Wednesday 22 October 2008

இந்தியாவின் சந்திரன் கனவு நினைவாகியது.


இந்தியாவினால் நிர்மானிக்கப்பட்ட சந்திராயன்-1 என்ற விண்கலம் விண்ணுக்கு வெற்றிகரமாக ஏவப்பட்டுள்ளது.

இந்த விண்கலத்தை இன்று காலை 6.22 அளவில் இந்தியா ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள சத்தீஸ் தவான் விண்வெளி ஏவுதளத்திலிருந்து செலுத்தப்பட்டது.

இந்த விண்கலம் 4 கட்டங்களாக பிரிந்து, இதில் இறுதி கட்டத்தில் விண்கலம் தனது புவிப் பாதையை வெற்றிகரமாக அடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இன்றைய தினம் இந்திய விண்வெளி வரலாற்றில் மிகச் சிறப்புமிக்க தினம் என்றும், இன்று ஆரம்பித்த இந்த பயணம் விண்வெளி பயணத்தில் மிக முக்கியமான முயற்சி என்றும் இதன் போது உரையாற்றிய விஞ்ஞானி மாதவன் நாயர் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, பெங்களூர் - பைலாலு கட்டுப்பாட்டு மையத்தின் உதவியுடன் சந்திராயன்-1 விண்கலம் நிலவுக்கு அருகே கொண்டு செல்லப்பட்டு, அதன் புவிவட்டப் பாதையில் நிறுத்தப்படுவதாகவும் இதற்கு 15 நாட்கள் எடுக்கும் எனவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.
சந்திராயன் - 1 விண்கலம் வெற்றிகரமாக அனுப்பி வைக்கப்பட்டதன் மூலம் நிலவுக்கு ஆளில்லா விண்கலம் அனுப்பிய 4ஆவது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தியாவினால் அனுப்பி வைக்கப்பட்ட இந்த விண்கலத்தில் அதி நவீன வீடியோ கமராக்கள் பொறுப்பட்டுள்ளதாகவும், இந்த வீடியோ கமராக்கள் மூலம் சந்திரனின் அனைத்து பாகங்களும் படமாகப்பட்டு புமிக்கு அனுப்பி வைக்கப்படுமெனவும் இந்திய விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த விண்கலம் 3500 கோடி ரூபா செலவில் அனுப்பி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்திய எதிர்காலத்தில் 10 ஆயிரம் கோடி ரூபா செலவில் ஆளுடனான விண்கலம் ஒன்றை ஏவ திட்டமிட்டுள்ளதான இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

1 comments:

இறக்குவானை நிர்ஷன் said...

இறக்குவானையிலிருந்து மற்றுமொரு அன்புச்சகோதரன் வலையில் இணைவதில் பெருமை.
இனியென்ன கலக்குங்க.

வாழ்த்துக்கள் தம்பி.