தேவியில் பிரவேசித்த நான்...... இப்போது தினக்குரலிலும்......

பல வருடங்களாக வலைத்தளத்தை எழுதிய எனக்கு யாழ் தேவி மற்றும் தினக்குரல் வழங்கியது பட்டம்.

அது தான் கடந்த ஞாயிற்றுகிழமை தினக்குரல் பத்திரிகையில் வெளிவந்த எனது விபரங்களும் எனது வலைத்தளத்தின் ஆக்கமும்.



நன்றி யாழ்.தேவி
நன்றி தினக்குரல்

Tuesday 22 June 2010

அழியவில்லை தமிழ்!

உலகில் அழியாத, யாராலும் அழிக்க முடியாத மொழிகள் பல இருந்தாலும், பழைமை வாய்ந்த செம்மொழி என்றால் அது தமிழ் மொழியே!

நாம் பேசும் இந்த தமிழ் மொழி உலகிலுள்ள அனைத்து மொழிகளையும் விட அழகான மொழி.




பல மொழிகள் அழிவடைந்துள்ளதுடன், தொடர்ந்தும் அழிவடைந்து வருகின்றன.

இப்படி அழிவடைந்துள்ள மற்றும் அழிவடைந்துவரும் மொழிகளிலும் தமிழ் மொழி என்றுமே அழியாது என்பதையும் அழியவில்லை என்பதையும் உறுதி செய்யும் வண்ணம் நடைபெறுகின்றது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு.

இந்த மாநாட்டில் பங்குப்பற்ற எனக்கு வாய்ப்பு கிட்டவில்லை என்பதை எண்ணி என்றுமே இல்லாதளவு என் மனம் கஷ்டப்படுகிறது.

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு சிறப்புற நடைபெற தமிழன் என்ற ரீதியிலும், இலங்கை வாழ் தமிழன் என்ற வகையிலும் எனது வாழ்த்துக்கள்!


உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டிற்காக இயற்றப்பட்ட பாடல்.

Saturday 19 June 2010

விக்ரம் + பிரித்திவ்ராஜ் = ஐஸ்வர்யா ராய்!

ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே என கூறியுள்ள கருத்துக்கு அமைய அண்மையில் வெளியான ராவணன் திரைப்படம் அமைந்துள்ளது.

நேற்றைய தினம் வெளியான ராவணன் திரைப்படத்தின் முதற்கட்சி (வி.ஐ.பி காட்சி) நேற்று முன்தினம் காண்பிக்கப்பட்டது.



கொழும்பிலுள்ள சினிசிட்டி திரையரங்கில் 2.30 சிங்கம் படம் பார்க்க சென்ற எனக்கு, 7 மணிக்கு காண்பிக்கப்பட்ட ராவணன் வி.ஐ.பி காட்சியையும் பார்க்க சந்தர்ப்பம் கிட்டியது.

இராமாயண கதை தெரிந்த ஒவ்வொருவருக்கும் ராவணன் திரைப்படம் தெளிவாக புரியும்.

இயக்குநர் மணிரத்னத்தின் வழமையான பாணியில் அமைந்துள்ள இத்திரைப்படம். ஏதோ ஓர் வகையில் மாற்றத்தை தந்துள்ளது திரையுலகத்திற்கு.

ராவணன் திரைப்படத்தை பலர் பல கோணத்தில் பார்த்தாலும் நான் பார்த்தது சற்று வித்தியாசமான கோணத்தில் என திரைப்படத்தை பார்த்தவர்களின் கருத்துக்களை வைத்து புரிந்துக் கொண்டேன்.



இத்திரைப்படத்தின் கதாநாயகன் விக்ரமா? பிரித்திவ்ராஜா? என அனைவரது மனதிலும் சந்தேகம் தோன்றுகிறது.

நிச்சயமாக விக்ரம் தான்....... ஆனால் ஒரு கோணத்தில் பார்க்கும் போது பிரித்திவ்ராஜ் எனவும் கூறலாம்.

ஆனால் இந்த திரைப்படத்தின் கருவாக அமைந்துள்ளவர் யார் என தெரியுமா?

ஐஸ்வர்யா ராய்!

படத்தில் ஆரம்பத்தில் படகில் அறிமுகமாகும் கதாநாயகியை விக்ரம் கடத்திச் செல்கிறார். (இராவணன் சீதையை கடத்தி செல்லும் கட்சி) யில் படம் ஆரம்பிக்கின்றது.



பின்னர் கடத்திச் செல்லப்பட்ட ஐஸ்வர்யா ராயை தேடி வருகிறார் பிரித்திவ்ராஜ் (சீதையை தேடி வரும் இராமன்)

கடத்திச் செல்லப்பட்ட ஐஸ்வர்யா ராய் மீது காதல் ஏற்படுகிறது விக்ரமிற்கு. (சீதை மீது இராவணனுக்கு ஏற்படும் மோகம்)

இராமாயணத்திற்கும் ராவணனனிற்கும் இடையிலுள்ள வித்தியாசம் இங்கே தான் வேறுபடுகிறது.

ராவணன் திரைப்படத்தில் விக்ரமிற்கு ஐஸ்வர்யா ராய் மீது ஏற்படுவது காதல். மோகம் இல்லை.



ஒரு ஆணின் வெற்றிக்கும் தோல்விக்கும் பெண்ணே காரணம் என கூறியுள்ள கருத்தை இயக்குநர் மணிரத்னம் தெளிவுப்படுத்துகிறார் இந்த காட்சியின் பின்னர் தான்.

விக்ரம், ஐஸ்வர்யா ராய் மீது கொள்ளும் காதலினால் மாத்திரமே பிரித்திவ்ராஜ் மீதுள்ள வெறிதானமான, கொலை செய்ய வேண்டும் என்ற கோபத்தையும் விட்டு, பிரித்திவ்ராஜை கொலை செய்யாது விடுகிறார் விக்ரம்.

அதுமாத்திரமா? ஐஸ்வர்யா ராய் மீதுள்ள காதலினாலேயே 17 நாட்கள் கடத்தி வைத்திருந்த அவளையும் விடுவிக்கின்றார் விக்ரம்.



இது தான் பெண்ணினால் ஏற்படும் ஆண்ணில் தோல்விக்கான காரணம்..... என இயக்குநர் கூறும் கருத்து.

விடுவிக்கப்பட்ட அவளை அழைத்துச் செல்லும் பிரித்திவ்ராஜ் ரயிலில் வைத்து கேட்கும் கேள்விகள்.

அப்போது ஐஸ்வர்யா ராயின் நடிப்பு, கண்களில் கண்ணீர்..... சூப்பர்.......

பிரித்திவ்ராஜின் கருத்துக்களை கேட்டு மீண்டும் விக்ரமிடம் செல்லும் ஐஸ்வர்யா ராய்....

அவரிடம் கேட்கும் கேள்விகள்...... அதற்கு விக்ரம் வழங்கும் பதில்கள் சூப்பரோ.... சூப்பர்.......

இந்த காட்சி தான் ஆணின் வெற்றிக்கு பின்னால் பெண் இருக்கின்றார் என இயக்குநர் கூறும் இடம்.

இதற்கு பின்னர் இந்த படத்தை பற்றி கூறுவது படத்தை ரசித்து பார்த்த எனக்கு நல்லதல்ல.

இந்த படத்தின் எனது கோணம் தான் ஆணின் வெற்றிக்கும் தோல்விக்கும் பெண்ணே காரணம் என கூறும் இயக்குநரின் மறைமுக கருத்து.



அதுமாத்திரமா? படத்தின் ஒவ்வொரு காட்சியையும் இயக்குநர் இயற்கையுடன் கூடி விளையாடியுள்ளார். இயற்கையில் ஆட்புதத்தை நிச்சயமாக திரையரங்குகளிலேயே பார்க்க வேண்டும்.

மாற்றது தான் பாடல்...........

அனைத்து பாடல்களையும் இயக்குநர் படமாக்கியுள்ள விதமும் சூப்பர்.



அதிலும் படத்தின் 2ஆவது பாடல் உசுரே போகுது........ அந்த பாடலின் முதல் காட்சியில் ஐஸ்வர்யா ராய் மரக்கிளையிலிருந்து கீழே விழுகிறார்.... காட்சியை உண்மையாகவே ரசித்து பார்த்தேன்....

இயக்குநர் மணிரத்னத்திற்கு எனது வாழ்த்துக்கள்..............

Thursday 17 June 2010

தமிழீழ துரோகி நான் - சீமானை சந்திக்க வேண்டும்!

"இலங்கை சிங்கப்பூராக மாறி வருகிறது" என எனது முன்னைய பதிவில் தெரிவித்த கருத்திற்கு நான் தமிழீழ துரோகி என கருத்துக்களை தெரிவித்திருந்தனர்.



தமிழீழ துரோகி என வெளியிடப்பட்ட கருத்து இங்கே!


ஏன்? இலங்கையில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களில் கொழும்பும் முக்கிய இடத்தை வகிக்கின்றது அல்லவா?

கொழும்பு சிங்கப்பூராக மாறினால் தமிழர்களின் செயற்பாட்டிற்கு பெருமளவு உதவியாக இருக்கும் என்ற செய்தி என் மனதில் சந்தோஷத்தை ஏற்படுத்தியது.

அதற்காகவே நான் அப்படியாக கருத்து முன்வைத்தேன். அந்த வசனத்திற்கு நான் மன்னிப்பு கோர போவதும் இல்லை. காரணம் அந்த வசனம் தமிழர்களின் நன்மையை கருதியே!

மேலும் இலங்கை பிரச்சினை தொடர்பாக கருத்துக்களை வெளியிட்டு வரும் இயக்குநர் சீமானை நான் சந்திக்க வேண்டும்.



அவரை சந்தித்து இலங்கையின் தற்போதைய உண்மை நிலையை கூற வேண்டும்.

காரணம் இலங்கை பிரச்சினை தொடர்பாக பல்வேறு கருத்துக்களை வெளியிட்டுவரும் தமிழ் நாடு இலங்கையில் எஞ்சியுள்ள சுமார் 30 சதவீத தமிழர்களை பற்றி சிந்திக்கவில்லை என இலங்கை வாழ் தமிழர் பலரின் மனதில் தோன்றுகிறது.

தமிழ் நாட்டில் அழுத்தங்கள் தொடர்ந்தும் இலங்கைக்கு விடுக்கப்படும் பட்சத்தில் இலங்கை மீதான சர்வதேசத்தின் கவனம் அதிகரிக்கும்.

அதனால் சர்வதேசத்தின் உதவிகள் முற்றாக குறைவடைவதுடன் மோதல்களினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கான உதவிகளை வழங்குவதிலும் அரசாங்கத்திற்கு சிரமம் ஏற்படும்.



இலங்கை தமிழர்களின் எதிர்கால நலனை சிந்தித்து தயவு செய்து ஆர்ப்பாட்டங்களை கைவிட்டு, தமிழர்களுக்கான உதவிகளை வழங்குமாறு மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் இலங்கை தமிழர்களுக்கு சமவுரிமை வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்து தமிழ் நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆர்ப்பாட்டங்கள் தமிழர்களின் ஒற்றுமையை வெளிப்படுத்துகிறது.

ஆனால் அதிலும் பல்வேறு பிரச்சினைகள் உள்ளதை ஆர்ப்பாட்டக்காரர்கள் நினைத்து பார்க்கின்றார்களா? என்ற கேள்வி என் மனதில் தோன்றி விட்டதனாலேயே இவ்வாறு தெரிவித்தேன்.

அத்துடன் இலங்கையிலுள்ள இந்திய முதலீட்டாளர்களின் பொருட்களை தமிழ் நாட்டில் நுகர வேண்டாம் என தமிழக அரசியல்வாதிகள் தமிழக மக்களிடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.



அவர்களின் அவ்வாறான நடவடிக்கைகளினால் பாதிக்கப்பட போது இலங்கையில் எஞ்சியுள்ள மிகுதி தமிழர்கள் தான் என்ற நினைப்பு அவர்களின் உள்ளத்தில் உள்ளதா?


இவர்களின் எதிர்காலம் குறித்தும் தயவு செய்து தமிழ் நாட்டு அரசியல்வாதிகள் மற்றும் திரையுலகத்தினர் நினைத்து பார்க்க வேண்டும்.

மோதல்களினால் பாதிக்கப்பட்ட பெரும்பான்மையான மக்கள் மீள்குடியமர்த்தப்பட்டு அவர்களுக்கென ஒரு எதிர்காலத்தை அரசாங்கம் ஏற்படுத்தி கொடுத்துள்ளது.

அத்துடன் இந்தியாவினாலும் இலங்கைக்கு பல்வேறு நிதியுதவிகள் வழங்கப்பட்டு வருவதுடன் வீடுகளை அமைத்து கொடுப்பதாக இந்திய மத்திய அரசு அறிவித்துள்ளது.

இப்படியான போராட்டங்களை நீங்கள் நடத்தி வருகின்றீர்கள். சரி வரவேற்கிறேன்.

ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் இலங்கை வாழ் தமிழர்களுக்கு அரசாங்கம் வழங்கிவரும் சலுகைகளை நிறுத்தி இந்தியாவிடமே பெற்றுக் கொள்ளுங்கள் என கூறினால் எங்கள் நிலை என்ன?

அதற்கு பிறகு தமிழ் நாட்டில் எமக்கு தங்க இடம் கிடைக்குமா? தமிழ் நாடு எமக்கு உதவிகளை வழங்குமா? இப்படியான கேள்வி எழுகிறது.

தயவு செய்து இவ்வாறான எதிர்ப்புக்களை தவிர்த்து இந்திய மத்திய அரசு மேற்கொண்டு வரும் உதவிகளுக்கு ஒத்துழைப்பை வழங்கி எமது எதிர்காலத்தை வளமாக்க உதவி செய்யுங்கள் என்பதே எனது தனிப்பட்ட கோரிக்கை.

Thursday 10 June 2010

நான் படித்தவை நீங்களும் .....................!

கலேக்டர் ஆகனுமுனா ஐ.ஏ.எஸ் படி........
பொலிஸ் ஆகனுமுனா ஐ.பி.எஸ் படி..........
டொக்டர் ஆகனுமுனா எம்.பி.பி.எஸ் படி...........
நாசமா போகனுமுனா எஸ்.எம்.எஸ் படி...........



எஸ்.எம்.எஸ்ஸிற்கான ஆர்த்தம்.
S - சிங்கம் அனுப்பி (Singamm Anuppi)
M – மன்கி படிக்கிற (Monkey Padikira)
S - ஸ்மோல் பைல் (Small File)

என்ன பார்க்கிறீங்க?
யாருக்காவது அனுப்பி நீங்களும் சிங்கமாக மாறுங்க!



“L” is 12th
“O” is 15th
“V” is 22nd
“E” is 5th
Total of “LOVE” is 54
But similary
“F” is 6th
“R” is 18th
“I” is 9th
“E” is 5th
“N” is 14th
“D” is 4th
“S” is 19th
“H” is 8th
“I” is 9th
“P” is 16th
Total of “FRIENDSHIP” is 108
Exactly twice of 54 So the FRIENDSHIP is twice the value of LOVE



Sometimes my MIND asks........
Why I MISS U......?
Why I CARE U....?
Why I REMEMBER U....?
Why I SMS U....?
Then my HEART answers.......
It’s simply becouse SMS IS FREE........




Hi Un mobilla
enna problem?
Un numberkku
dialpannina
“WELCOME TO MENTAL HOSPITAL. LOOSU IS BUSY”
Enru solluthu.......




Friendship is a relationship between EYE and HAND. When HAND gets injury EYE will cry. When EYE cries HAND will wipe it....... Thats FRIENDSHIP.........

Tuesday 8 June 2010

ஐபா வழங்கிய அனுபவங்கள்!

உலக திரைப்படங்களில் 2ஆவது இடத்திலுள்ள பாலிவுட் திரைப்படத்தின் விருது வழங்கும் விழாவான ஐபா இலங்கையில் மிக சிறப்பாக நடைபெற்று முடிவடைந்ததையிட்டு இலங்கையர்களாகிய நாம் பெருமைப்பட வேண்டும்.


ஐபாவில் அருண்

வெளியில் எவ்வித பிரச்சினைகளும் இல்லாமல் முடிவடைந்த ஐபா உள்ளே பல்வேறு பிரச்சினைகளை சந்தித்தமை யாரும் அறிந்த மறைக்க முடியாத உண்மை.

இப்படி யாரும் அறிந்த மறைக்க முடியாத உண்மைகளிலும் மறைந்து கிடக்கும் பல்வேறு உண்மைகளை யாரும் அறிந்திருக்க மாட்டார்கள் (ஐபா செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்களை தவிர)

இலங்கையில் நடைபெற்ற 11ஆவது ஐபா விருது வழங்கும் வைபவத்;தின் பெரும்பாலான பெறுப்புக்களை அரசாங்கம் ஏற்று நடாத்தினாலும் கூட இறுதி நிகழ்ச்சிகளின் ஏற்பாடுகளை ஐபா ஏற்பாட்டு குழுவினரே எடுத்து நடத்தினர்.


ஐபாவில் அருண்

இப்படி இருக்கின்ற நிலையில் ஜுன் மாதம் 3ஆம் திகதி முதலாவதாக ஐபாவின் உத்தியோகப்பூர்வ ஊடகவியலாளர் மாநாடு கொழும்பு சினமன் கிரேன்ட் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது.

அன்று முதலே ஊடகவியலாளராகிய எமக்கு பிரச்சினைகள் ஆரம்பமாயிற்று.

அன்றைய தினம் எமது கமராக்களை பொருத்துவதற்கு கூட இடம் இருக்கவில்லை. அத்துடன், வீடியோவை எடுத்துக்கொள்ள முடியாத நிலை.

பல்வேறு கஷ்டங்களின் மத்தியிலும் நாங்கள் எமது கடமைகளை சரிவர செய்து முடித்துவிட்டு அலுவலகத்திற்கு திரும்பினோம்.


நடிகர் நீல் நித்தின் முக்கேஷ்

மீண்டும் அலுவலகத்திலிருந்து சரியாக 4 மணியளவில் மீண்டும் கொழும்பின் மிக பிரபல்யமான நட்சத்திர விடுதியொன்றிற்கு வருமாறு ஊடகவியலாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

அந்த அழைப்பை அடுத்து நாங்கள் அங்கு சென்றோம். அங்கு சென்றதும் தான் தெரிகிறது. பாதுகாப்பு காரணங்கள் கருதி சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டே எம்மை அழைத்தார்கள் என.

சோதனை நடவடிக்கைகள் முடிவடைந்த பின்னர் பஸ் ஒன்றில் ஏற்றி கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்திற்கு எம்மை பொலிஸ் பாதுகாப்பின் மத்தியில் அழைத்து சென்றார்கள்.

அங்கு மீண்டும் எம்மை சோதனை செய்ய வேண்டும் என பொலிஸார் அழுத்தம் கொடுக்க பொலிஸாருக்கும் ஊடகவியலாளர்களுக்கும் இடையில் வாய்த்தர்க்கம் அதிகரித்து பின்னர் சோதனைகள் இன்றி உள்ளே செல்ல அனுமதி வழங்கினர்.

அப்படா பிரச்சினைகள் அனைத்து முடிவிற்கு வந்து விட்டது நிம்மதியாக உள்ளே சென்று நிகழ்ச்சிகளை பார்க்கலாம் என எண்ணத்துடன் உள்ளே சென்றால்............

ஊடகவியலாளர்களுக்காக ஒரு பகுதி.........

ஒரு வசதிகளும் இன்றி வெளியில்...........


கணினிவை வைக்க இடமில்லாத ஊடகவியலாளரொருவர் தரையில் கணினிவை வைத்து வேலை செய்கிறார்.

உட்கார்வதற்கு ஓர் இடமில்லை.... குடிப்பதற்கு தண்ணீர் இல்லை...... உண்ணுவதற்கு உணவில்லை......

இப்படியான பல இன்னல்களுக்கு மத்தியில் சுமார் 6 மணிநேரம்........ அன்றைய தினத்தை யாராலும் மறக்க முடியாது.......

அதனைத் தொடர்ந்து இரவு உணவு 11 மணிக்கு வழங்கப்பட்டு வீடு செல்லும் போது சுமார் அதிகாலை ஒரு மணியிருக்கும் மீண்டும் அடுத்த நாள்.......... 7 மணிக்கு அலுவலகத்தில்.......

அன்றைய தினம் கிரிக்கெட் சுற்றுப் போட்டி.......

அதற்கும் அப்படிதான் இருக்கும் என்ற அச்சத்தில் சென்ற எமக்கு ஒரு மாற்றம்.

மைதானத்திற்கு உள்ளேயே செல்ல அனுமதி வழங்கப்பட்டதுடன், போட்டிகளையும் மைதானத்தில் இருந்தவாறே கண்டு மகிழ முடிந்தது.

மனதிற்கு மகிழ்ச்சி...... முதல் நாள் சந்தித்த கஷ்டங்களுக்கு ஒரு பரிசு தான் ஐபா கிரிக்கெட் போட்டி.....


மைதானத்தில் சூரியன் எவ்.எம் செய்தி ஆசிரியர் கிருஸ்ணாவுடன் நடிகர் விவேக் ஒப்ரோய்!

உண்ணுவதற்கு உணவு எமக்கே, ஒரு அறை, என அனைத்தையும் வழங்கினர் ஐபா ஏற்பாட்டு குழுவினர்

ஆனால் அன்றைய தினமும் குடிநீரை மறந்து விட்டனர் ஐபா குழுவினர்.......

3ஆவது நாள் காலை முதல் வேலை ஆரம்பம்...............

காலை 9 மணி முதல் கொழும்பு சினமன் கிரேன்ட் நட்சத்திர விடுதியில் ஹிந்தி பட வெளியீடுகள் புத்தக வெளியீடு என பல்வேறு நிகழ்ச்சிகள் தொடர்ந்து மதியம் உணவும் வழங்கப்பட்டது.

இந்நிலையில் அனைவரும் எதிர்பார்த்த ஐபா விருது வழங்கும் வைபவம்.......

மீண்டும் அதே நட்சத்திர விடுதி, ஊடகவியலாளர்கள் சோதனை, மீண்டும் பஸ், பொலிஸ் பாதுகாப்பு, சுகததாஸ உள்ளகர அரங்கிற்கு பாதுகாப்பின் மத்தியில் அழைத்து செல்லப்பட்ட எமக்கு தனியே ஓர் இடம்.........

முக்கிய பிரமுகர்கள் வருகை தரும் வாயில்....... அருகில் எமக்கான இடம்..

இன்றைய தினமும் கடந்த 3 நாட்களை விட ஓர் மாறுதல் அதுதான் குடிநீர் போத்தல்கள் வழங்கப்பட்டன.


சுகததாஸ உள்ளக அரங்கில் நிகழ்ச்சிகளை பார்வையிடும் அருண்

ஒரு திருப்தி......... வருகை தந்த அனைத்து முக்கிய பிரமுகர்களிடமும் பேட்டிகளை பதிவு செய்து 9 மணிக்கு நிகழ்ச்சிகளை பார்க்க சென்று விட்டோம்.

நான் எனது இந்த பதிவில் சில விடயங்களை வெளியிடவில்லை. பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியில் பதிவானது தான் எம்மால் வெளியிடப்பட்ட ஐபா செய்திகள்.........

ஒரு ஊடக நிறுவனத்திற்கு போட்டியாக இன்னுமொரு ஊடக நிறுவனம்.......

தனக்கு மாத்திரமே அவரது பேட்டி கிடைத்தால் போதும் என்ற எண்ணத்துடன் செயற்பட்ட அனைத்து ஊடகவியலாளர்களும் பாராட்டத்தக்கவர்கள்.

தான் கடமையாற்றும் நிறுவனத்திற்கான அயராது உழைத்த ஊடகவியலாளர்கள் நினைக்கும் போது மகிழ்ச்சி...... புரிந்துக் கொள்பவர்கள் புரிந்துக் கொண்டால் சரி....................



