Sunday, 23 November 2008

மனிதனின் மூளை கணனி.


மனித மூளையை போல் இயங்கும் கணனி ஒன்றை தயாரிக்கும் முயற்சியில் அமெரிக்கா இறங்கியுள்ளது.

அமெரிக்காவின் கணனி நிறுவனமான ஐ.பி.எம் இதனை திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்காக அமெரிக்காவின் பாதுகாப்புத்துறை கூடுதலான உதவிகளை வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவின் பாதுகாப்புத்துறையின் பங்காக 25 ஆயிரம் கோடி ரூபா முதற்கட்ட பணிக்காக வழங்கப்பட்டுள்ளது.

இந்த மனித கணனியை உருவாக்கும் முயற்சியில் ஐ.பி.எம் மற்றும் அமெரிக்காவிலுள்ள 5 பல்கலைகழக பேராசிரியர்கள் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்காக மூளை நரம்பியல் மற்றும் மனோதத்துவ டாக்டர்கள் நியமிக்கப்பட்டு இந்த மனித மூளையை போல் இயங்கும் கணனியை உருவாக்குகின்றனர்.

மனிதனின் மூளை மற்றும் செல்கள் எப்படி செயற்படும் எனவும் நரம்புகள் எப்படி இயங்கும் என்பது தொடர்பான முழுமையான ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த முயற்சி நிறைவடைய இன்னும் பல ஆண்டுகள் எதிர்பார்க்க வேண்டும் என அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

எதை செய்தாலும் மனிதனை போல் ஆகுமா?

மனிதனின் தைரியம்....... மனிதனின் செயற்பாடு.... முடியாதில்ல!

அந்த கணனியை கூட உருவாக்குபவன் மனிதன் தானே!

Friday, 14 November 2008

இந்தியா இன்று சந்திரனில் கொடி நாட்டுகிறது. இலங்கை கிளிநொச்சியில் கொடி நாட்டப் போகிறதாம்.

Thursday, 13 November 2008

4300 ஆண்டுகள் பழைமையான பிரமிட்.


எகிப்து சக்காரா பிராந்தியத்தில் சுமார் 4300 ஆண்டுகள் பழைமை வாய்ந்த பிரமிட் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த பிரமிட்டானது பண்டைய எகிப்திய 6ஆம் இராஜியத்தின் ஸ்தாபகரான மன்னர் தெதியின் தாயாரான மகாராணியார் ஸெஷிஷெட்டிற்கு உரியதென அகழ்வாவாய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றன.

தென் கெய்ரோ நகரிலிருந்து 12 மைல் தொலைவில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த பிரமிட் தொடர்பான தகவல்கள் கடந்த செவ்வாய்கிழமை 11.11.2008ஆம் திகதி அறிவிக்கப்பட்டன.

16 அடி உயரமான இந்த பிரமிட்டானது களிமண்ணால் மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Thursday, 6 November 2008

இலங்கைக்கு கிடைத்த சாட்டையடி....


இலங்கையில் சிறுபாண்மையினரை மதிக்காது, சிறுபாண்மையினரை பெரும்பாண்மையிமனர் இன்றும் மட்டம் தட்டி வருகின்றனர்.

இலங்கையில் தமிழனுக்கு என்ன உரிமை உள்ளது? தலைமைத்துவம் ஒன்றிற்கு கூட தமிழனுக்கு உரிமை இல்லை.

உதாரணத்திற்கு கிரிக்கெட் -
இலங்கை அணியின் நட்சத்திர சூழல்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன்.

இலங்கை அணியில் பல வருடங்களாக விளையாடி வருகின்றார்.உலக நாடுகளே அவரை முதற்தர பந்து வீச்சாளர் பட்டியலில் சேர்த்துள்ளது.

ஏன், இலங்கை அணி பல வெற்றிகளை பெற்றுக்கொள்ள இவர் காரணமாக இருந்தமை நாம் அனைவரும் அறிந்த விடயமே!. இலங்கை அணி இவ்வளவு காலம் நிலையாக விளையாடி வருவதற்கு இவர் ஒரு முக்கிய காரணம் என கூட கூறலாம்.

இந்த காரணங்களை மட்டுமே காட்டியே, இவருக்கு இலங்கை அணியின் தலைமைத் துவத்தை வழங்க முடியும்.

ஆனால், இலங்கையில் செய்ய மாட்டார்கள். காரணம் சிறுபாண்மை என்ற ஒன்று. திறமைக்கு இங்கு இடமில்லை. மொழிக்கு, இனத்திற்கு தான் இலங்கையில் முன்னுரிமை கொடுக்கப்படுகிறது.

முரளிதரனின் வாழ்க்கை சாதாரண பந்துவீச்சாளர் மட்டும் தான்! அவர் பெற்ற பதக்கங்கள் மற்றும் வெற்றி கிண்ணங்கள் அனைத்தும் வீட்டின் அழகிற்கு மட்டும் என்பது சொல்லவே தேவையில்லை.

இலங்கையில் விளையாட்டு அப்படி இருக்க, அரசியலை நோக்கினால்,

மறைந்த முன்னாள் வெளிவிவகார அமைச்சர், லக்ஷ்மன் கதிர்காமர். இலங்கை அரசியலில் பல வெற்றி கொடிகளை நாட்டிய மனிதன்.

இலங்கைக்கு உலக நாடுகளின் உதவிகள் கிடைக்க முக்கிய காரணமாக இருந்த ஒரே மனிதர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமா? உலக நாடுகளின் அறிமுகம் இலங்கைக்கு கிடைக்க முக்கிய காரணம் இவர் என்பதை யாருமே மறுக்க முடியாது.

அவர் உயிரோடு இருக்கும் போது அவரிடமிருந்து அனைத்து உதவிகளையும் பெற்று, இறுதியில் கைகழுவி விட்டார்கள் கதிர்காமரை.

அடுத்து அரசியலின் உள்புறம்!
1977ஆம் ஆண்டு, தற்போது உள்ள அரசியல் யாப்பை வெளியிட்ட ஆண்டு.

இதன்படி, இலங்கையில் ஜனாதிபதியாக போட்டியிடும் ஒருவர் கட்டாயம் பௌத்த மதத்தை தழுவி இருக்க வேண்டும் என்பது இன்றியாமையாததாக அதல் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த சட்டம் 1977ஆம் ஆண்டு யாப்பில்; உறுதியாக கூறப்பட்டுள்ளது.

இலங்கையில் தமிழனுக்கு சமவுரிமை இல்லை என்பதை அந்த யாப்பின் மூலமே தெரியவருகின்றது.

பெரும்பாண்மையினர் எவ்வளவு செய்தாலும், தமிழன் அசையமாட்டான், இலங்கையில் வாழும் அனைத்து சிறுபாண்மையினருக்கு சமவுரிமை வழங்க வேண்டும் என கூறியே இன்றும் இலங்கையில் யுத்தம் நீடிக்கிறது.

இந்த நிலையில், இலங்கைக்கு வந்தது ஆப்பு.......

04.11.2008ஆம் திகதி நடைபெற்ற அமெரிக்க தேர்தல்.. இலங்கை அரசுக்கு கிடைத்தது சாட்டையடி...

எப்படி இந்த சாட்டையடி இலங்கைக்கு கிடைத்தது.. என்று தான் நினைக்கிறீர்கள்? அது தான் வருகிறேன்.
04.11.2008ஆம் திகதி நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களான ஜோன் மெக்கேயின் மற்றும் பராக் ஒபாமா.

முதலில் ஜோன் மெக்கேயினின் கொள்கையில் முக்கியமான ஒன்றை நான் இதற்கு எடுத்துக் கொள்கிறேன்.

“உலக நாடுகளில் ஏற்பட்டுவரும் பிரச்சினைகளுக்கு தீர்வு யுத்தம்”

இந்த கொள்ளையை கொண்டவர் ஜோன் மெகேயின்.....

“ஆயதத்தை கையில் எடுத்தவன், ஆயதத்தினாலேயே தனது உயிரை இழப்பான்” என்பது உலகறிந்த உண்மை.

அதுபோல தான் மெகேயின் யுத்தத்தை காட்டி அமெரிக்காவின் ஆட்சியை கைப்பற்ற நினைத்தார்.

முடியுமா? மக்கள் உஷார் ஆகிவிட்டார்கள்!

இவர் ஆட்சிக்கு வந்திருந்தால், நிச்சயம் உலக நாடுகளில் ஏற்பட்டு உள்ள பிரச்சினைகளுக்கு யுத்தத்தின் மூலமே தீர்வு காண முற்பட்டிருப்பார்.

அது இறுதி வரை சாத்தியமாகியிருக்காது.

அடுத்தது, கருப்பினத்தவர், அமெரிக்காவின் சிறுபாண்மையினரான பராக் ஒபாமா....

இவரின் கொள்கை சற்று நோக்குவோம்..

“உலகில் எவ்வளவு பிரச்சினை வந்தாலும், அந்த பிரச்சினையை பேச்சு வார்த்தையின் மூலம் முடிவுக்கு கொண்டு வருதல்” தான் பராக் ஒபாமாவின் கொள்கை.

இவர் ஆயுதம் ஏந்திய ஆட்சியை விரும்பவில்லை, பேச்சு வார்த்தை என்ற ஆயுதத்தை ஏந்தினார். இன்று உலக நாயகனானார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட ஜோன் மெக்கேயின் பெரும்பாண்மையினர், ஆனால் பராக் ஒபாமா சிறுபாண்மையினர், அது மட்டுமா? கருப்பினத்தவர். அப்படி இருந்தும் இவர்தான் ஆட்சிக்கு வரவேண்டும். என்ற முறை அமெரிக்காவில் இல்லை. இலங்கையில் உள்ளது. அமெரிக்காவில் ஒரே தகுதி. ஜனாதிபதியாகும் ஒருவர் கட்டாயம் அமெரிக்கராக இருக்க வேண்டும். அது சரியான தகுதி தானே!

இப்படியே இலங்கையை நோக்குவோம்.

இலங்கையில் தற்போது ஆட்சியில் உள்ள அரசு யுத்ததினாலேயே நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு தீர்வு காணலாம் என்ற கொள்கையை கொண்டுள்ளது.

இவ்வாறான கொள்கையை கொண்டதும், நான் ஆரம்பத்தில் கூறியது போல, சிறுபாண்மையினரை வெறுப்பதுமான கொள்கையை தற்போதை இலங்கை அரசு கொண்டுள்ளது.

இப்படிப்பட்ட அரசாங்கம், உலக வல்லரசு நாடான அமெரிக்க தேர்தலில் யாருக்கு ஆதரவு தெரிவித்திருக்கும்..

நிச்சயம் ஜோன் மெக்கேயினுக்கு தான்.

ஆனால், ஆதரவு தெரிவித்த மெக்கேயினின் ஆட்சி வரவில்லை, சமாதான ஆட்சி வந்துள்ளது.

இது தான் இலங்கை அரசுக்கு கிடைத்துள்ள சாட்டையடி.....

தற்போது அமெரிக்காவின் ஆட்சிக்கு வந்துள்ள ஒபாமா, உலக நாடுகளில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு பேச்சு வார்த்தை மூலம் முடிவொன்றை எடுப்பார் என்பது நிச்சயம்.

அந்த முடிவு இலங்கைக்கு வரும் போது இலங்கை என்ன செய்யும்?

பதில் தருகிறேன்..

போரை நிறுத்த வேண்டும். பேச்சு வார்த்தையில் ஈடுபட வேண்டும். அப்போது. தமிழனின் ஆட்சி. அமெரிக்காவில் இன்று ஏற்பட்டுள்ள நிலை இலங்கைக்கு வர இன்னும் சில நாட்களே உள்ளது.

அப்போது இலங்கை அரசு என்ன செய்யும்? ஆண்டவனுக்கு தான் தெரியும் இதற்கான இதற்கான பதில்....

Tuesday, 4 November 2008

....மூன்று கால்களில் பிறந்த குழந்தை....

...மூன்று கால்களை கொண்ட குழந்தை இலங்கையில்....


அம்பாறை – அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் மூன்று கால்களைக் கொண்ட குழந்தை ஒன்று பிறந்துள்ளது.

இந்தக் குழந்தை நேற்றிரவு பிறந்துள்ளதாக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி எம்.எம். பாயிஸ் தெரிவித்தார்.

தாய் கருத்தரித்திருந்த போது, இரட்டைக் குழந்தையாக தென்பட்டதாகவும், அது நாட்கள் செல்லச் செல்ல ஒரு குழந்தையாக மாறியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, 3 கால்களுடன் பிறந்த குழந்தை நலமாகவுள்ளதுடன், இந்த குழந்தை குறித்த தாய்க்கு முதற் குழந்தை எனவும் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி கூறினார்.

அத்துடன், குழந்தையை மேலதிக மருத்துவ பரிசோதனைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி எம்.எம். பாயிஸ் குறிப்பிட்டார்.

Monday, 3 November 2008

மனிதனின் ஆசை இவ்வளவு தான்....


ஈராக்கின் முன்னாள் ஜனாதிபதி சதாம் உசைன் மிக ஆடம்பரமாக ஈராக்கில் வாழ்ந்து வந்தது அனைவரும் அறிந்த விடயமே.

ஆனால், எப்படிப்பட்ட ஆரம்பரங்களை அனுபவித்தார் தெரியுமா?

கேள்விப்பட்டது மட்டும் தான்.....ஆனால்.......பார்க்க வில்லை......நானும் தான் பார்க்கல.....

ஆனால் கேள்விப்பட்டன்......

எப்படி தெரியுமா?

பல சொகுசு வீடுகள்..... பல வாகனங்கள்......என பல சொகுசு வாழ்க்கை......

அதில் ஒன்று தான் செகுசு கப்பல்......

சாதம் உசைன் ஆட்சியிலிருந்த போது டென்மார்க் நிறுவனமொன்று அவருக்கு சொகுசு கப்பல் ஒன்றை வழங்கியிருந்தது.

இந்த கப்பல் 270 அடி நீளம், கப்பலில் நீச்சல் குளம், சினிமா தியேட்டர், ஹெலிகொப்டர் தளம், தங்ககட்டில் படுக்கை அறை, தங்கத்திலான குளியலறை என இன்னும் பல வசதிகளுடன் இவருக்கு இந்த கப்பலை வழங்கியிருந்து.

ஆனால், அவர் அந்த கப்பலில் ஏறி பார்த்ததில்லையாம்... கப்பலின் மேல் உள்ள ஆசையை கூட நிறைவேற்றிக் கொள்ளமுடிய வில்லை...

காரணம் தான்...அரசியல் எதிரிகள்......கப்பலில் ஏறினால்... எதிரிகள் தாக்குதல் நடத்திவிட்டால் என்ற அச்சம்....

சவூதி அரேபியாவில் உள்ள துறைமுகம் ஒன்றில் பல வருடங்கள் இந்த கப்பல் ஒரே இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இது இப்படி இருக்கும் போது, ஜோர்தானில் உள்ள தனியார் நிறுவனமொன்று அந்த கப்பலுக்கு உரிமை கோர தொடங்கி விட்டது.

சதான் உசைன் குறித்த கப்பலை தமக்கு கொடுத்து விட்டதாக கூறி பிரான்ஸ் நாட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

ஆனால், அந்த கப்பல் ஈராக் நாட்டுக்கு சொந்தமானதென தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இப்போது அந்த கப்பலை அந்த நாட்டு அரசாங்கத்தினால் ஏலம் விடப்பட்டுள்ளது.

எவ்வளவாக இருக்கும் ஏலத் தொகை?

188 கோடி ரூபா...................

முடியுமா நம்மல? பார்ப்போம்....யாருக்கு சொந்தமாகுனு?

Sunday, 2 November 2008

......சுனாமியின் ஆவேச பிறப்பு 600 அல்லது 700 ஆண்டுகளில்.......


சுனாமி மீண்டும் எப்போது ஏற்படும் என தற்போது ஆராயப்பட்டு வருகின்றன.

2004ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதி காலை 9.20, நினைத்தாலே இன்றும் கண்களில் கண்ணீர் ஆறாக பெருகும். நினைத்தாலே உடல் நடுங்கும்.

பல்லாயிர கணக்கான ஆசைகளுடன் வாழ்ந்தவர்கள் அனைவரையும், ஒரு நொடியில் பல்லாயிர பேரை நினைத்து அழ வைத்த நாள் 2004.12.26ஆம் திகதி.

வேண்டாம், இனி அப்படிப்பட்ட ஒரு நாள்.

இப்படிப்பட்ட ஒரு நாள் உலகிற்கு தேவையில்லை என்ற நல்ல எண்ணத்துடன் தான் தற்போது ஆராய்ச்சியாளர்கள் எப்போது சுனாதி மீண்டும் உருவெடுக்கும் என ஆராய தொடங்கி விட்டார்கள்.

இதற்காக இந்தோனேஷிய புவியியல் நிபுணர்களான ஆர்க் சென்ட் மாநில பல்கலைகழகத்தைச் சேர்ந்த முன்னாள் புவியியல் ஆராய்ச்சியாளர் கரீம் மோனாக் என்பவர் தலைமையில் ஆராயப்பட்டு வருகிறது.

இதன்மூலம் கண்டு பிடிக்கப்பட்ட அறிக்கையின் படி, 400 ஆண்டுகளுக்கு பின்னர் தான் 2004ஆம் ஆண்டு சுனாமி பிறந்துள்ளது.

தற்போது புவி வெப்பமடைதல் மற்றும் சுற்று சூழல் ஆகியவற்றை வைத்து இந்த ஆராய்ச்சியாளர்கள் தமது அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

இந்த அறிக்கையின் படி, இன்னும் 600 அல்லது 700 ஆண்டுகளுக்கு பின்னர் தான் மீண்டும் சுனாமி பிறப்பெடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

“உலகின் சாபம் அழிவுகள் நிகழ வேண்டும் என்பது, இதை யாராலும் நிறுத்த முடியாது, எனினும் அழிவிலிருந்து எம்மை பாதுகாக்க முடியும்” அதற்கான ஆராய்ச்சியின் முடிவுதான் இது.

இந்த ஆராய்ச்சி முடிவுகளை வரப்போகும் எமது எதிர்கால சந்ததியினருக்கு செல்லி வளர்க்க வேண்டும்.

அவ்வாறு செல்லி வளர்ப்போமானால் அவர்களின் பாதுகாப்பை அவர்கள் தேடிக் கொள்வார்கள்.