Tuesday 3 March 2009

உருவாகிவரும் புதிய சமயம்!


உலகில் பிறக்கின்ற ஒவ்வொருவரையும் நல்வழிபடுத்துவதில் சமயம் முக்கிய இடத்தை வகிக்கின்றது.

இன்று உலகில் ஏற்பட்டுள்ள பல பிரச்சினைகளுக்கு தீர்வாகவும் சமயம் இருக்கின்றது.

மனிதனாக பிறந்த ஒவ்வொருவனும், தனது சமயத்தை கடைபிடிக்க வேண்டியது அவசியம்!

அவ்வாறு கடைபிடிக்காத ஒவ்வொருவரும் நிச்சயம் ஒரு சந்திர்ப்பத்தில் பிழையான வழியை பின்பற்றுவார்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை!

என்ன இவ்வளவு காலமும் வேறு விடயங்களை பற்றி பதிவுகளை வெளியிட்டவன் தீடீரென இப்படி ஒரு பதிவை வெளியிடுகிறான் என்று தானே யோசிக்கிறீர்கள்!

கடந்த கிழமை இலங்கையிலுள்ள இரத்தினபுரி என்ற பிரதேசத்திற்கு சென்றிருந்தேன்.

அங்கு தற்போது ஒரு புதிய சமயம் உருவாகி வருவதாக தகவல்கள் என் காதில் விழுந்ததை கேட்டு அதிர்ச்சி அடைந்துடன், அதனை பற்றி ஆராய்ந்தும் பார்த்தேன்!

இலங்கையில் - இரத்தினபுரி என்ற மாவட்டத்தின் பெரும்பாலான பிரதேசங்கள் தமிழர்கள் வாழும் பிரதேசம் என்பது குறிப்பிடத்தக்க விடயம்!

இங்கு தற்போது ஒரு சமயம்! என்ன சமயம் தெரியுமா? கடவுள் இல்லை என்ற சமயம்! ஒருவன் பிறந்து அவன் தனக்கென ஒரு இடத்தை பிடிப்பதற்கு தானே காரணம் என்று கூறும் கூட்டம்!

இவர்கள் தான் பிழையான வழியில் செல்வதை விட மற்றவரையும் தம் வழிக்கு இழுக்கின்றனர்.

இது எப்படி உருவெடுத்தது. என்பதை பற்றி வினவிய போது!

இலங்கையில் நுவரெலிய மாவட்டத்தின் ஹட்டன் நகரிற்கு தமது கல்விக்காக சென்ற இரத்தினபுரியை சேர்ந்த ஒருவர், அங்கு சென்று, அவருக்கு கிடைத்த நண்பர்களின் பிழையான வழிக்காட்டலினால் அவர் இந்த சமயத்தில் வீழ்ந்துள்ளார்!

இப்படி தனது கல்வி நடவடிக்கைகளை முடித்து கொண்டு வந்த அந்த ஒருவர், இங்கு வந்து பலரை உருவாக்கி உள்ளார்.

புதிதாக உருவாகியுள்ள சமயத்தில் தற்போது 125 அங்கத்துவர்கள் இருக்கின்றனர்.

இவர்கள் கூறும் ஒரே கருத்து கடவுள் இல்லை! தான் பெற்ற கல்வி, தனக்கு கிடைத்த வாழ்க்கை, தன்னுள் உள்ள திறமை அனைத்தும் தன்னுடையது என்ற ஆணவத்தை அவர்கள் கொண்டுள்ளனர்.

இப்படி உருவாகியுள்ள இந்த கிருமிகளை ஒழிப்பது எப்படி! இந்த கிருமி தற்போது மிக வேகமாக பரவி வருகின்றது.

இதனை அழிப்பதற்கான நடவடிக்கைகளை நாம் நிச்சயம் எடுக்க வேண்டும். ஆனால் எப்படி அழிப்பது என்று இதுவரை எந்த விதமான யோசனையும் எனக்கு கிடைக்க வில்லை.

இரத்தினபுரி - இறக்குவானை பிரதேசம், சமயம் என்ற அழகை வெளிபடுத்தும் நகரம்!

இந்து, கிரிஸ்தவம், முஸ்லிம் மற்றும் பௌத்தம் ஆகிய அனைத்து மதங்களையும், அந்த மதங்களுக்குரிய புனித ஸ்தலங்களை நகருக்குள் கொண்டுள்ள இடம்!

இங்கு சமயத்திற்கு மரியாதை வழங்கப்படுகிறது. இவ்வாறான இடத்திலும் தற்போது இந்த கிருமி பரவுவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.

சமயம் என்ற சொல் அனைவருக்கும் ஒன்றே! சமயம் என்பது ஒருவனின் மனசாட்சி என்பது தான் உண்மை!

இப்படி உருவாகியுள்ள சமயத்தில் உள்ள அந்த 125 அங்கத்துவர்களுக்கும் நிச்சயம் மனசாட்சி இல்லை என கூறுவதில் எவ்வித சந்தேகமும் இல்லை!

மனிதனாக பிறந்த ஒருவன் நிச்சயம் ஒரு சமயத்தில் இருக்க வேண்டும்! அப்போதே அவனுடைய வாழ்க்கைக்கு இனிப்பு கிடைக்கும்!

இந்த கிருமியை உலகிற்கு பரவ விடாது நாம் அழிப்போம்! உங்களுடைய ஆலோசணைகளை நான் எதிர்பார்க்கின்றேன்! உங்கள் ஆலோசணை எனக்கு தேவை அழிக்க இந்த சமயத்தை!

1 comments:

Vathees Varunan said...

எவரும் எவரையும் நீ உன்னுடைய சமயத்தை பின்பற்ற வேண்டும் என்று வற்புறுத்த முடியாது. ஏனென்றால் சமயத்தை பின்பற்றுவதும் பின்பாற்றாமல் விடுவதும் அவர்களுடைய சொந்த பிரச்சனை.

ஆனாலும் தங்களுடைய சுயநலன்களுக்காக இவ்வாறு
பொய்யான பரபுரைகளின் மூலமும் பணத்தசையையும் காட்டி புதிய சமையங்களை உருவாக்கி ஏமாற்றுவது கண்டிக்க வேண்டிய ஒரு விடையமே.