ஐபா நிகழ்வுகளின் போது இலங்கையிலுள்ள தமிழ் ஊடகங்களில் கடமையாற்றும் பலர் ஒன்று சேர்ந்திருந்தோம்.

சூரியன் கிருஸ்ணா, சக்தி ரஞ்ஜனி, வெற்றி அருண்

தினக்குரல் நிமல்ராஜ் மற்றும் வீரகேசரி கனகராஜா

Wednesday 2 June 2010

அருணை சந்தித்தார் விவேக் ஒப்ராய்!

சர்வதேச இந்திய திரைப்பட விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியடைந்துள்ள நிலையில் இன்றைய தினம் அனைத்து ஹிந்தி திரையுலகத்தினரும் இலங்கைக்கு வந்துள்ளனர்.


விவேக் ஒப்ராயுடன் அருண்

சர்வதேச இந்திய திரைப்பட விழாவையடுத்து கொழும்பு தொடர்ச்சியாக ஊடகவியலாளர் சந்திப்புக்கள் இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில் இன்றைய தினம் கொழும்பின் பிரபல விடுதியொன்றில் அனைத்து நடிகர்களும் தங்கியுள்ளனர்.

இப்படி இருக்கையில் நேற்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பல ஹிந்தி திரையுலகத்தினர் கலந்து கொண்டனர்.


விவேக் ஒப்ராய்

அதன்படி, விவேக் ஒப்ராய், ஜெக்லின் பெனார்ண்டே உள்ளிட்ட மேலும் பல திரையுலகத்தினர் கலந்து கொண்டனர்.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த விவேக் ஒப்ராய் தென்னிந்திய திரையுலகத்தினர் இலங்கைக்கு நிச்சயம் வந்திருக்க வேண்டும் என தெரிவித்தார்.

அவர்கள் இலங்கைக்கு வருகை தராதது மனதிற்கு வேதனை அளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தனது பூரண ஒத்துழைப்பை வழங்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சர்வதேச இந்திய திரைப்பட விழாவிற்கு இன்னும் ஒரு நாள் மாத்திரமே எஞ்சியுள்ள நிலையில் விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி என அரசாங்கம் அறிவித்துள்ளது.




இதனை முன்னிட்டு கொழும்பில் தற்போது பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் திரையுலகத்தினர் தங்கியுள்ள விடுதிக்கு அருகில் இன்று காலை முதல் வாகன நெரிசல் காணப்படுவதை எம்மால் அவதானிக்க முடிந்தது.




அதுமாத்திரமன்றி இந்நிகழ்விற்காக கொழும்பு தற்போது சிங்கப்பூராக மாறிவருகின்றமை மனதிற்கு சந்தேசத்தை தருகின்றது.

அப்படி என்றால் நாளை சர்வதேச இந்திய திரைப்பட விழா...............



Tuesday 1 June 2010

இலங்கை பெயரளவில் நடாத்தும் IIFA-2010

இலங்கையில் நடைபெறவுள்ள சர்வதேச இந்திய திரைப்பட விழா ஆரம்பமாக இன்னும் 2 நாட்கள் மாத்திரமே எஞ்சியுள்ளன.

இந்நிலையில் நேற்றைய தினம் சுற்றுலாத்துறை அமைச்சில் ஊடகவியலாளர் சந்திப்பொன்று நடைபெற்றது.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன உள்ளிட்ட மேலும் பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது சர்வதேச இந்திய திரைப்பட விழா தொடர்பான பல்வேறு அறிவித்தல்கள் விடுக்கப்பட்டன.




இலங்கையில் நடைபெறவுள்ள இவ்விழாவிற்காக அரசாங்கத்தினால் சுமார் 400 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.

இதேவேளை இவ்விழாவிற்காக சுகததாஸ உள்ளக அரங்கில் 2700 ஆசனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் 2200 ஆசனங்கள் ஏற்கனவே வெளிநாட்டவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் ஏற்பாட்டாளர்கள் இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் அறிவித்தனர்.

எஞ்சியுள்ள 500 ஆசனங்களில் 100 ஆசனங்கள் மாத்திரமே இலங்கையர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த ஏற்பாட்டாளர்கள் அவற்றை பதிவு செய்பவர்களுக்கு மாத்திரமே வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

மிகுதியாக உள்ள 400 ஆசனங்களும் இலங்கையிலுள்ள விசேட அதிதிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர் ஏற்பாட்டாளர்கள்.

அதேவேளை இலங்கையர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள 100 ஆசனங்களையும் வெளிநாட்டவர்கள் பதிவு செய்யும் பட்சத்தில் இலங்கையர்களுக்கு விழாவை கண்டுகளிக்க முடியாத நிலை ஏற்படும்.

சர்வதேச இந்திய திரைப்பட விழாவானது இலங்கையர்களை மையமாகக் கொண்டு நடாத்தப்படவில்லை என இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் மறைமுகமாக அறிவித்தனர்.




அது எப்படி என்றால் அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளின் தனிநபர் வருமானத்தை பற்றி சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. காரணம் தமிழர்களாக பிறந்த எமக்கு அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளின் கஷ்டங்களை உணரகூடிய வகையில் உள்ளமை யாரும் அறிந்ததே.

இந்நிலையில் இந்த விழாவிற்காக டிக்கட்களின் விலைகளை கேட்டால் தலை சுற்றி கீழே வீழ வேண்டிய விலை தான்.

  • பிரதான விருதின் பிலட்டினம் பெக்கேஜ் 10000 அமெரிக்க டொலர். (இலங்கை ரூபா மதிப்பின் படி சுமார் 11 லட்சம்)

  • பிரதான விருதின் கோல்ட் பெக்கேஜ் 3000 அமெரிக்க டொலர். (இலங்கை ரூபா மதிப்பின் படி சுமார் 3 லட்சத்து 50 ஆயிரம்)

  • பிரதான விருதின் சில்வர் பெக்கேஜ் 2500 அமெரிக்க டொலர். (இலங்கை ரூபா மதிப்பின் படி சுமார் 3 லட்சத்து)

எப்படி விலை.........

அத்துடன், சர்வதேச இந்திய திரைப்பட விழாவை முன்னிட்டு எதிர்வரும் 4ஆம் திகதி கிரிக்கெட் போட்டியொன்று எஸ்.எஸ்.சி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இந்த போட்டியில் மூன்று அணிகள் பங்குபற்றவுள்ளன.

இதில் குமார் சங்கக்கார தலைமையிலான இலங்கை அணியும், பொலிவூட் நட்சத்திர நடிகர்களான சல்மன் கான், கிரித்திக் ரோஷன் ஆகியோர் தலைமையிலான இரு அணிகளும் இடம்பெறுகின்றன.




இந்த போட்டிக்கான டிக்கெட்கள் தற்போது விற்பனையில் உள்ளன.

இதற்கான டிக்கெட்டுகளை, இலங்கை கிரிக்கெட்டிலும், சுற்றுலாத்துறை விரிவாக்கற் பிரிவிலும், கொள்ளுப்பிட்டி இலக்கம் 113, 5வது ஒழுங்கையிலுள்ள டிக்கட் ஷொப்பிலும் பெற்றுக் கொள்ளலாம்.

டிக்கெட்டுகளுக்கான விலைகள் 1000/-, 3000/-, 4000/-, 5000/- மற்றும் 7500/- ஆகும்.

இது மாத்திரமே இலங்கையர்களுக்காக....... என கூறமுடியும்...

அத்துடன் சர்வதேச இந்திய திரைப்பட விழாவிற்காக இதுவரை 400 மில்லியன் ரூபாவினை அரசாங்கம் செலவிட்டுள்ளதாக பிரதி அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன குறிப்பிட்டார்.

இந்த தொகையினை 2012ஆம் ஆண்டிற்குள் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

எனினும் இவ்வாறு அரசாங்கத்தால் செலவிடப்படும் தொகை மீள சர்வதேச இந்திய திரைப்பட குழுவினால் வழங்கப்படமாட்டாது என்பது குறிப்பிடத்தக்கது.

செலவிடப்படும் தொகைக்கு ஆப்பு தான்.........

இந்த சுமையும் எமது தலையில்..................... மேலும் தகவல்கள் எதிர்வரும் பதிவுகளில்...........