Saturday 29 August 2009

சந்திராயனை காணவில்லையாம்!


இந்தியாவினால் விண்வெளிக்கு அனுப்பி வைக்கப்பட்ட சந்திராயன்-1 விண்கலத்தின் தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

இதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் விண்வெளியை நோக்கி இஸ்ரோவினால் அனுப்பி வைக்கப்பட்ட சந்திராயன் - 1 விண்கலத்தின் தொலைக்காட்சி அளவிலான ஆராய்ச்சி கருவி 2008ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14ஆம் திகதி சந்திரனை சென்றடைந்துள்ளது.

அதன்மூலம் சந்திரனின் பாகங்கள் குறித்து விபரங்களை திரட்டிக் கொள்ள முடிந்துள்ளதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

அமெரிக்கா, ரஷ்யா, சீனா, ஜப்பான் போன்ற நாடுகளின் வரிசையின் இந்தியாவையும் இணைத்த செயற்பாடுகளில் சந்திராயன் 1 முக்கிய இடத்தை வகிக்கின்றது.

அத்துடன், தற்போது இந்தியா சந்திராயன் - 2 என்ற விண்கலத்தை நிர்மாணித்து வருவதாக இஸ்ரோ ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.

இவ்வாறு இந்தியாவினால் சந்திரனை நோக்கி அனுப்பி வைக்கப்பட்ட விண்கலத்திலிருந்து பல்வேறு தகவல்கள் பெற்றுக் கொள்ளப்பட்டன.

சந்திரனின் படங்கள், தற்போதைய சந்திரனின் உருவம் உள்ளிட்ட மேலும் பல விடயங்கள் இதன்மூலம் பெற்றுக் கொள்ள முடிந்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

சந்திராயன் 01 விண்கலம் அனுப்பி வைக்கப்பட்ட தகவல்கள் தொடர்பாக பார்வையிட:-
http://aprasadh.blogspot.com/2008/10/blog-post.html

4 comments:

ilangan said...

பதிவுக்கு நன்றி. நம்ம நாட்டுலயும் ஏதோ மேல விட்ப்போவதாக தகவல் வந்துச்சுதே . அது எங்க?

பைத்தியக்காரன் said...

எல்லாம் நம்ம (பணம்) கட்டின வரி தான் இப்போ சந்திரனுக்கு போய் காணாமப் போயிடுச்சாம்....

Unknown said...

ஐயயோ...
சந்திரனாவது இருக்கு தானே???
இரவு சந்திரன பாத்து தான் நான் அம்மா சாப்பாடு தருவா...
அத சரி சந்திராயன யார் கடத்தினதாம்? அவயோ? அல்லது இவயோ?

Anonymous said...

facebook likes
1000 facebook likes

http://drupalsn.com/learn-drupal/drupal-tutorials/converting-drupal-themes-drupal-6-drupal-7-my-favourite-additions-chan http://www.tbn.ca/retailer/rtdb/detail/211.htm?page=1
buy facebook likes facebook likes buy facebook likes
svchost.exe virus

1000 facebook likes buy facebook likes [url=http://1000fbfans.info]get facebook likes [/url] 1000 facebook likes