Monday 2 February 2009

சிரிக்க வைக்கும் எயார் டெல்


இந்திய நிறுவனமான எயார் டெல் கடந்த மாதம் இலங்கையில் தனது பாதத்தை வைத்து தனது பணியை ஆரம்பித்தது.

இலங்கை என்னும் சிறிய தீவில் ஏற்கனவே நான்கு கையடக்க தொலைபேசி நிறுவனங்கள் உள்ள நிலையில் ஐந்தாவதாக எயார் டெல் வந்தமை குறித்து அனைவரும் சந்தோஷப்பட்டனர்.

எயார் டெல் நிறுவனம் இலங்கைக்குவரும் வேளையில் மற்றைய நான்கு நிறுவனங்களும் தலையில் கை வைத்தது அனைவரும் அறிந்த உண்மை.

ரீகோ தனது கட்டணத்தை செக்கன் அடிப்படையில் அறிமுகப்படுத்தியது, அதனை தொடர்ந்து டயலொக் செக்கனுக்கு மாற்றியதுடன், மொபிடல் செக்கன் அடிப்படையிலின்றி கட்டணத்தை குறைத்தது என குறிப்பிடலாம்.

இப்படி எல்லாம் செய்த இலங்கையிலுள்ள கையடக்க தொலைபேசி நிறுவனங்கள், இப்போது தலை நிமிர்ந்து கட்டணத்தை அதிகரித்த வழங்கக் கூடிய சாத்தியக் கூறுகள் தோன்றியுள்ளது.

ஏனெனில், சில பிரதேசங்களில் மாத்திரமே எயார் டெல் தனது வளையமைப்பை வழங்கியுள்ளது.

ஆரம்பிக்கும் போது இது ஓகே. எனினும் வழங்கிய போதே முழு நாட்டிற்கும் வழங்க முடியாதல்லவா!

இருப்பினும் வளையமைப்பு வழங்கப்பட்ட பிரதேசங்களுக்காவது அவர்கள் தமது சேவையை நன்றாக வழங்க வேண்டுமல்லவா!

கொழும்பை எடுத்து கொண்டால், வழங்கியுள்ள வளையமைப்பு மிக மோசமான நிலையிலேயே உள்ளது.

பஸ்ஸில் பயணித்து கொண்டிருக்கும் வேளையில், வீட்டின் உள்ளே சென்றால், கடைகள் உள்ளே சென்றால் மக்கள் கூட்டத்திற்குள் சென்றால் சிக்னல் இல்லாமல் போகின்றது.

இப்படி இருப்பதினால் மற்றைய தொலைபேசி நிறுவனங்களுக்கு இது சாதகமாக அமைந்திருக்கிறது.

இந்தியாவிலுள்ள மிக பெரிய நிறுவனங்களில் ஒன்றான எயார் டெல், ஒரு சிறிய நாட்டில் வந்து இப்படி செய்வது சரியா!

ஆசிய கண்டத்திலேயே தொழிநுட்பத்தில் முன்னிலை வகிப்பதாக கூறப்படுவது இந்தியாவை தான், எனினும் அங்குள்ள நிறுவனமொன்று இப்படி தொழிநுட்பத்தில் பின் தங்கியிருப்பது சரியா?

என்னை பொருத்த வரை தொழிநுட்பத்தில் ஆசியாவில் இலங்கையே முன்னிலை வகிக்கிறது.

மொபிட்டல் அறிமுகப்படுத்திய எச்எஸ்பிஎன் தொழிநுட்பம் மற்றும் டயலொக் வழங்கிய புரோட்பேன்ட் என்பன மிக சிறப்பாகவும் மக்களால் பேசப்பட கூடியதாகவும் இருக்கிறது.
இந்த நிறுவனங்களுக்கு இதனை செய்ய முடியும் என்றால் எயார் டெலுக்கு ஏன் இதனை செய்ய முடியாது.

அறிமுகப்படுத்திய காலப்பகுதியில் எயார் டெல் சிம்மை வாங்க ஆயிரக்கணக்கானோர் நிறுவனத்தின் முன் நின்றதுடன், சிலரிடையே கைகலப்பும் ஏற்பட்டது.

இவ்வாறு எயார் டெல்லை நம்பிய வாடிக்கையாளர்களை கழுத்தை அறுப்பது போலல இருக்கு நிறுவனம் செய்யும் இந்த வேளைகள்.

எயார் டெல் நிறுவனத்திற்கு என்னுடைய செய்தி

வளையமைப்பை விஸ்தரிப்பதை விட வளையமைப்பின் தரத்தை அதிகரிக்கவும்.

ஏனைய போட்டி நிறுவனங்கள் உங்களை பார்த்து சிரிக்கின்றார்கள்.

சிரிக்க வேண்டும் நீங்கள் தான், போட்டி நிறுவனமல்ல.

0 comments: