Thursday 28 January 2010

மஹிந்த ராஜபக்ஷ எப்படி ஜனாதிபதி ஆனார்?

பல்வேறு கருத்துக்கள் பல்வேறு மோதல்கள் பல்வேறு அழுத்தங்கள் என்ற பலவற்றையும் தாண்டி இன்று மீண்டும் ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டுள்ளார்.



இவர் இலங்கையின் 5ஆவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாக பதவியை பெறுப்பேற்பதற்கு பல பாதைகளை கடந்த இன்று ஜனாதிபதியாக தொடர்ந்தும் இருக்க தெரிவாகியுள்ளார்.

1982ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல்.



1982ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் 30ஆம் திகதி முதலாவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டது.

இதன்படி, இந்த தேர்தலில் 81 லட்சத்து 45 ஆயிரத்து 15 பேர் வாக்களிக்க தகுதிப் பெற்றிருந்தனர்.

எனினும், இந்த தேர்தலில் 66 லட்சத்து 2 ஆயிரத்து 671 பேர் மாத்திரமே வாக்களித்துள்ளதுடன், 6 ஆயிரத்து 985 வாக்களிப்பு நிலையங்களில் இந்த தேர்தல் நடைபெற்றுள்ளது.

1982ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17ஆம் திகதி காலை 8 மணி முதல் முற்பகல் 11 மணி வரை வேட்பு மனுத்தாக்கல் செய்வதற்கான திகதி.

இந்த தேர்தலில் மொத்தமாக 6 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

இலங்கையின் முதலாவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதித் தேர்தல் 1982ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 20ஆம் திகதி நடைபெற்றது.

இந்த தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிட்ட ஜே.ஆர். ஜெயவர்தன 34 லட்சத்து 50 ஆயிரத்து 811 வாக்குகளை பெற்று இலங்கையின் முதலாவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.

அவரை எதிர்த்துஇலங்கை சுதந்திரக் கட்சி சார்பில் போட்டியிட்ட எச்.எஸ்.ஆர்.பீ. கோபேகடுவ 25 லட்சத்து 48 ஆயிரத்து 438 வாக்குகளை பெற்றார்.

1988ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல்.



1988ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 21ஆம் திகதி 2ஆவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டது.

இதன்படி, இந்த தேர்தலில் 93 லட்சத்து 75 ஆயிரத்து 742 பேர் வாக்களிக்க தகுதிப் பெற்றிருந்தனர்.

எனினும், இந்த தேர்தலில் 51 லட்சத்து 86 ஆயிரத்து 223 பேர் மாத்திரமே வாக்களித்துள்ளதுடன், 8 ஆயிரத்து 60 வாக்களிப்பு நிலையங்களில் இந்த தேர்தல் நடைபெற்றுள்ளது.

1988ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10ஆம் திகதி காலை 9 மணி முதல் முற்பகல் 11 மணி வரை வேட்பு மனுத்தாக்கல் செய்வதற்கான திகதி.

இந்த தேர்தலில் மொத்தமாக 3 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

இலங்கையின் 2ஆவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதித் தேர்தல் 1988ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 19ஆம் திகதி நடைபெற்றது.

இந்த தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிட்ட ரணசிங்க பிரேமதாஸ 25 லட்சத்து 69 ஆயிரத்து 199 வாக்குகளை பெற்று இலங்கையின் 2ஆவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.

அவரை எதிர்த்து இலங்கை சுதந்திரக் கட்சி சார்பில் போட்டியிட்ட சிறிமாவோ பண்டாரநாயக்க 22 லட்சத்து 89 ஆயிரத்து 960 வாக்குகளை பெற்றார்.

நிறைவேற்று அதிகாரமுடைய பதில் ஜனாதிபதி தெரிவு.



இலங்கையின் 2ஆவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ 1993ஆம் ஆண்டு மே மாதம் முதலாம் திகதி தமிழீழ விடுதலைப் புலிகளின் தற்கொலை தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்ததை அடுத்து, 1993ஆம் ஆண்டு மே மாதம் 7ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் ஒன்றை நடத்தாது இலங்கையில் 3ஆவது நிறைவேற்று அதிகாரமுடைய பதில் ஜனாதிபதியாக டி.பி.விஜயதுங்க தெரிவு செய்யப்பட்டார்.

1994ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல்.



1994ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் 17ஆம் திகதி 4ஆவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டது.

இதன்படி, இந்த தேர்தலில் ஒரு கோடியே 9 லட்சத்து 45 ஆயிரத்து 65 பேர் வாக்களிக்க தகுதிப் பெற்றிருந்தனர்.

எனினும், இந்த தேர்தலில் 77 லட்சத்து 13 ஆயிரத்து 232 பேர் மாத்திரமே வாக்களித்துள்ளதுடன், 9 ஆயிரத்து 580 வாக்களிப்பு நிலையங்களில் இந்த தேர்தல் நடைபெற்றுள்ளது.

1994ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதி காலை 9 மணி முதல் முற்பகல் 11 மணி வரை வேட்பு மனுத்தாக்கல் செய்வதற்கான திகதி.

இந்த தேர்தலில் மொத்தமாக 6 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

இலங்கையின் 4ஆவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதித் தேர்தல் 1994ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 9ஆம் திகதி நடைபெற்றது.

இந்த தேர்தலில் சந்திரகா பண்டாரநாயக்க குமாரதுங்க 47 லட்சத்து 9 ஆயிரத்து 205 வாக்குகளை பெற்று இலங்கையின் 4ஆவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.

அவரை எதிர்த்து போட்டியிட்ட வஜிர சிறிமத்தி திஸாநாயக்க 27 லட்சத்து 15 ஆயிரத்து 285 வாக்குகளை பெற்றார்.

1999ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல்.



1999ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 28ஆம் திகதி 5ஆவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டது.

இதன்படி, இந்த தேர்தலில் ஒரு கோடியே 17 லட்சத்து 79 ஆயிரத்து 200 பேர் வாக்களிக்க தகுதிப் பெற்றிருந்தனர்.

எனினும், இந்த தேர்தலில் 86 லட்சத்து 35 ஆயிரத்து 290 பேர் மாத்திரமே வாக்களித்துள்ளதுடன், 9 ஆயிரத்து 912 வாக்களிப்பு நிலையங்களில் இந்த தேர்தல் நடைபெற்றுள்ளது.

1999ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 16ஆம் திகதி காலை 9 மணி முதல் முற்பகல் 11 மணி வரை வேட்பு மனுத்தாக்கல் செய்வதற்கான திகதி.

இந்த தேர்தலில் மொத்தமாக 13 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

இலங்கையின் 5ஆவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதித் தேர்தல் 1999ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 21ஆம் திகதி நடைபெற்றது.

இந்த தேர்தலில் சந்திரகா பண்டாரநாயக்க குமாரதுங்க 43 லட்சத்து 12 ஆயிரத்து 157 வாக்குகளை பெற்று இலங்கையின் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாக தொடர்ந்தும் பதவி வகித்தார்.

அவரை எதிர்த்து போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 36 லட்சத்து 2 ஆயிரத்து 748 வாக்குகளை பெற்றார்.

2005ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல்.



2005ஆம் ஆண்டு செப்டெபர் மாதம் 19ஆம் திகதி 5ஆவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டது.

இதன்படி, இந்த தேர்தலில் ஒரு கோடியே 33 லட்சத்து 27 ஆயிரத்து 160 பேர் வாக்களிக்க தகுதிப் பெற்றிருந்தனர்.

எனினும், இந்த தேர்தலில் 98 லட்சத்து 26 ஆயிரத்து 778 பேர் மாத்திரமே வாக்களித்துள்ளதுடன், 10 ஆயிரத்து 748 வாக்களிப்பு நிலையங்களில் இந்த தேர்தல் நடைபெற்றுள்ளது.

2005ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 7ஆம் திகதி காலை 9 மணி முதல் முற்பகல் 11 மணி வரை வேட்பு மனுத்தாக்கல் செய்வதற்கான திகதி.

இந்த தேர்தலில் மொத்தமாக 13 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

இலங்கையின் 5ஆவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதித் தேர்தல் 2005ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 17ஆம் திகதி நடைபெற்றது.

இந்த தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ 48 லட்சத்து 87 ஆயிரத்து 152 வாக்குகளை பெற்று இலங்கையின் 5ஆவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.

அவரை எதிர்த்து போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 47 லட்சத்து 6 ஆயிரத்து 366 வாக்குகளை பெற்றார்.

2010ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல்.



மஹிந்த ராஜபக்ஷவின் ஜனாதிபதி பதவி காலம் நிறைவடைய இன்னும் இரு ஆண்டுகள் உள்ள நிலையில் 6ஆவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான ஜனாதிபதித் தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டது.

இதன்படி, இந்த தேர்தலில் 1 கோடியே 40 லட்சத்து 88 ஆயிரத்து 500 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றனர்.

எனினும், இந்த தேர்தலில் ஒரு கோடியே 4 லட்சத்து 95 ஆயிரத்து 451 பேர் மாத்திரமே வாக்களித்தனர்.

2009ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 17ஆம் திகதி காலை 9 மணி முதல் முற்பகல் 11 மணி வரை வேட்பு மனுத்தாக்கல் செய்வதற்கான திகதி.

இந்த தேர்தலில் மொத்தமாக 23 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

இலங்கையின் 6ஆவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதித் தேர்தல் 2010ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26ஆம் திகதி நடைபெற்றது.

இந்த தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ 60 லட்சத்து 15 ஆயிரத்து 934 வாக்குகளை பெற்று இலங்கையின் 5ஆவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாக தொடர்ந்தும் பதவி வகிக்க தகுதிப் பெற்றார்.

அவரை எதிர்த்து போட்டியிட்ட எதிர்கட்சிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா 41 லட்சத்து 73 ஆயிரத்து 185 வாக்குகளை பெற்றார்.

0 comments: