Tuesday 10 March 2009

யூடியூபில் மீண்டும் பிரச்சினை!


வீடியோக்களை பகிர்ந்து கொள்ளும் பொருட்டு கூகிளினால் அறிமுகப்படுத்தப்பட்டு மிக பிரச்சித்திப்பெற்ற இணையத்தளம் தான் யூடியூப்.

இது உலகின் இணையத்தள வரலாற்றை மாற்றிய ஒரு இணையத்தளம் என்று கூறினால் அது மிகையாகாது!

இதன்மூலம், வீடியோ கோப்புக்களை பரிமாற்றிக் கொள்வதோடு, எவர் வேண்டுமானாலும் அதிலுள்ள வீடியோ கோப்புக்களை பார்க்க முடியும்!

இவ்வாறு அறிமுகப்படுத்தப்பட்ட யூடியூபினால், அறிமுகப்படுத்தப்பட்ட காலத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றி மறைந்தமை குறிப்பிடத்தக்கது.

உதாரணமாக சிறுவர்கள் பார்க்க கூடாத தடை செய்யப்பட்ட வீடியோக்கள் இதன்மூலம் பரிமாற்றப்பட்டதுடன், அதனை அனைவரும் பார்க்க கூடியதாய் அமைந்திருந்தது யாரும் அறிந்ததே!

பின்னர் இவ்வாறான கோப்புக்களை பார்வையிட வேண்டும் என்றால், கட்டாயமாக பதிவு செய்தே பார்க்க வேண்டும் என யூடியூப் நிறுவனம் அதில் மாற்றத்தை ஏற்படுத்தியது.

தற்போதும் மீண்டும் அதில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றி மறைகின்றன.

இவ்வாறு பங்களாதேஷ் நாட்டிற்கு எதிரான வீடியோ கோப்பொன்று கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டுள்ளமையினால் அந்த நாட்டில் யூடியூப் தடைசெய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர், பங்களாதேஷ் எல்லை பாதுகாப்பு பிரிவினரிடையே ஏற்பட்ட கலகம் தொடர்பாக அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீகாவும், மூத்த இராணுவ அதிகாரிகளும் நடத்திய இரகசிய கலந்துரையாடலொன்றை யூடியூப் இணையத்தளம் வெளியிட்டுள்ளது.

இதை தொடர்ந்தே குறித்த நாட்டில் யூடியூப் இணையத்தளம் தடை செய்யப்பட்டுள்ளதாக அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது.

இந்த வீடியோ காட்சியானது 40 நிமிடங்களை கொண்டமை குறிப்பிடத்தக்கது.

பங்களாதேஷில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஏற்பட்ட கலகத்தினால் 70திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருந்தனர்.

இந்த வீடியோ கோப்புக்களை பார்வையிட்ட பின்னர் மீண்டும் அந்த நாட்டில் கலகம் தோன்றும் என் அச்சத்தினாலேயே யூடியூப் தடை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

2 comments:

Sinthu said...

அடடா............. நான் இருக்கிற நாட்டைப் பற்றி.. நான் கவலைப் படத் தேவை இல்லை ஏன் என்றால் எண்கள் கல்லூரியில் முதலே இதைத் தடை செய்துவிட்டார்கள்.

Prapa said...

என்ன ஆசிரியரே ! அடிக்கடி பிரச்சனை பார்த்து சரி பண்ண முடியாதா?