Tuesday 13 January 2009

இந்தியர் வென்ற கோல்டன் குளோப் விருது.


ஹொலிவூட் 'ஸ்வரம் டோக் மில்லியனர்' திரைப்படத்திற்கு இசை அமைத்தமைக்காக அதிகௌரவ விருதான 'கோல்டன் குளோப்' விருதை இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் வென்றெடுத்துள்ளார்.

கோல்டன் குளோப் விருதை வென்ற முதலாவது இந்தியர் என்ற பெருமையை ஏ.ஆர். ரஹ்மான் பெற்றிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

ஸ்லாம் டோக் திரைப்படம் பிரித்தானிய இயக்குனர் டான்னி போய்லேயின் இயக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

கோல்டன் குளோப் விருது வழங்கல் வைபவத்தில் சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குனர், சிறந்த இசையமைப்பாளர், சிறந்த காட்சியமைப்பு உள்ளடங்கலாக நான்கு வெற்றிக் கேடயங்களை சுவீகரித்துக் கொண்டுள்ளது.

கோல்டன் குளோப் விருதானது ஒஸ்கார் விருது தெரிவுகளுக்கான குறிகாட்டியாகக் கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் இத்திரைப்படத்தில் பிரபல பொலிவுட் நடிகர்களான அனில் கபூர், இர்பான் கான் ஆகியோரும் நடித்துள்ளனர். அதேவேளை 'ஸலாம் டோக் மில்லியனர்' திரைப்படம் ஜனவரி 9ஆம் திகதி கலிபோர்னியாவில் நடைபெற்ற கிரிட்டிக்ஸ் சொய்ஸ் விருது வழங்கும் வைபவத்தில் சிறந்த திரைப்படம், சிறந்த இசையமைப்பாளர் உள்ளடங்கலாக 5 விருதுகளை வென்றெடுத்துள்ளது.

இதேவேளை, கடந்த 6ஆம் திகதி தனது பிறந்தநாளை கொண்டாடிய ஏ.ஆர். ரஹ்மான், தமது 43 ஆவது வயதை பூர்த்தி செய்துள்ளார்.

1966ஆம் ஆண்டு ஜனவரி 6ஆம் திகதி பிறந்த ஏ.ஆர். ரஹ்மான், அவரது இயற்பெயர் ஏ.எஸ். திலிப் குமார் என்பது தெரிவிக்கப்படுகிறது.

1992ஆம் மணிரத்னத்தின் ரோஜா திரைபடத்தின் மூலம் திரை உலகிற்குள் நுழைந்த ஏ.ஆர். ரஹ்மான், இதுவரை 100 மில்லியன் பாடல்களுக்கு மேல் இசையமைத்துள்ளதாகவும், அதில் 200 மில்லியனுக்கு அதிகமாக காசட்களை விற்பனை செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இவர் உலகிலுள்ள பல்வேறு மொழி திரைப்படங்களில் தனது இசையினை கொடுத்துள்ளார்.

இந்தியாவில் மட்டுமின்றி பிற நாடுகளிலும், குறிப்பாக அமெரிக்க மற்றும் சீனா ஆகிய நாடுகளில் உருவாக்கப்பட்ட திரைப்படங்களில் இசையமைத்துள்ளார்.

இதுமட்டுமின்றி, ஏ.ஆர். ரஹ்மான் இந்திய உட்பட இன்னும் பல நாடுகளில் பல நற்பணி செயல்களை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இவரது இசை உலகம் இன்னும் நீண்ட நாட்கள் தொடர வேண்டும் என வாழ்த்துவதோடு, அவரது நற்பணிகளும் சிறப்புற நடைபெற எனது வாழ்த்துக்கள்.






0 comments: