Thursday 14 May 2009

இந்திய செய்திகள் மற்றும் விளம்பரங்கள்.



இந்திய – தமிழக நாடாளுமன்ற தேர்தல்கள் நடைபெற்று முடிவடைந்த பின்னர், இந்தியாவிலுள்ள பல ஊடகங்கள் பல்வேறான செய்திகளை வெளியிட்டனர்.

இதில் முக்கியமாக சொல்ல வேண்டும் சன் மற்றும் கலைஞர் தொலைக்காட்சிகளின் செய்திகள்.

நடைபெற்று முடிவடைந்த தேர்தல்களில் எவ்வித அசம்பாவிதங்களும் ஏற்படவில்லை என செய்தி வெளியிட்டதை நாம் பார்க்க கூடியதாய் இருந்தது.

இந்த இரு ஊடகங்களை தவிர ஏனைய ஊடகங்கள் நேற்றைய தினம் அசம்பாவிதங்கள் ஏற்பட்டதாக வீடியோ காட்சிகளுடன் செய்தி வெளியிட்டனர்.

இவ்வாறு அந்த இரு ஊடகங்களும் செய்தி வெளியிடுவதற்கான காரணம் என்ன? தாம் சரி என்றால் உண்மையை வெளிப்படுத்தியிருக்கலாம் தானே!

கலைஞர் மற்றும் சன் நிறுவனங்களில் உரிமையாளர்கள் தேர்தலில் போட்டியிட்டதினாலா இப்படியான செய்திகள் வெளியிடுகின்றனர்.

இதில் இருந்தே பல உண்மைகளை நாம் தெளிவாக தெரிந்து கொள்ள முடிகிறது.

நான் மக்களுக்கு நன்மை செய்துள்ளேன். உதவிகளை செய்கிறேன்.

பாடசாலை மாணவர்களுக்கு பஸ் பாஸ் இலவசமாக வழங்கியுள்ளேன், அரசியின் விலை ஒரு ரூபாவாக குறைத்துள்ளேன், இலவசமாக டீ.வி வழங்கியுள்ளேன் என கடந்த காலங்களில் கலைஞர் தொலைக்காட்சியில் விளம்பரங்கள் ஒளிபரப்பாகின.

இவ்வாறு மக்களுக்கு உதவிகளை வழங்கினால் ஏன் நேற்றைய தினம் இடம்பெற்ற வன்முறைகள் குறித்த செய்தியை இரு தொலைக்காட்சிகளும் வெளியிடவில்லை.

இத்தனை காலமும் மக்களுக்கு உதவி வழங்கியது, தான் அரசியலில் தொடர்ந்து இருக்க வேண்டும் என்பதை கருத்திற்கொண்டே தவிர உண்மையான மனதுடன் இல்லை என்பது இதிலிருந்தே தெளிவாகின்றது.

பொதுவான தமிழகத்தில் அரசியலை வைத்து ஒரு பெரிய விளையாட்டே ஆரம்பித்துள்ளனர். இவரின் அரசியலை யாராலும் தொடர முடியுமா? வில்லன்

இந்த இரு தொலைக்காட்சிகளிலும் வன்முறைகள் மட்டுமின்றி தேர்தல் பதிவுகள் தொடர்பான செய்திகள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானவை என செய்திகளை பார்த்த அனைவரும் அறிந்து கொண்டுள்ளனர்.

இலங்கை பிரச்சினையிலேயே இம்முறை தேர்தல் பிரசாரத்தை கலைஞர் தொடர்ந்து விட்டார்.

உண்ணாவிரதம், மனித சங்கிலி போராட்டம், பதவி விலகுவதான வார்த்தைகள் என மேலும் பல நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

உண்மையாக இலங்கைக்கு ஆதரவு வழங்குவதாக இருந்தால் உண்ணாவிரதத்தை மேற்கொண்டவர் தொடர்ந்து மேற்கொண்டிருக்கலாமே, ஏன் ஒரு நாள்?

மனித சங்கிலி போராட்டத்தை ஆரம்பித்தது. யார் கலைஞர், முழுநேரமும் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கலாம் தானே. (மழை வந்ததினாலேயே காரை விட்டு இறங்கவில்லை)

யாருக்கிட்ட, பெய் பிரசாரங்கள் தேவையில்லை. பார்ப்போம் 16ஆம் திகதி, அதற்கு பின்னர் இலங்கை தொடர்பாக பேச்சு அவர் வார்த்தையிலாவது வருமா?

Wednesday 13 May 2009

நடிகர் திலகம் பதவி சூப்பர்!


உலகில் மிக சிறந்த நடிகர் என்ற பட்டத்தை வென்ற தமிழக முதல்வர் மு.கருணாநிதிக்கு என் வாழ்த்துக்கள். அவரை வாழ்த்துவதை விட சுப்பர் ஸ்டார் ரஜனி காந்தை வாழ்த்த வேண்டும்.

தனது சுப்பர் ஸ்டார் பதவியையே முதல்வருக்கு வழங்குவதாக அறிவித்துள்ளராமே. ரஜனியின் இந்த அறிவித்தலை தொடர்ந்து அனைத்து சினிமா உலகமே தமது பட்டங்களை கருணாநிதிக்கு வழங்க தீர்மானித்துள்ளது.

நேற்றைய தினம் புலோக் ஒன்றில், நான் இப்படியான ஒரு செய்தியை வாசித்து நாள் முழுவதும் ஒரு சிரிப்பு தான். வீட்டிலும் சொல்லி சிரித்து கொண்டே இருந்தேன்.

ஏன் கருணாநிதி இப்படி ஒரு நாடகத்தை இப்போது நடிக்கின்றார். அரசியலா? உண்மையாகவா?

நிச்சயமாக இது உண்மையில்லை என தான் கூற முடியும். அரசியலில் ஒரு பக்கம் தான் இது.

சரியாக தேர்தல் நெருங்கிய போது தனக்கு சுகமில்லை என சொல்லி வைத்தியசாலையில் தானே சென்று சேர்ந்து கொண்டுள்ளார். அதை தொடர்ந்து அவரை பார்க்க இந்திய பிரதமர் உள்ளிட்ட மேலும் பல முக்கியஸ்தர்கள் தமிழகத்திற்கு வந்துள்ளனர்.

இது தான் அரசியலின் ஒரு விளையாட்டு, பிரதமரின் தமிழக விஜயத்தின் பின்னர் தனக்கு வெற்றி கிடைக்கும் என்ற ஒரு அவா!

தமிழர்களுக்காக உண்ணாவிரதம் இருக்கின்றாராம். ஏ.சியில். சுப்பர் நடிகர். இப்படியெல்லாம் யாரை ஏமாற்றுகின்றார். தன்னை தானே ஏமாற்றி கொள்கின்றார்.

இந்த வயதிலும் தனக்கு அரசியல் தேவையா? நடக்கவே முடியவில்லை. நடிக்கின்றார். இது பதவியின் மீதுள்ள மோகம். யாரை விட்டது பதவியின் மீதுள்ள ஆசை. இனிவரும் காலங்களில் நிச்சயமாக ஈழத்தை பற்றிய பேச்சையே முதல்வரின் வாயிலிருந்து கேட்க முடியுமா? பார்ப்போம்.

ஈழத்தின் விடிவு தமிழகத்தின் கையில் தான் என்று கூறுகின்றனர். முதலில் தமிழகத்தின் விடிவு யார் கையில். இன்று முடிவு. (தேர்தலில் மூலம்)

தேர்தலில் கிடைக்கும் முடிவின் பின்னர் தான் யார்? எப்படி? எதற்கு? ஏன்? என பார்க்க முடியும்.

பொறுத்திருப்போம். முதல்வரின் நடிப்பு நீடிக்குமா? ரஜனி தனது சுப்பர் ஸ்டார் பதவியை வழங்கி விடுவாரா?

சுப்பர் ஸ்டார் பதவியை விட நடிகர் திலகம் பதவி முதல்வருக்கு சூப்பர்!

Sunday 10 May 2009

என் அன்னைக்கு என் உறுதிமொழி!


அன்னையர் தினம் இது எம்மை பெற்று, எமது இம்சைகளை தாங்கி எம்மை வளர்த்த எமது தாயிற்காக கொண்டாடப்படும் ஒரு விசேட தினம்.

இப்படிப்பட்ட ஒரு தினம் இருக்காது வருடத்தில் அனைத்து நாட்களும் அன்னையர் தினமாக இருக்க வேண்டும். அப்போது தான் நாம் அன்னைக்கு உண்மையான மதிப்பை வழங்க முடியும்.

அன்னை என்பவள் நாம் பிறந்த நாள் முதல் எம்மால் சில இன்பங்கள் பல கஷ்டங்களை அனுபவித்து எம்மை வளர்க்கின்றால் எமது பாடசாலை பருவத்தில், பாடசாலை பரும் முடிவடைந்த பின்னராவது பல இன்பங்களையும், கஷ்டங்கள் அற்ற வாழ்க்கையையும் நாம் எமது அன்னைக்கு வழங்க வேண்டியது அவசியம்.

10 மாதங்கள் தன் உயிராக எம் உயிரை பாதுகாத்து, நாம் பிறந்த பின்னரும் அதேபோல் தன் உயிராய் எம்மை வளர்க்கின்றவள் என்றால் அன்னையை தவிர வேறு யார்?

ஒவ்வொரு நாளும் எமது அன்னையில் முகத்தில் புன்னகையை பார்க்க வேண்டும். கண்களில் கண்ணீரை பார்க்க வேண்டும். (ஆனந்த கண்ணீரை)

ஒருவன் எத்தனை சாதனைகளை படைத்தாலும் அந்த சாதனைக்கு உரிமையாளர் நிச்சயமாக அவன் அல்ல. உன் தாய் தான்!

நீ படைக்கும் சாதனைக்கு வழியை அமைத்து கொடுத்தவள் அவள்.

அன்னைக்கு வாழ்க்கையில் எத்தனை சோதனை, எத்தனை வேதனை, எத்தனை யோசனை அனைத்தும் தமது பிள்ளைகளை நினைத்து. தவிர வேறு எதை நினைத்து.

நானும் எனது தாய்க்கு பல கஷ்டங்களை கொடுத்துள்ளேன். ஏன் தற்போது கூட என் அம்மா என்னை நினைத்து கொண்டே தான் இருக்கின்றாள். காரணம் நான்.

இன்றும் என்னுடன் தொலைபேசியில் பேசும் போது எத்தனை ஆலோசணை.

எனக்கு வழங்கும் ஆலோசணைகளை போல நிச்சயமாக என் சகோதரர்கள் இருவருக்கும் ஆலோசணை வழங்கியதில்லை.

என்னை பொறுத்தவரை நான் இன்றும் எனது தாய்க்கு கஷ்டங்களை கொடுத்து வருகின்றேன் போல.

தேவையில்லை அம்மா, இனிவரும் காலங்களில் என்னை பற்றி யோசிக்க வேண்டாம். நான் நானாக தான் இருப்பேன்.

இதனை அன்னையர் தினமான இன்று (10.05.2009) நான் உங்களிடம் கூறுகிறேன். எழுத்து வடிவில்.